தொடர் சரிவை நோக்கிச் செல்லும் இந்தியாவின் பண மதிப்பு

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தொடர் சரிவை நோக்கிச் செல்லும் இந்தியாவின் பண மதிப்பு
நேரடி அன்னிய முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு வசதி போன்றவற்றில் உள்ள பிரச்சனைகளுக்கு இந்தியா விரைவில் தீர்வு காணவில்லை என்றால், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து கொண்டே இருக்கும் என்று சிஐஐ ஆய்வு தெரிவித்திருக்கிறது.

தொழிற்சாலைகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளுக்கான நிலங்கள் மற்றும் இடங்களைப் பெறுவதில் நாம் விரைவாக இருக்க வேண்டும். அதாவது அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும். தாமதம் ஏற்பட்டால், தொழிற்சாலைகள் மற்றும் உட்டகட்டமைப்பு ஆகியவற்றில் செய்யப்படும் முதலீடுகள் தாமதமாகிவிடும். மேலும் நாம் நேரடி அன்னிய முதலீட்டை அதிக அளவு ஊக்குவிக்க வேண்டும். அதோடு எரி பொருள் மற்றும் உரங்களுக்கான மானியங்களைப் படிப்படியாகக் குறைக்க வேண்டும் என்று சிஐஐ தெரிவித்திருக்கிறது.

 

மேலும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு, இந்தியாவை ஒரு முதலீடு செய்யவும் மற்றும் வியாபாரம் செய்யக்கூடிய தளமாகவும் உருவாக்க வேண்டும். அதன் மூலம் இந்திய ரூபாயில் ஏற்படும் நிலையற்ற மாற்றம் மற்றும் சரிவு ஆகியவற்றைத் தடுக்க முடியும் என்று அந்த அறிக்கை தெரிவித்திருக்கிறது.

ஒருவேளை அதிகமான சிஎடி (CAD) மற்றும் நேரடி அன்னிய முதலீடுகளில் இருக்கும் சிக்கல்கள் மிக விரைவில் களையப்படாவிட்டால், அடுத்து காலண்டிலும் இந்திய ரூபாயின் மதிப்பில் மிகப் பெரிய மாற்றம் இருக்கும். அதோடு அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்னும் மிகப் பெரிய சரிவைச் சந்திக்கும் என்று அந்த அறிக்கை எச்சரித்திருக்கிறது.

சிஐஐ கூட்டத்தில் கலந்து கொண்ட பலர், வரும் செப்டம்பர் மாதம் வரை அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 59ஆக இருக்கும் என்று நம்புவதாகத் தெரிவித்திருக்கின்றனர். எனினும் ஒரு சிலர் 58-59ஆக இருக்கும் என்று தெரிவித்திருக்கின்றனர்.

தற்போது ஏற்பட்டிருக்கும் மிகப் பெரிய அளவிலான கரன்ட் அக்கௌண்ட் டெஃபிசிட் (சிஎடி) மற்றும் நமது வளர்ச்சியில் ஏற்பட்டிருக்கும் பின்னடைவு ஆகியவை நமது இந்திய ரூபாயின் சரிவுக்கு மிகப் பெரிய காரணங்களாக இருந்திருக்கின்றன என்று அந்த அறிக்கை தெரிவித்திருக்கிறது.

மேலும் சிஎடியில் ஏற்பட்டிருக்கும் மிகப் பெரிய பற்றாக்குறை மற்றும் அளவுக்கு அதிகமான தங்க இறக்குமதி ஆகியவை, இந்திய ரூபாயின் வீழ்ச்சிக்கு காரணங்களாக இருக்கின்றன என்று சிஐஐ கூட்டத்தில் கலந்து கொண்ட பலர் தெரிவித்திருக்கின்றனர்.

மேலும் மிகவும் பலவீனமான உள்நாட்டு பிரச்சனைகள் மற்றும் இறக்குமதி செய்பவர்களுக்கு தேவைப்படும் அதிகமான அமெரிக்க டாலர்கள் போன்றவையும் இந்திய ரூபாயின் சரிவுக்கு காரணங்களாக இருக்கின்றன. எனினும் அவை மிகப் பெரிய காரணங்கள் அல்ல என்று அந்த அறிக்கை தெரிவித்திருக்கிறது.

இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்திருப்பதால், அது பணவீக்கத்திற்கு வழிவகுக்கும் என்றும் அதனால் இந்திய ரிசர்வ் வங்கி தனது அடுத்த கூட்டத்தில் வட்டி விகிதத்தைக் குறைப்பதில் தயக்கம் காட்ட வைக்கும் என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

 

அடுத்து முக்கிய விளைவு என்னவென்றால், எண்ணெய் நிறுவனங்களின் நிலுவைத் தொகைகள் அதிகமாகும். அதனால் அரசு வழங்கும் மானியத் தொகையும் அதிகமாகும். அதனால் அரசுக்கு மிகப் பெரிய பற்றாக்குறை ஏற்படும் என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

மேலும் இந்திய ரூபாயின் சரிவை மீட்டெடுப்பதற்காக, இந்திய ரிசர்வ் வங்கி, அன்னிய பணம் பரிமாற்ற சந்தையில் தலையிடக்கூடாது என்றும் அந்த அறிக்கை தெரிவித்திருக்கிறது.

அதோடு இந்திய ரூபாயின் மதிப்பை சரிவிலிருந்து மீட்டெடுக்க தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த அறிக்கை வலியுறுத்துகிறது.

குறிப்பாக ரூபாயின் மதிப்பை சரிவிலிருந்து மீட்டெடுக்க வேண்டுமென்றால், இந்தியா அடுத்த 6 மாதங்களுக்குள் ரூ.100 கோடிக்கும் அதிகமான 50 மிகப் பெரிய தொழில் திட்டங்களையும் மற்றும் ரூ.250 முதல் ரூ.1000 கோடிகளுக்கு இடைப்பட்ட சுமார் 200 பெரிய தொழில் திட்டங்களை தொடங்க வேண்டும் என்று அந்த அறிக்கைக் கேட்டுக் கொண்டிருக்கிறது.

அதோடு எஃப்ஐஐ/இசிபி போன்றவற்றிற்கு காட்டப்படும் நெருக்கடிகளைக் குறைக்க வேண்டும் என்றும், எஃப்ஐஐ மூலம் கிடைக்கும் குறைந்த கால முதலீட்டிற்கான வருமானத்திற்கு கொடுக்கப்பட்டிருக்கும் வரிவிலக்கை பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அந்த அறிக்கை கேட்டுக் கொண்டிருக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Rupee may weaken further against US dollar: CII

The rupee will continue to remain volatile and may weaken further against dollar if the government doesn't address issues like dwindling FDIs and infrastructural bottlenecks, a survey said.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X