நிதி சார்ந்த மோசடிகளில் இருந்து முதலீட்டாளர்களைக் காக்க வேண்டும்!!: டி.சுப்பாராவ் அதிரடி..

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நிதி சார்ந்த மோசடிகளில் இருந்து முதலீட்டாளர்களைக் காக்க வேண்டும்!!: டி.சுப்பாராவ் அதிரடி..
மேற்கு வங்காளம் மட்டுமின்றி மேலும் பல இடங்களிலும் திவாலாகிக் கொண்டிருக்கும் சிட் ஃபண்ட் திட்டங்களின் பின்னணியைக் கருத்தில் கொண்டு பேசிய ஆர்பிஐ கவர்னர் சுப்பாராவ் அவர்கள், முதலீட்டாளர்களை நிதி சார்ந்த மோசடிகளில் இருந்து காக்க வேண்டியது "மத்திய வங்கி மற்றும் அரசாங்கத்தின்" பொறுப்பாகும் என்று தெரிவித்தார்.

"இது போன்ற மோசடியான திட்டங்களிலிருந்து மக்களைக் காக்க வேண்டியது அரசாங்கம் மற்றும் ரெகுலேட்டர்களின் மிக முக்கிய பொறுப்பாகும்." என்று, இன்னும் ஒரு வார காலத்தில் பதவி விலக உள்ள திரு சுப்பாராவ் தெரிவித்துள்ளார்.

 

மீடியா தகவல்களின் படி, சுப்பாராவ் இரண்டு பரிணாமங்கள் கொண்ட ஒரு அணுகுமுறையை பரிந்துரைத்துள்ளார்: முதலீட்டாளர்களிடையே இத்தகைய திட்டங்களின் நம்பகமின்மையைப் பற்றிய விழிப்புணர்வைப் பரப்புதல்; மற்றும் பொது மக்களின் சேமிப்புகள் பாரம்பரியமான நிதி அமைப்புக்குச் சென்று சேரும் வண்ணம் நிதி சேர்க்கைகளை பலப்படுத்துதல் ஆகியவையே அவ்விரு பரிணாமங்கள் ஆகும்.

 

சமீபத்தில், மேற்கு வங்கத்தில் உயர்வான ப்ரொஃபைலைக் கொண்டிருந்த சாரதா குழுமம், ஆயிரக்கணக்கான முதலீட்டாளர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை பெருமளவில் மோசம் செய்து, திவாலாகியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Central bank, Govt must prevent investors from financial frauds: D Subbarao

It is the responsibility of the government and the regulators to protect people from such fraudulent schemes
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X