இந்தியாவில் மிகப்பெரிய சோலார் மின் உற்பத்தி நிலையம் அமைக்க திட்டம்!!!:

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஜெய்ப்பூர்: உத்தர பிரதேச மாநில அரசு, 4000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் மிகப்பெரிய சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையத்தை அமைக்க உள்ளது என கடந்த வெள்ளியன்று தெரிவித்தது, மேலும் இத்திட்டம், தனது பசுமைத் திட்டத்தின் ஒரு மைல் கல் என தெரிவித்தது.

 

ஹிந்துஸ்தான் சால்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின், துணை நிறுவனமான சம்பார் சால்ட்ஸ் லிமிட்டெட் நிறுவனத்திற்கு சொந்தமான 23,000 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த உற்பத்தி நிலையம் அமைக்கப்பட உள்ளது, மேலும் இது ஜெய்ப்பூரில் இருந்து 75கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

இந்தியாவில் மிகப்பெரிய சோலார் மின் உற்பத்தி நிலையம் அமைக்க திட்டம்!!!:

சோலார் எனர்ஜி கார்ப்ப்ரேஷன், பவர் கிரிட் கார்ப்பரேஷன், எஸ்ஜேவிஎன், சம்பார் சால்ட்ஸ் லிமிட் மற்றும் ராஜஸ்தான் எலக்ட்ரொனிக்ஸ் அன்ட் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் லிமிடெட் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து, பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (பெல்) நிறுவனம் இந்த திட்டத்தின் முதல் கட்டமாக 1,000 மெகாவாட் உற்பத்தி நிலையத்தை அமைக்க உள்ளது.

இத்திட்டத்தின் முதல் கட்டம் 2016இல் செயல்பாட்டுக்கு வரும். அனைத்து பணிகளும் முடிவடைந்தால், ஆண்டுதோறும் 6,000 மில்லியன் யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். நாட்டின் மின்உற்பத்தியை பலப்படுத்த கொண்டுவரப்பட்ட கோல்-ஃபயட் ஆலைகளுக்கான அல்ட்ரா-மெகா பவர் திட்டதை ஒத்ததாக இந்த மெகா சோலார் பவர் திட்டம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிரீன்ஹவுஸ் வாயு வெளிப்பாடுகளைக் குறைத்து, மறுசுழற்சி செய்யப்படும் சோலார் மின் சக்தி உற்பத்தியை அதிகரிக்கும் வழிமுறைகளை கொண்டுவருவதற்கு இந்தியா முற்படுகிறது, ஆனால் கட்டண விகிதம் ஒரு கேள்வியாக உள்ளது. 2022ஆம் ஆண்டில், 20,000 மெகாவாட் கிரிட்-கனெக்டெட் சூரியசக்தி மின் உற்பத்தி செய்ய ஜவாஹர்லால் நேரு நெஷனல் சோலார் மிஷன் திட்டமிட்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Bhel to build world’s biggest solar plant near Jaipur

The UPA government on Friday unveiled its biggest green dream of building the world's biggest solar power project with a capacity of 4,000 mw.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X