வங்கி சேமிப்பு கணக்கில் கிடைக்ககூடிய வரி பயன்கள்!!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: ஒரு நிதியாண்டில், வங்கி சேமிப்பு கணக்கில் இருந்து ரூ.10,000 வரை ஈட்டப்படும் வட்டித் தொகைக்கு, வருமான வரி சட்டம் 1961 பிரிவு 80டிடிஏ-வின் கீழ் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் 2012ஆம் ஆண்டுன் நிதி மசோதா மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது, இந்த பிரிவின் கீழ் தனிநபர்கள் மற்றும் எச்யுஎஃப் வரி செலுத்துவோருக்கு வரி விலக்கு அனுமதிக்கப்படுகிறது. ஆகவே, நிறுவனங்கள் அல்லது தனிநபர் அமைப்பு அல்லது சங்கம் ஆகியவற்றுக்கு இந்த பிரிவின் கீழ் வரிச்சலுகை வழங்குவதில்லை.

 

மதிப்பீட்டு ஆண்டு 2013-2014 இல் இருந்து, இந்த வருமான வரிச்சட்ட பிரிவு செயல்ப்படுத்தப்படுகிறது. இது வங்கி சேமிப்பு கணக்குகளுக்கு மட்டும் பொருந்தும், கால வைப்பு மற்றும் வைப்புச் சான்றிதழ்களுக்கு இது பொருந்தாது.

 

பிரிவு 80 டிடிஏ யின் வேறு சில அம்சங்கள்.

1. பிரிவு 80சி யின் படி அனுமதிக்கப்பட்டுள்ள விலக்கு தொகைக்கு மேலாகவே 80டிடிஏ வரி விலக்கு தொகை அனுமதிக்கப்பட்டுள்ளது.

2. ஒரு தனிநபர் அல்லது எச்யுஎஃப் இன் அனைத்து சேமிப்பு கணக்களையும் ஒன்று சேர்த்து, மொத்தமாக ரூ.10,000 வரி விலக்கு அளிக்கப்படுகிறது. உதாரணமாக, ஒருவர் 3 வேறுபட்ட வங்கி சேமிப்பு கணக்குகளை வைத்திருக்கிறார், ஒவ்வொன்றிலிருந்தும் ஒரு குறிப்பிட்ட நிதியாண்டில் ரூ.5000 வட்டி வருமானம் கிடைக்கிறது. எனவே பிரிவு 80டிடிஏ யின் கீழ் அவருக்கு ரூ.10,000 வரி விதிப்பு அளிக்கப்படும், மீதிமுள்ள ரூ.5000கதிற்கு அவர் வருமான வரி செலுத்த வேண்டும்.

3. ஒருவரது வங்கி சேமிப்புக் கணக்கின் மீதான வட்டி வருமானம் ரூ.10,000திற்கு மேல் இருந்தாலும், அவரது மொத்த வருமானம், வரி வரம்புக்கு கீழிருந்தால் அவர் வருமான வரித் தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

வங்கி சேமிப்பு கணக்கில் கிடைக்ககூடிய வரி பயன்கள்!!!

பிரிவு 80டிடிஏ யின் கீழ் எவ்வாறு வரி விலக்கு கிளைம் செய்ய முடியும்?

'மற்ற ஆதாரங்களில் இருந்து கிடைக்கும் வருமானம்' என்ற தலைப்பின் கீழ் வங்கி சேமிப்பு கணக்கு, வட்டி வருமானத்திற்கு வரி விதிக்கப்படுகிறது. உங்கள் மொத்த வருமானத்துடன் இந்த வட்டி தொகையையும் சேர்க்க வேண்டும், பின்னர் பிரிவு 80டிடிஏ யின் கீழ் வரி விலக்கு கிளைம் செய்து கொள்ளலாம்.

உதாரணமாக, ஒருவர் வங்கி கணக்கில், ஒரு குறிப்பிட்ட நிதி ஆண்டில் சராசரியாக ரூ. 2.5 லட்சம் பராமரித்து வருகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். உங்களுக்கு ஆண்டு வட்டி விகிதமாக 4% கொடுக்கப்பட்டால், கிடைக்கும் வட்டி வருமானம் ரூ.10,000க்கு வரி விலக்கு உண்டு. இருப்பினும், வங்கியில் அல்லது தபால் அலுவலகத்தில் அல்லது கூட்டுறவு சங்கத்தில் நீங்கள் வைத்திருக்கும் வங்கி சேமிப்பு கணக்கின் மீது ரூ.10,000க்கும் மேல், உதாணமாக ரூ.15,000 வட்டி வருமானம் கிடைத்தால், பிரிவு 80டிடிஏ ரூ.10,000க்கு வரி விலக்கு கிளைம் செய்ய முடியும், மீதி ரூ.5000க்கு வரி செலுத்த வேண்டும்.

எனவே, பிரிவு 80டிடிஏ-வின் கீழ் வரி விலக்கு உள்ளதால், இனிமேல் வருமான வரி கணிப்பிடும் போது, வங்கி சேமிப்பிலிருந்து கிடைக்கும் சிறிய வட்டி வருமானத் தொகையை மொத்த வருமானத்துடன் சேர்க்க வேண்டிய அவசியமில்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What is the tax exemption limit on a savings account?

The interest amount earned on a savings bank account up to Rs.10,000 in one financial year is now eligible for income tax deduction under section 80TTA of the Income Tax Act, 1961.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X