புது பெயருடன் கலக்கும் நோக்கியா நிறுவனம்!!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புது பெயருடன் கலக்கும் நோக்கியா நிறுவனம்!!!
நோக்கியா சீமென்ஸ் நெட்வர்க்கின், சீமென்ஸ் பங்குகள் அனைத்தையும் நோக்கியா நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது. இந்த பரிவர்த்தனை ஜூலை 1 ஆம் தேதி 2013 இல் அறிவிக்கப்பட்டது.

இந்த பரிவர்த்தனை அடிப்படையில், ‘சீமென்ஸ்' என்ற பெயர் நோக்கியா சீமென்ஸ் நெட்வர்க் நிறுவனத்தின் பெயரிலிருந்தும் மற்றும் அதன் வர்த்தகக் குறியீடுகளிலிருந்தும் நீக்கப்பட்டிருக்கிறது. ‘நோக்கியா சொலுஷன்ஸ் அன்ட் நெட்வர்க்ஸ்' என புதிய பெயர் மற்றும் வர்த்தகக் குறியீடு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதை என்எஸ்என் (NSN) என்று சுருக்கமாக குறிப்பிடலாம். இனிமேல் வர்த்தக அறிக்கைகளில் இந்த பெயரே பயன்படுத்தப்படும்.

 

‘நோக்கியா சொலுஷன்ஸ் அன்ட் நெட்வர்க்ஸ்' முற்றிலும் நோக்கியா நிறுவனத்திற்குச் சொந்தமாகும் மேலும் இது நோக்கியா நிறுவனத்துடன் தொடர்ந்து ஒருங்கிணைந்து செயற்படும்.

 

என்எஸ்என் நிர்வாக மட்டத்தில், ராஜிவ் சூரி தலைமை நிர்வாக அதிகாரியாகவும், ஜெஸ்பெர் ஓவெசென் இயக்குநர் குழுவிற்கு தலைவராகவும் (Executive Chairman) தொடர்ந்து பதவி வகிப்பார்கள்.

சீமென்ஸ் மூலம் நியமிக்கப்பட்டிருந்த, நிர்வாக இயக்குநர்கள் பதவிவிலகிய காரணத்தால், புதிய உரிமையத்திற்கு ஏற்ற விதத்தில் என்எஸ்என் நிர்வாக இயக்குநர்கள் குழு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Nokia completes the acquisition of Siemens' stake in Nokia Siemens Networks

Nokia has completed the acquisition of Siemens' stake in Nokia Siemens Networks. The transaction was originally announced on July 1, 2013.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X