2010ஆம் ஆண்டிலிருந்து கடன்களுக்கான தேவை 150% அளவு உயர்ந்துள்ளது!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2010ஆம் ஆண்டிலிருந்து கடன்களுக்கான தேவை 150% அளவு உயர்ந்துள்ளது!!
கிரெடிட் தகவல் ஏஜென்ஸியான சிபில், இந்தியாவில் வீடு மற்றும் வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கென வங்கி மற்றும் இதர நிறுவனங்கள் வழங்கக்கூடிய கடன்களுக்கான தேவை 2010 ஆம் ஆண்டிலிருந்து சுமார் 150 சதவீத அளவில் கடும் உயர்வடைந்துள்ளது கண்கூடாகத் தெரிகிறது என்று கூறியுள்ளது.

கிரெடிட் இன்ஃபர்மேஷன் பீரோ இந்தியா லிமிட்டெட் (சிபில்) -இன் துணைத் தலைவராகிய ஹர்ஷாலா சந்தோர்கர் கூற்றுப்படி, கடன் வாங்குவதில் காணப்படும் இந்த திடீர் வேகம் கிரெடிட்டிற்கான தேவை அதிகரித்துள்ளதையும், கடன் வழங்கும் நிறுவனங்கள் 2008 ஆம் ஆண்டில் நிலவிய மந்தநிலைக்குப் பின் தங்கள் பட்டுவாடாக்களை மீண்டும் துரிதமாக்கியுள்ளதையுமே காட்டுகின்றது.

 

பத்திரிக்கையாளர் கூட்டம் ஒன்றில் பேசிய சந்தோர்கர், சிபில் சுமார் 930 கிரெடிட் நிறுவனங்களை தனது அங்கத்தினர்களாகக் கொண்டு, சுமார் 290 மில்லியனுக்கு மேற்பட்ட நுகர்வோர் வியாபாரங்கள் மற்றும் 19 மில்லியன் வர்த்தகங்கள் பற்றிய தகவல்களை பராமரித்து வருவதாகக் கூறினார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Demand for loans up 150% since 2010: CIBIL

CIBIL, has said that the demand for loans for various products including home and auto loans from banks and other financial institutions in India has shown a sharp increase of 150 per cent since 2010
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X