கம்ப்யூட்டரில் தமிழில் ஈஸியா டைப் பண்ண ஈஸி டைப்பிங் சொலுஷன்ஸ் சாப்ட்வேர்

Posted By:
Subscribe to GoodReturns Tamil

சென்னை: ஈஸி டைப்பிங் சொலுஷன்ஸ் சாப்ட்வேர் இருந்தால் உங்கள் கம்ப்யூட்டரில் தமிழில் எளிதாக டைப் செய்யலாம்.

தற்போது கம்ப்யூட்டர் கீ போர்டில் உள்ள ஏ,பி,சி,டி உள்ளிட்ட பட்டன்களை பயன்படுத்தி தான் தமிழில் டைப் செய்ய வேண்டும். இதற்கு எந்த எழுத்தை அழுத்தினால் தமிழில் எந்த எழுத்து வரும் என்று தெரிந்து கொள்ளவே சிறிது காலம் எடுக்கும். இதே நிலைமை தான் பிற மொழிகளுக்கும். இந்நிலையில் புதுக்கோட்டையைச் சேர்ந்த சர்மாஸ் சொலுஷன்ஸ் மற்றும் புராடக்ட்ஸ் என்ற நிறுவனம் ஈஸி டைப்பிங் சொலுஷன்ஸ் என்ற சாப்ட்வேரை உருவாக்கியுள்ளது.

இந்த சாப்ட்வேரின் விசேஷம் என்னவென்றால் கீ போர்டில் உள்ள எழுத்துக்களை அல்ல 1 முதல் 9 வரை உள்ள பட்டனைகளை பயன்படுத்தி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது, பஞ்சாபி, இந்தி, குஜராத்தி, அரபிக், ஒரியா ஆகிய மொழிகளில் டைப் செய்யலாம்.

www.easytype.in என்ற இணையதளத்திற்கு சென்று அந்த சாப்ட்வேரை உடனே டவுன்லோட் செய்யுங்கள். தமிழில் டைப் செய்யத் தெரியாதவர்கள் கூட இந்த சாப்ட்வேரை பயன்படுத்தி வெறும் ஒரே வாரத்தில் சூப்பராக டைப் செய்யலாம். கீ போர்டின் வலப்பக்கம் இருக்கும் எண்கள் கொண்டு தான் டைப் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வசதி விரைவில் செல்போனிலும் வரவிருக்கிறது. தாய் மொழியில் டைப் செய்ய ஆர்வமாக இருக்கிறீர்களா? உடனே ஈஸி டைப்பிங் சொலுஷன்ஸ் சாப்ட்வேரை பயன்படுத்துங்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: good returns
English summary

Now, type in your mother tongue with ease | இந்த சாப்ட்வேர் இருந்தா கம்ப்யூட்டரில் தமிழில் ஈஸியா டைப் பண்ணலாம்...

Pudukottai-based Sarma’s Solutions and Products has developed a software called ‘Easy Typing Solutions’ to type in tamil, telugu, kannada, malayalam, urdu, punjabi, hindi, gujarati, arabic, oriya using number keys and a few functional keys (Ctrl, Shift, Alt). Go to www.easytype.in and download the software.
Story first published: Wednesday, March 20, 2013, 8:24 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns