தேடத் தேட கிடைத்த கிரானைட் கற்களின் மதிப்பு ரூ1800 கோடி- மதுரை ஆட்சியர் தகவல்

By Mathi
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இதுவரை கிடைத்த கிரானைட் கற்களின் மதிப்பு ரூ1800 கோடியாம்!
சென்னை: மதுரை மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக குவாரிகளில் நடத்தப்பட்ட சோதனையின் மூலம் கைப்பற்றப்பட்ட கிரானைட் கற்களின் மதிப்பு ரூ1800 கோடி என்றும் இன்னமும் 60 விழுக்காடு கற்களின் மதிப்பீடு பணி நடைபெற்று வருவதாகவும் மதுரை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் மேலூர் சுற்றுவட்டாரத்தில் சட்டவிரோத கிரானைட் குவாரிகள் மூலம் பல ஆயிரம் கோடி அரசுக்கு இழப்பை ஏற்படுத்தி வந்தது தமிழகத்தை உலுக்கியுள்ளது. இதைத் தொடர்ந்து பல கிரானைட் குவாரிகளுக்கு சீல் வைக்கப்பட்டு அதன் உரிமையாளர்கள், உடந்தையாக இருந்தவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்த வழக்கில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி உள்ளிட்டோர் தலைமறைவாக இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் மதுரை ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா தமிழக அரசுக்கு அறிக்கை ஒன்றை அனுப்பியிருக்கிறார். அந்த அறிக்கையில், இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட கிரானைட் கற்களின் மதிப்பு ரூ.1800 கோடி என்றும், கிரானைட்களை மதிப்பிடும் பணி 40 விழுக்காடு முடிந்துள்ளதாகவும், மேற்கொண்டு பணிகள் நடந்து வருவதாகவும் குறுப்பிட்டுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: granite மதுரை madurai
English summary

Madurai Collector send status report on granite scam | இதுவரை கிடைத்த கிரானைட் கற்களின் மதிப்பு ரூ1800 கோடியாம்!

Madurai district Collector had sent a status report on granite sacam to the Tamilnadu Government.
Story first published: Tuesday, August 28, 2012, 12:13 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X