மதுரை ரயில் நிலையத்தில் ஊழியர் பற்றாக்குறை: டிக்கெட் எடுக்க முடியாமல் பயணிகள் திணறல்

Posted By:
Subscribe to GoodReturns Tamil

மதுரை: மதுரை ரயில் நிலையத்தில் உள்ள டிக்கெட் கவுன்டர்களில் ஊழியர்களின் பற்றாக்குறை காரணமாக, தகுந்த நேரத்தில் டிக்கெட் எடுக்க முடியாமல் பயணிகள் திணறி வருகின்றனர்.

மதுரை ரயில் நிலையத்திலிருந்தும், மதுரை வழியாகவும், தினமும் 50க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்வால் மக்கள், ரயில் பயணங்களை அதிகம் விரும்புகின்றனர்.

மதுரை ரயில் நிலையத்தின் கிழக்கு நுழைவாயிலில் 9 டிக்கெட் கவுன்டர்கள் உள்ளன. இந்த டிக்கெட் கவுன்டர்களில் பணியாற்ற 3 ஷிப்ட்களை ரயில்வே நிர்வாகம் அமைத்துள்ளது. ஆனால் அதற்கான ஊழியர்கள் இல்லை. 35 ஊழியர்கள் இருக்க வேண்டிய இடத்தில் 26 பேர் மட்டுமே உள்ளனர். அதிலும் பல்வேறு காரணங்களால் 10 பேர் விடுப்பு எடுத்து வருகின்றனர்.

இதனால் 3 கவுன்டர்களில் மட்டுமே டிக்கெட் வினியோகம் நடைபெறுகிறது. இதனால் டிக்கெட் கவுன்டர்களில் நீண்ட வரிசையி்ல் பயணிகள் காத்திருக்கின்றனர். மேலும் சில நேரங்களில் பயணிகள் டிக்கெட் எடுப்பதற்குள் ரயில்கள் சென்று விடுகின்றன. இதனால் பயணிகளிடையே அவ்வப்போது தள்ளுமுள்ளும், வாக்குவாதமும் ஏற்படுகிறது.

மதுரை ரயில் நிலையத்தில் பயணிகள் சந்தித்து வரும் பிரச்சனைகளை நீக்க வலியுறுத்தி மதுரை டிவிஷனல் ரயில்வே மேளாலரிடம், மதுரை தெற்கு (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) சட்டமன்ற உறுப்பினர் இரா.அண்ணாதுரை கோரிக்கை மனு அளித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: madurai, மதுரை
English summary

Staff shortage in Madurai railway station: Passengers suffer | மதுரை ரயில் நிலையத்தில் ஊழியர் பற்றாக்குறை- பயணிகள் திணறல்!

Passenger are suffering due to the shortage of stuffs in the Madurai railway station.
Story first published: Wednesday, October 3, 2012, 13:38 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns