அதிக வருமான வரி செலுத்துவோருக்கான சிறப்பு முதலீட்டு திட்டங்கள்!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: நீங்கள் 20 அல்லது 30 சதவிகிதம் வருமான வரி செலுத்தும் பிரிவைச் சேர்ந்தவர்களானால், இதோ சில வரிச்சலுகை பெறக்கூடிய முதலீட்டுப் பத்திரங்கள். இவற்றில் முதலீடு செய்வதன் மூலம் மிகுதியான வரிச்சலுகை பெறமுடியும். இந்த முதலீட்டுப் பத்திரங்கள் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளன மேலும் இவற்றை வணிகச் சந்தையிலிருந்தே கொள்முதல் செய்யமுடியும்.

 

இவற்றின் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு வரி செலுத்தத் தேவையில்லை, அதாவது, இதிலிருந்து ஈட்டும் வட்டித்தொகை, வருமான வரி கணக்கீட்டு மொத்த வருமானத்தில் சேர்க்கப்பட மாட்டாது. இந்த முதலீட்டுபத்திர பிரிவில் குறிப்பிடப்படும் ஈட்டக் கூடிய இலாபங்கள் குறிப்பிடத்தக்கவை. பத்திர விலையைப் பொறுத்து வேறுபடும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

ஐஆர்எஃப்சி டாக்ஸ் ஃப்ரீ பாண்ட் – என்2

ஐஆர்எஃப்சி டாக்ஸ் ஃப்ரீ பாண்ட் – என்2

இந்திய ரயில்வே பைனான்ஸ் கார்பரேஷன் பாண்டுகள் (என் 2) 8.1% கூப்பன் விகிதத்தில் வழங்குகின்றன, இவற்றிற்கான வட்டி, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15ம் தேதி கொடுக்கப்படும். இந்த பாண்டுகள் ரூ.1058/- விலையில் வழங்கப்படுகின்றன, இதன் முதிர்வின் போது கிட்டதட்ட 8.29% இலாபம் ஈட்ட முடியும்.

ஹட்கோ (HUDCO) டாக்ஸ் ஃப்ரீ பாண்டுகள் – என்3 தொடர்

ஹட்கோ (HUDCO) டாக்ஸ் ஃப்ரீ பாண்டுகள் – என்3 தொடர்

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அபிவிருத்திக் கார்பரேஷன் (HUDCO) டாக்ஸ் ஃப்ரீ பாண்ட் என்3 தொடர், ரூ.1020/- விலையில் தற்போது தேசிய பங்குச்சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் முதிர்வின் போது, தற்போதுள்ள சந்தை விலையில், கிட்டத்தட்ட 8.46% இலாபம் ஈட்ட முடியும். இந்த பாண்ட் தற்போது 8.1% கூப்பன் விகிதத்தில் வழங்கப்படுகின்றன, இவற்றுக்கான வட்டி, ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 5ம் தேதி கொடுக்கப்படும்.

ஆர்.இ.சி டாக்ஸ் ஃப்ரீ பாண்ட் என்3
 

ஆர்.இ.சி டாக்ஸ் ஃப்ரீ பாண்ட் என்3

ஆர்இசி (REC) டாக்ஸ் ஃப்ரீ பாண்டுகள் என்3, ரூ.982/- விலையில் விற்பனை செய்யபப்டுகின்றன. இதன் முதிர்வில் 8.39% இலாபம் ஈட்ட முடியும். இந்த பாண்டுகள் டிசம்பர் 2022ல் முதிர்வடைகின்றன மற்றும் இதன் தற்போதைய கூப்பன் விகிதம் 7.22% ஆகும்.

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய டாக்ஸ் ஃப்ரீ பாண்ட் – என்1 தொடர்

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய டாக்ஸ் ஃப்ரீ பாண்ட் – என்1 தொடர்

தி என்எச்ஏஐ (NHAI)- என்1 தொடர் டாக்ஸ் ஃப்ரீ பாண்ட், 8.17% இலாப விகிதத்தை வழங்குகிறது, தற்போது இதன் சந்தை விலை ரூ.1079/- ஆகும். இந்த பாண்டுக்கான ஆண்டு வட்டி விகிதம் 8.20%, இந்த வட்டித் தொகை, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1ம் தேதி வழங்கப்படும். இந்த பாண்டுகள் ஜனவரி 2022இல் காலாவதியாகின்றன.

ஹட்கோ (HUDCO) டாக்ஸ் ஃப்ரீ பாண்டுட் – என்2 தொடர்

ஹட்கோ (HUDCO) டாக்ஸ் ஃப்ரீ பாண்டுட் – என்2 தொடர்

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அபிவிருத்திக் கார்பரேஷன் (HUDCO) டாக்ஸ் ஃப்ரீ பாண்ட் என்2, தற்போது ரூ.1029/- விலையில் விற்பனை செய்யப்படுகின்றன, இவை 8.34% வரை இலாபம் ஈட்டக் கூடியவை. தற்போது இந்த பாண்டுகள் 8.2% கூப்பன் விகிதத்தில் வழங்கப்படுகின்றன, இதற்கான வட்டி, ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 5ம் தேதி செலுத்தப்படும். இந்த டாக்ஸ் ஃப்ரீ பாண்ட் மார்ச் 2027 இல் காலாவதியாகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

5 tax free bond ideas for high tax paying individuals

If you are in the 20 or 30 per cent tax bracket, here are a few tax free bond ideas, in which you can get good tax free yields.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X