ஆர்.பி.ஐ கவர்னர் ரகுராம் ராஜன்: "சுப்பாராவ் வெர்ஷன் 2.0"!!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தொழில்துறை மற்றும் அரசாங்கத்தின் வற்புறுத்தல்களை பொருட்படுத்தாது வட்டி விகிதங்களை குறைக்க மறுத்து வந்தவரும், கழுகை ஒத்த கூர்மையான செயல்பாடுகளுக்கு பெயர் போனவரும், கெடுபிடியான முன்னாள் ஆர்பிஐ கவர்னருமாகிய சுப்பாராவின் பணி ஓய்வினால் தொழில்துறை சந்தோஷப்பட்டிருக்கக்கூடும்.

தொழிலதிபர்கள், அதிகமான வட்டி விகிதங்கள் தங்களின் சுயலாபத்தை பாதிப்பதனால் அதற்கு எதிராக குரல் உயர்த்துவதை மிக விரும்புகின்றனர்.

ஆனால் இதனை லட்சியம் செய்யாத முன்னாள் ஆர்பிஐ கவர்னரான சுப்பாராவ் அவர்கள் அமைச்சகம் மற்றும் தொழில்துறையின் வற்புறுத்தல்களுக்கு ஒருபோதும் அடி பணிந்ததில்லை. பணவீக்கத்துக்கு எதிராகப் போராடக்கூடிய பாதையைத் தேர்ந்தெடுத்த அவர், தங்கள் குறைகளை முறையிடுவதற்குக் கூட வழியின்றி தவிக்கும் ஏழை மக்களின் குரலுக்கு செவி மடுக்க வேண்டியது தம் கடமை என்று கூட ஒரு முறை தெரிவித்துள்ளார்.

சுப்பாராவ்

சுப்பாராவ்

"நாட்டில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பணவீக்கத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏழை மக்களுக்கு இந்த பணவீக்கம், வரி போன்றதாகும். நம்மைப் போன்றவர்களைக் காட்டிலும் ஏழை மக்களையே இது வெகுவாக பாதிக்கிறது. அவர்களின் மௌனக்குரல்களுக்கு செவி சாய்ப்பது நம் கடமை." என்று வட்டி விகிதங்களை குறைக்கக் கோரும் இந்தியா இன்க் -இன் வற்புறுத்தல் பற்றிய ஒரு கேள்விக்கு பதிலளிக்கையில் சுப்பாராவ் இவ்வாறு கூறினார்.

ரகுராம் ராஜன்

ரகுராம் ராஜன்

தற்போது, ஆர்பிஐயின் புதிய கவர்னராக பொறுப்பேற்றுக் கொண்டிருக்கும் ரகுராம் ராஜன், முன்னாள் கவர்னரான சுப்பாராவின் பாதையையே பின்பற்றிச் செல்ல தீர்மானித்திருக்கிறார். சுவாரஸ்யமாக, வட்டி விகிதங்களைக் குறைத்து, வளர்ச்சியை முன்னோக்கி நகர்த்த முனையும் சமாதானப் புறாவாக செயல்படக்கூடிய கவர்னரை எதிர்பார்த்த தொழில்துறைக்கு இது பெருத்த ஏமாற்றமே.

ரகுராம் ராஜனின் பஞ்
 

ரகுராம் ராஜனின் பஞ்

"ஆம், நாம் அனைவரும் பணவீக்கத்துக்கு எதிரானவர்களே... பணவீக்கத்திற்கு எதிரான நிலைப்பாட்டுக்கான அடையாளத்தை வெளிப்படுத்தவதே நமது நோக்கமாக இருக்க வேண்டும்." என்று ஆர்பிஐ கவர்னராக பொறுப்பேற்றுக் கொண்ட பின்னான அவரது முதல் பாலிஸி ரிவ்யூ அறிவிப்பின் போது நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் டாக்டர்.ராஜன் தெரிவித்துள்ளார்.

தற்போது அவர் பணவீக்கத்துக்கான புதிய ஹீரோ திகழ்கிறார்.

 

அவர் எடுத்த முடிவு சரியா?

அவர் எடுத்த முடிவு சரியா?

தொழில்துறை சற்றும் எதிர்பார்க்காதவாறு ராஜன் வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளார். அவர் எடுத்த முடிவு நிச்சயம் சரியானதே. சுமார் 10% அளவிலேயே சுற்றி வந்து கொண்டிருக்கும் சிபிஐ (CPI) பணவீக்கம், நிச்சயம் பொதுமக்களை பாதிக்கக்கூடிய ஒன்றாகும். கட்டமைப்பு சார்ந்த விஷயமான பணவீக்கத்தை சீர்செய்ய, வட்டி விகிதங்களின் அதிகரிப்பு எவ்விதத்திலும் உபயோகப்படாது என்பது ஒத்துக்கொள்ளக்கூடியதே. ஆனால், வட்டி விகிதங்களை குறைத்தால் பணவீக்கம் அதிகரித்து, நிலவரம் மேலும் மோசமடையும் சாத்தியக்கூறு உள்ளது.

உணவுப்பொருட்களின் விலையேற்றம்

உணவுப்பொருட்களின் விலையேற்றம்

உணவுப்பொருட்களின் விலையேற்றம் மக்களை பெரும் அவஸ்தைக்குள்ளாக்கி வருகிறது; வெங்காய விலை மக்களை கண்ணீர் விடச் செய்கிறது. இது போன்ற சூழலில், வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டால் அது உணவுப் பொருட்களின் விலைகளை மேலும் உயரச்செய்யும்.

எம்எஸ்எஃப் குறைப்பு

எம்எஸ்எஃப் குறைப்பு

சொல்லப்போனால், வங்கி அமைப்பில் லிக்விடிட்டியை எளிதாக்கக்கூடியதான எம்எஸ்எஃப் குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டதன் மூலம் ராஜன் அவர்கள் நிதித்துறை மற்றும் தொழில்துறைக்கு பெரும் உபகாரம் செய்துள்ளார்.

உண்மையில் ராஜன் ஹீரோ தான்

உண்மையில் ராஜன் ஹீரோ தான்

ராஜன், அவரது முதல் பாலிஸி கூட்டத்தில் மிகச் சரியாக நடந்து கொண்டுள்ளார். தொழில்துறை மந்தமாக உள்ளது என்பதும், பங்குச்சந்தை மோசமான நிலையில் உள்ளது என்பதும் வேறு விஷயம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Raghuram Rajan: India has a new anti-inflation cheerleader

New RBI Governor Raghuram Rajan, has chosen to follow the same path of the former RBI Governor.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X