சொதப்பல் ஆட்டம் காட்டும் சச்சினை ஓய்வு பெறாமல் தடுப்பது விளம்பர ஒப்பந்தங்கள்?

By Mathi
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எம்.பி. சச்சின் ஓய்வு பெறாமல் இருப்பதன் 'ஏடாகூட' பின்னணி என்ன?
டெல்லி: நியூசிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் போட்டிகளில் சொதப்பல் ஆட்டம் காண்பித்த எம்.பி. சச்சின் ஏன் இன்னும் ஓய்வு பெறவில்லை என்ற கேள்வி பலராலும் எழுப்பப்பட்டாலும் அப்படியெல்லாம் நான் ஒன்றும் ஓய்வு பெற்றுவிடமாட்டேன் என சச்சின் அடம்பிடித்துதான் வருகிறார். இந்த அடம்பிடித்தலுக்கு காரணமாக சொல்லப்படுவது என்னவெனில், விளம்பர நிறுவனங்களுடன் சச்சின் மேற்கொண்டிருக்கும் ஒப்பந்தங்கள்தான் காரணமாம்!

சச்சின் விளம்பர நிறுவனங்களுடன் செய்திருக்கும் ஒப்பந்தங்கள் வரும் 2013ஆம் ஆண்டு வரை இருக்கின்றன. சச்சின் ஓய்வு பெறுவரா? இல்லையா? என்ற குழப்பமான நிலையில் அவருடனான ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்யவும் சில நிறுவனங்கள் தயாராக இருக்கின்றன.

 

இதுபற்றி டோஷிபா நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், சச்சினின் ஓய்வு நிச்சயமாக அனைத்து விளம்பர நிறுவனங்களுக்கும் கவலை அளிக்கக் கூடிய ஒன்றுதான். அப்படி அவர் ஓய்வு பெற்றுவிட்டால் நிச்சயமாக விளம்பர கட்டணம், நிபந்தனைகள் போன்றவற்றிலும் மாற்றங்கள் செய்ய வேண்டியதிருக்கும் என்கிறார்.

கேனான் நிறுவனத்தைப் பொறுத்தவரையில் 2007 ஆம் ஆண்டு சச்சின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இந்த ஒப்பந்தம் வரும் டிசம்பரில் முடிவடைகிறது. ஆனால் இப்போது சச்சினுடனான ஒப்பந்தந்த்தை அந்நிறுவனம் புதுப்பிக்கவில்லை. மாறாக இளம்நடிகை அனுஷ்கா சர்மாவை நாடியிருக்கிறது! இருந்தாலும் சச்சின் ஓய்வு பெறுவதற்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை என்கிறார் அந்நிறுவனத்தின் மூத்த அதிகாரி அலோக் பரத்வாஜ்.

சன்ஃபீஸ் பிஸ்கட்டுக்கான விளம்பர ஒப்பந்தம் 2006-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இது வரும் 2013-ம் ஆண்டு முடிவடைய இருக்கிறது. அவிவா லைப் நிறுவனத்துடனான ஒப்பந்தம் 2007-ம் ஆண்டு போடப்பட்டது. இது 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படுகிறது. கோக் நிறுவனத்துடனான ஒப்பந்தம் 2011-ல் போடப்பட்டது. இதுவும் 2013-ல் முடிவடையும்.

சச்சின் போட்டிருக்கும் ஒப்பந்தங்கள் அனைத்திலும் டீமுக்கு தேர்வாகமல் போனாலோ அல்லது 6 மாதம் விளையாடாமல் போனாலோ செலுத்தப்படும் தொகையில் மாற்றம் செய்து கொள்ளப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது என்பதையும் சுட்டிக் காட்டுகின்றனர் சிலர்.

பொதுவாக இப்படி விளையாட்டு வீரர்களுடன் போடப்படும் ஒப்பந்தங்கள் அதிகபட்சம் 2 ஆண்டுகள் வரைதான் என்றும் ஒருதரப்பினர் கூறுகின்றனர். சச்சின் ஒருவேளை ஓய்வு பெற்றால் மூன்று அல்லது 4 விளம்பர நிறுவனங்கள்தான் சச்சின் வசம் இருக்கும்.

ஆக எல்லா ஒப்பந்தங்களும் முடியும் 2013 வரை எம்.பி. சச்சின் இப்படித்தான் ஆட்டம் காட்டுவாரோ? அதுக்கு அப்புறம்தான் ஓய்வு பெறுவாரோ?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sachin Tendulkar delaying retirement for fear of losing big endorsements? | எம்.பி. சச்சின் ஓய்வு பெறாமல் இருப்பதன் 'ஏடாகூட' பின்னணி என்ன?

ust 63 runs from three innings against an ordinary Kiwi side has not only Sachin Tendulkar's army of fans worried but also managers of the 17-odd brands he endorses. After all, such wretched form has brought the R word back onto centre stage, yet again.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X