இந்தியா செல்வந்தர்களின் பட்டியல்!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: நம்மில் எல்லோருக்கும் பணம் சம்பதிக்க வேண்டும் என்ற ஆர்வமும் ஆசையும் இருக்கும். ஆனால் ஆர்வம் மட்டும் போதாது, அதற்கான அறிவும், தந்திரமும் தேவை. அறிவு ஒக்கே தந்திரம் எதற்கு? இந்த போட்டி நிறைந்த உலகத்தில், சக போட்டியாளரை வீழ்த்த தந்திரம் மிகவும் அவசியம். மேலும் துவங்கும் தொழிலில் அதிகப்படியான அறிவும், ஆர்வமும் தேவை, இவை இரண்டும் தான் வெற்றிக்கான பதைக்கு வழி வகுக்கும்.

 

மேலும் இக்காலத்து இளைஞர்கள் விரும்பும் நாவல் ஆசிரியர் சேதன் பகத் "இந்தியா கணவுகளுக்கான இடம் இல்லை" என்று ஒரு நாவலில் கூறினார். அவர் சொல்வது சரி தானே, நம் இந்தியாவில் புதிதாக எதேனும் செய்ய துவங்கினால், தலையில் தட்டி முலையில் உட்கார வைக்க அனைவரும் ரெடி. ஆனால் அதனை ஆதரிக்கும் மக்கள் மிகவும் குறைவே.

இத்தகைய நிலையில் பல வேதனைகளையும், தடைகற்கலையும் தாண்டி சாதனைப் புரியும் இந்தியர்களுக்கு ஒரு சல்யூட். இந்த வரிசையில் இந்தியாவின் டாப் 10 இடங்களை பிடித்த பணக்காரர்களை இப்பொமுது பார்ப்போம்.

முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானியின் சொத்தின் மதிப்பு சமார் 22,600 மில்லியன் டாலர் ஆகும். இவர் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவரகவும், நிர்வாக இயக்குநரகவும் பொறுப்பு வகுக்கிறார். அனைவரும் வியக்கும் வண்ணம் மும்பையில் இருக்கும் இவரது வீட்டின் (அன்டிலா) மதிப்பு மட்டும் 50-70 மில்லியன் டாலர்.

லட்சுமி மிட்டல்

லட்சுமி மிட்டல்

இவரது சொத்து மதிப்பு 19,200 மில்லியன் டாலர், இவர் எசெலார் மிட்டல் என்னும் மிகப்பெரிய எஃகு உற்பத்தி செய்யும் நிறுவனத்தின் தலைவரகவும் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பொறுப்பு வகுக்கிறார். மேலும் இவர் கல்கத்தாவில் இருக்கும் செயின்ட் சேவியர் கல்லூரியில் பயின்றார்.

அஸிம் பிரேம்ஜி
 

அஸிம் பிரேம்ஜி

இவரது சொத்து மதிப்பு 13,000 மில்லியன் டாலர், பெங்களூரை தலைமையகமாக கொண்டு உலக முழுவதும் விரிந்து இருக்கும் விப்ரோ நிறுவனத்தின் தலைவராக பொறுப்பு வகுக்கிறார். இவர் தனது 2 பில்லியன் டாலர் அளவு சொத்துக்களை தனது அறக்கட்டளையின் மூலம் நன்கொடையாக கொடுத்துள்ளார்.

சசி மற்றும் ரவி ருயா

சசி மற்றும் ரவி ருயா

இவர்களின் சொத்து மதிப்பு 10,200 மில்லியன் டாலர். இவர்கள் எஸ்ஸார் நிறுவனத்தின் தலைவர்களாக உள்ளனர், இதில் ரவி ருயா நமது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், மெக்கானிக்கல் என்ஜினியரிங் படித்தவர்.

சாவித்ரி ஜிந்தால்

சாவித்ரி ஜிந்தால்

இவரது சொத்து மதிப்பு 9,500 மில்லியன் டாலர், இவர் ஜிந்தால் ஸ்டீல் நிறுவனத்தின் தலைவர் ஆவார்.

சுனில் மிட்டல்

சுனில் மிட்டல்

சுனில் மிட்டலின் சொத்து மதிப்பு சுமார் 8,800 மில்லியன் டாலர் ஆகும். உலகின் ஐந்தாம் மிக பெரிய தொலை தொடர்பு நிறுவனமான ஏர்டெலின் உறிமையாளர் இவர்.

கெளதம் ஆதானி

கெளதம் ஆதானி

கெளதம் ஆதானியின் சொத்து மதிப்பு 8,200 மில்லியன் டாலர் ஆகும். இவர் இந்தியவின் முன்னணி வர்த்தகம் மற்றும் ஏற்றுமதி நிறுவனமான ஆதானி குருப் நிறுவனத்தின் தலைவர்.

குமார் மங்கலம் பிர்லா

குமார் மங்கலம் பிர்லா

இவரது சொத்து மதிப்பு 7,700 மில்லியன் டாலர் ஆகும். மேலும் இவர் ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவர் ஆவார். ஆதித்யா பிர்லா குழுமம் உலகத்தில் சிமெண்ட் மற்றும் அலுமினிய உற்பத்தில் பெரும் பங்கை வகுக்கிறது. இவர் பிர்லா குடும்பத்தின் நான்காம் தலைமுறை.

பலோன்ஜி மிஸ்ட்ரி

பலோன்ஜி மிஸ்ட்ரி

பலோன்ஜி மிஸ்ட்ரியின் சொத்து மதிப்பு 7,600 மில்லியன் டாலர். பலோன்ஜி மிஸ்ட்ரி, ஷப்புர்ஜி பலோன்ஜி குழுமத்தின் தலைவர். ஷப்புர்ஜி பலோன்ஜி குழுமம், இந்தியாவின் கட்டுமான துறையின் முன்னணி நிறுவனம்.

ஆதி கோத்ரேஜ்

ஆதி கோத்ரேஜ்

ஆதி கோத்ரேஜின் சொத்து மதிப்பு 6,800 மில்லியன் டாலர். கோத்ரேஜ் குழுமம் 114 வருடங்களாக செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் தலைவர் ஆதி கோத்ரேஜ்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India's top 10 richest people

India's top 10 richest people
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X