இறால் கொள்முதல் நிறுத்தம்: தூத்துக்குடியிலிருந்து கோடியக்கரை வரை மீனவர்கள் ஸ்டிரைக்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இறால் கொள்முதல் நிறுத்தம்: மீனவர்கள் ஸ்டிரைக்
தூத்துக்குடி: இறால் ஏற்றுமதி கம்பெனிகளுக்கு மீன் உணவுப் பொருட்களை பதப்படுத்த நிலத்தடி நீர் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் மீன் ஏற்றுமதியாளர்கள் கொள்முதலை நிறுத்திவிட்டனர். இதனால் ஏராளமான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இதை கண்டித்து மீனவர்கள் நேற்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தூத்துக்குடி, ராமேஸ்வரம், குமரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள மீனவர்கள் பிடித்து வரும் இறால்கள், கணவா மீன்கள் உள்ளிட்டவற்றை ஏற்றுமதியாளர்கள் மொத்தமாக கொள்முதல் செய்து பதப்படுத்தி அமெரிக்கா, ஐரோப்பா, அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். இவை பெரும்பாலும் தூத்துக்குடியில் உள்ள கடல் உணவு தொழிற்சாலைகளில் பதப்படுத்தப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன.

இந்த ஆலைகளில் மீன்களை சுத்தம் செய்யவும், அங்குள்ள குளிர்பதன நிலையங்களில் மைனஸ் 24 டிகிரி உறை நிலையில் மீன்களை பதப்படுத்தி வைக்கவும் நிலத்தடி நீர் தேவைப்படுகிறது. இதற்காக ஓட்டப்பிடாரம், திருச்செந்தூர் வட்டாரங்களில் இருந்து நிலத்தடி நீர் எடுக்கப்பட்டு வந்தது. தற்போது நிலத்தடி நீரை எடுக்க தூத்துக்குடி கலெக்டர் ஆசிஷ் குமார் தடை விதித்துள்ளார். இதனால் கடந்த ஒரு மாத காலமாக மீன் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகள் முடங்கியுள்ளன. இதையடுத்து கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, தருவைகுளம், கல்மேடு, காயல்பட்டிணம், மறவன்மடம் உள்ளிட்ட பகுதிகளில் 18 மீன் உணவு பதப்படுத்தும் ஆலைகள் செயல்படுகின்றன. நாள் ஒன்றுக்கு ஒரு ஆலையில் 20 முதல் 40 டன் வரை இறால் மீன்கள் மீனவர்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு வந்தன. நிலத்தடி நீர் எடுக்க விதிக்கப்பட்ட தடையால் மீன் உணவு பதப்படுத்தும் தொழில் முடங்கியுள்ளது. இதனால் இனி இறால் மீன்களை கொள்முதல் செய்வதற்கு வாய்ப்பு இல்லை என ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். கொள்முதல் இல்லாத நிலையில் மீன்கள் பிடித்தும் கூட அவற்றுக்கு போதிய வருவாய் இல்லாததால் தூத்துக்குடியிலிருந்து கோடியக்கரை வரை பெரும்பாலான மீனவர்கள் நேற்று முதல் வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tuticorin fishermen on strike | இறால் கொள்முதல் நிறுத்தம்: மீனவர்கள் ஸ்டிரைக்

Fishermen from Tuticorin till Kodiakkarai are on strike from sunday as exporters stopped purchasing prawns from them after Tuticorin collector banned the use of groundwater for preserving sea foods.
Story first published: Tuesday, November 27, 2012, 11:47 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X