நாணயப் பற்றாக்குறையை அகற்ற வங்கிகளுக்கு ஊக்கத்தொகை: ரிசர்வ் வங்கி

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: ரிசர்வ் வங்கி செவ்வாய்க்கிழமை, புழக்கத்திலிருக்கும் நாணயப் பற்றாக்குறையை அகற்ற நாணயங்கள் விநியோகம் செய்யும் வங்கிகளுக்கு ஊக்கத்தொகை அளிக்கும் திட்டத்தை கொண்டு வந்தது.

 

அதன்படி, பொது நாணயங்கள் விநியோகத்தில் அண்மைக்காலங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை கணக்கில் கொண்டு நடப்பில் இருக்கும் ஊக்குவிப்பு மற்றும் அபராத திட்டங்கள் ஆய்வு செய்யப்பட்டது என ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் வழங்கல் மற்றும் விநியோகத்தில் தொழில்நுட்ப முன்னேற்றங்களை எற்படுத்தி, ஏற்கனவே வழங்கும் வாடிக்கையாளர் சேவைகளின் செயல்பாடுகளை விரிவாக்குவதன் மூலமும், வங்கிகளுக்கு அதிக ஊக்கத்தொகை வழங்குவதின் மூலமும் வாடிக்கையாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட சேவையை வழங்கும் முடியும் என ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

புதிய ஊக்கத்தொகை திட்டம்

புதிய ஊக்கத்தொகை திட்டம்

புதிய ஊக்க திட்டத்தின் படி, ரூ 50 வரை உள்ள அழுக்கடைந்த ரூபாய் நோட்டுப் பரிமாற்றத்திற்கான ஒரு கட்டுக்கு 1 ரூபாய் என்று இருந்தது, ஆனால் இப்போது வங்கிகளுக்கு 2ரூபாய் கிடைக்கும். ஒரு பை நாணயங்களை விநியோகம் செய்தால் தற்போது ரூ 25 கிடைக்கும்.

ஊக்குவிப்பு தொகை

ஊக்குவிப்பு தொகை

விநியோகம் செய்யும் வங்கிகள் கோராமலே, பணவறையில் இருந்து எடுக்கப்படும் நிகர நாணயங்கள்/ நோட்டுக்கள் அடிப்படையில் ஊக்குவிப்பு தொகை வழங்கப்படும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

தண்டனைத்தொகை
 

தண்டனைத்தொகை

பணவறையில் இருந்தும், வங்கிகள் ரிசர்வ் வங்கிக்கு கொடுக்கும் அழுக்கான நோட்டுகளில் உள்ள கள்ள நோட்டுகளை கண்டறிந்தால், அதற்கான தண்டனைத்தொகை, கள்ள நோட்டின் மதிப்பை போல் மூன்று மடங்கு இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி சில்லறை வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் நாணயங்கள் மொத்தமாக இல்லாமல் சில்லறையாக இருக்க உறுதி செய்ய வங்கிகள் தேவையான அமைப்பை செயல்படுத்த வேண்டும் என வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

 

 

வங்கிகளுக்கான மூலதன செலவு

வங்கிகளுக்கான மூலதன செலவு

கிராமப்புற பகுதி வங்கிகளுக்கு திருப்பித் தரப்படும் மூலதன செலவு 75 சதவீதமாகவும் நகர்ப்புற பகுதி வங்கிகளுக்கு 50 சதவீதமாக இருக்கும் எனவும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

இத்திட்டம் அனைவருக்கும் பொருந்தும்

இத்திட்டம் அனைவருக்கும் பொருந்தும்

பணவறை வைத்திருக்கும் வணிக வங்கிகளுக்கு பொருந்துவது போல இத்திட்டம் நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் மற்றும் பிராந்திய கிராமப்புற வங்கிகள் (பணவறை இருந்தாலும் இல்லாவிட்டாலும்) உள்ளிட்ட அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தும்" என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

RBI takes steps to remove currency shortage

The Reserve Bank Tuesday came out with incentive scheme for banks to ensure distribution of notes and coins to the public
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X