ரூ10 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டுவோருக்கு 35% வரி விதிக்க அரசு திட்டம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: நிதி பற்றாக்குறை மற்றும் ரூபாய் மதிப்பு நாட்டின் பொருளாதாரத்தை மிகக் கடுமையாக பாதித்துள்ளது. இதை சரி செய்ய வல்லுநர்கள் பல வழிகளில் முயற்சி செய்கின்றனர். அதில் ஒரு பகுதியாக, நடந்து வரும் குளிர்கால நாடாளுமன்ற கூட்டத் தொடரில் நிதி பற்றாக்குறையை குறைக்கும் வகையில் சில அதிரடி முடிவுகள் எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

இந்தியாவில் ஆண்டுக்கு 10 கோடிக்கும் அதிகமாக வருவாய் ஈட்டுவோருக்கு 35 சதவீத வரி விதிக்கும் திட்டமும் இதில் ஒன்று. இது நேரடி வரி குறியீடு (DTC) மசோதா 2013ன் ஒரு அங்கமாகும், இதில் குறிப்பிட்டபடி வருமான வரி நான்கு மட்டங்களில் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையின் படி, முதல் கட்டமாக ஆண்டு வருமானம் 2 லட்சத்துக்கும் குறைவாக இருப்பவர்களுக்கு வருமான வரியில் முழு சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

ரூ10 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டுவோருக்கு 35% வரி விதிக்க அரசு திட்டம்!

இரண்டாம் கட்டமாக ஆண்டு வருமானம் 2 முதல் 5 இலட்சம் வரை உள்ளவர்களுக்கு 10 சதவீத வருமான வரி செலுத்த வேண்டும்.

மேலும் ஆண்டு வருமானம் 5 முதல் 10 இலட்சம் பெறுபவர்களுக்கு 20 சதவீத வருமான வரியும், 10 இலட்சத்துக்கும் அதிகமாக வருமானம் பெறுபவர்களுக்கு 30 சதவீத வருமான வரி விதிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு ரூ10 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டுவோருக்கு 35% வரி விதிக்கவும் மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது.

இது தவிர ஆண்டுக்கு ரூ 1 கோடிக்கு அதிகமாக மியூச்சுவல் பண்டுகளிலும், ஈக்விட்டியிலும் வருமானம் ஈட்டுவோர், தனியாக 10 சதவீத வரி செலுத்த வேண்டும் என்று இந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நம் இதுவரை பார்த்தது தனிநபர் வருமான வரி மட்டும் தான். இது தவிர நிறுவனங்களுக்கும் வரி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் அனைத்து நிறுவனங்களுக்கும், மாட் (Minimum alternate tax - MAT) வரி விதிக்கப்பட்டுள்ளது. எஸ்டிடி வரியைப் (Securities transaction tax) பொருத்த வரையில் எந்த வித மாற்றமும் செய்யவில்லை.

 

இத்தகைய நடவடிக்கையின் முலம் இந்தியாவில் உள்ள நிதி பற்றாக்குறையை குறைக்கவும், அதிகப்படியான வருவாய் ஈட்ட முடியும் என மத்திய அரசு நம்புகிறது. நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவிற்கு அங்கீகரம் கிடைத்தால், இந்த புதிய மசோதா 1961 ஆம் ஆமல்ப்படுத்தப்பட்ட வருமான வரி சட்டத்தை மாற்றி அமைக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Taxing the 'Super rich'; income over 10cr to pay 35% tax

The Cabinet is likely to put on table a proposal of imposing a higher tax rate of 35 per cent on the 'super rich'
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X