எல்&டியின் வருவாய் முடிவுகளில் பலத்த அடி!!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உள்கட்டமைப்பு ஜாமஉள்கட்டமைப்பு ஜாம்பவானாகிய எல்&டி, இந்திய பொருளாதாரத்தின் முக்கியத் துறைகளான எரிசக்தி, துறைமுகங்கள், சாலைகள் போன்ற துறைகளுக்கு சேவையாற்றி வருகின்றது. இதனாலேயே அதன் வருவாய் முடிவுகளை மோசமடையும் போது, அது ஒட்டுமொத்த பொருளாதாரமே குழப்பத்தில் இருப்பது போல் காட்ட முனைகிறது.

 

கடந்த திங்களன்று, எல்&டி பெரும் ஏமாற்றம் விளைவிப்பதான வருவாய் முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன் பங்குகள் கடந்த 4 வருடங்களில் இல்லாத அளவிற்கு, சுமார் 7.4 சதவீதத்திற்கும் அதிகமான அளவு சரிவடைந்துள்ளன.

எல்&டியின் வருவாய் முடிவுகளில் பலத்த அடி!!!

எல்&டியின் முடிவுகளை நாட்டின் மோசமான பொருளாதார வளர்ச்சி விகிதங்களின் பிரதிபலிப்பாகும். நிலக்கரி இணைப்புகள் மற்றும் எரிவாயு பொருட்கள் உள்ளிட்டதான எரிசக்தித் துறையில் காணப்படும் ஒட்டுமொத்தக் குளறுபடிகளால் நாட்டின் எரிசக்தி பிரிவின் வருவாய் சுமார் 44 சதவீதம் வரை சரிவடைந்துள்ளது.

"உண்மையில் தற்போது நிலவும் சூழல் பெரும் சவாலாக உள்ளது." என்று எல்&டியின் முதன்மை நிர்வாக அதிகாரியாகிய திரு கிருஷ்ணமூர்த்தி வெங்கடரமணன் கூறினார், "மொத்தத்தில், நீங்கள் இச்சூழலைக் கண்ணுற்றால், அடுத்து வரும் இரண்டு வருடங்களுக்கு, இந்திய சூழல் மிகவும் சவால் நிறைந்ததாகவே இருக்கப் போவதை உணரலாம்." என்றும் கூறியுள்ளார்.

மற்ற இந்திய நிறுவனங்களைப் போன்றே எல்&டியும் அதன் வருவாய் முன்மதிப்பீடுகளை தக்க வைத்துக் கொள்வதற்கு பிரயத்தனப்படுவதற்கான முழு முதற்காரணம் அயல்நாட்டு ஆர்டர்கள் தான் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை.

சமீபத்திய மாதங்களில், இந்நிறுவனத்தின் அயல்தேசத்து ஆர்டர்கள், ஓமனில் சுமார் 350 மில்லியன் டாலர் மதிப்பிலான நெடுஞ்சாலைத் திட்டம், ஒரு எரிவாயு பதனிடும் தொழிற்சாலை அமைப்பதற்கான சவூதி அராம்கோ எஸ்டிஏபிஓ.யுஎல் -இன் சுமார் 300 மில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தம், ஆகியவையே ஆகும்.

இதில் சோகமான விஷயம் என்னவெனில் போஸ்கோ மற்றும் ஆர்செல்லார் மிட்டல் போன்ற முக்கிய பணித்திட்டங்கள் சென்ற வாரம் கைவிட்டுப் போனது, இது போன்ற நிறுவனங்களின் பெரும் பணித்திட்டங்களை செயல்படுத்திக் கொடுக்கும் தகுதி வாய்ந்த எல்&டி நிறுவனத்திற்கு மேலும் பல சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது தான்.

 

பொருளாதார வளர்ச்சியின் முடக்கம், பணித்திட்டங்கள் தடைநீக்கம் பெற இயலாமை, நிலம் கையகப்படுத்துவதில் வரக்கூடிய பிரச்சினைகள், அதிகமான வட்டி விகிதங்கள், உலகளவில் ஜாம்பவான்களாக விளங்கும் நிறுவனங்களின் வெளியேற்றம் போன்ற பிரச்சனைகள் விஸ்வரூபம் எடுத்துள்ள தற்போதைய நிலையில், எல்&டி அயல்தேசத்திலிருந்து தனக்குக் கிடைக்கக்கூடிய நல்வாய்ப்புகளுக்காக தொடர்ந்து காத்துக் கொண்டிருப்பதைத் தவிர வேறு வழியில்லை.

பவானாகிய எல்

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Why L&T’s results reflect the messy state of the Indian economy?

Infrastructure major L&T serves key sectors in the India economy, including power, ports roads etc., which is why if its results are really bad, it tends to show that the economy is in a mess.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X