பானீஷ் மூர்த்திக்கு பிறகு ஐகேட் நிறுவனத்தின் புதிய சிஇஒ அசோக் வேமுரி!!..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: ஐகேட் பானீஷ் மூர்த்தியின் பணி நீக்கத்திற்கு பிறகு, இந்த பணியிடம் காலியாகவே இருந்தது. தற்போது ஐகேட் மென்பொருள் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக அசோக் வேமுரி பொறுப்பேற்க உள்ளார்.

 

கலிபோர்னியா, ஃப்ரிமான்ட் நகரத்தில் உள்ள ஐகேட் நிறுவனத்தின் தலைமையகத்தில் இருந்து செய்திகளின் முலம் திரு.வேமுரி வரும் செப்டம்பர் 16ஆம் தேதி முதல் தனது பணிகளை துவங்கவுள்ளார். மேலும் இவர் நிறுவனத்தின் உயர் மட்ட குழுவிலும் இருப்பார் என்று அந்நிறுவனம் இன்று காலையில் தெரிவித்தது.

பானீஷ் மூர்த்திக்கு பிறகு ஐகேட் நிறுவனத்தின் புதிய சிஇஒ அசோக் வேமுரி!!..

வேமுரி சமிபத்தில் தான் இன்போசிஸ் நிறுவனத்தின் உயர் மட்ட குழுவிலும், அமெரிக்க வணிகத்தின் தலைவர் , உலக உற்பத்தி மற்றும் பொறியியல் சேவைகளின் தலைவர் பதவியில் இருந்து விலகினார். மேலும் இவர் இன்போசிஸ் நிறுவனத்தின் நிதி சேவைகள் மற்றும் காப்பீடு துறையை நிறுவி, பத்து ஆண்டுகளாக நிர்வகித்து வந்தார். இது மட்டும் அல்லாமல் இன்போசிஸின் சீனாவின் நடவடிக்கைகளின் தலைவராகவும் இருந்தார்.

பானீஷ் மூர்த்தியின் பணி நீக்கத்தின் இடைப்பட்ட காலத்தில் ஐகேட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக கிர்ஹட் வாட்சின்ஞ்ர் பதிவி வகித்தார். அவர் வேமுரியின் ஆலோசகராக இருப்பார் என்று அந்நிறுலனம் தெரிவித்தது.

பானீஷ் மூர்த்திக்கு பிறகு ஐகேட் நிறுவனத்தின் புதிய சிஇஒ அசோக் வேமுரி!!..

"ஐகேட் நிறுவனம், வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கும் முறை மற்றும் பன்முக வர்த்தகத்தில் இடுப்பட்டு சிறந்து விளங்குவதால், மென்பொருள் வர்த்தகத்தில் முதன்மை நிறுவனமாக விளங்குகிறது" என வேமுரி தெரிவித்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Ashok Vemuri takes over as CEO, president of iGate

Software services company iGate Corporation announced the appointment of Ashok Vemuri as its president and CEO on Thursday.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X