இதுல முதலீடு பண்ணா லாபம் பிச்சிக்கும்..!

By Super Admin
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: செல்வந்தராக வேண்டும் என்ற ஆசை யாருக்குதான் இல்லை. மனிதனாக பிறந்த அனைவருக்கும் இந்த ஆசை கண்டிப்பாக உண்டு. இதை செய்யலாமா அதை செய்யலாமா என்று நினைத்து சிலர் எதையும் செய்யாமல் இருப்பர். சிலர் அது இது என்று முழுமையான புரிதல் இல்லாமல் பணத்தை தொலைத்து விடுவர். அறிவுபூர்வமாக சிந்தித்தாலே போதும் நாம் செய்த முதலீட்டில் ஏக லாபத்தை பெற முடியும்.

 

ஒரே இரவில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையை விட்டு, எப்படி படிப்படியாக உயர வேண்டும் என்பதை பற்றி சிந்திக்க வேண்டும். சில வழிகள் உங்களை ஒரே இரவில் செல்வந்தராகவும் ஆக்கும். அதற்கு அறிவுபூர்வமாக சிந்தித்து முதலீடு செய்தாலே போதும்.

பார்க்லேஸ்

பார்க்லேஸ்

உலக நிதி சேவையில் முன்னணி நிறுவனமான பார்க்லேஸ் (Barclays) செய்த ஆய்வில் கலைப் பொருட்கள் மற்றும் விஸ்கி போன்ற மதுபானங்களில் முதலீடு செய்பவர் அதிக லாபம் அடைவதாக தெரிகிறது. இது போன்ற சில முக்கிய முதலீட்டு பொருட்கள் மற்றும் திட்டங்களை Barclays வெளியிட்டுள்ளது. அவற்றை பற்றி இங்கு காண்போம்.

பங்கு சந்தை

பங்கு சந்தை

பங்கு சந்தை பொருத்த வரை அவை வளர்ச்சியை கொடுப்பதாக அமைதல் வேண்டும். சில பங்குகள்நெடுநாள் வருவாயையும், சில பங்குகள் குருகிய கால வருமானத்தையும் ஈட்டித்தருவதாக அமைந்திருக்கும். நீங்கள் பங்கு சந்தை டெபாஸிட் செய்யும் பொழுது நிறுவனத்தை கருத்தில் கொண்டு எத்தனை ஆண்டு காலம் காத்திருக்க வேண்டும் என்பதை கவனமாக முடிவு செய்தால் லாபம் நிச்சியம்.

நினைவில் கொள்ள: புளு சிப் ஸ்டாக்ஸ் சரியாக நிலையில் இல்லை. ஆகையால் சந்தை நிலவரத்தை கவனமாக கண்காணிக்க வேண்டும்.

 

 

கலை
 

கலை

கலை நயம் மிக்க பொருட்களும், வரை படங்களும் உங்களுக்கு லாபத்தை ஈட்டி தரும் என்பதை எப்பொழுதாவது நினைத்து பார்த்துள்ளீர்களா? ஆமாம், அவை லாபத்தை பெரும்பாம்மையாக தருகின்றது. முதலில் பல அரிய கலை பொருட்களை சேகரித்தல் வேண்டும். பின் அதன் லாபத்திற்கும் தேவைக்கும் ஏற்ப அதை உபயோகப் படுத்த வேண்டும். கலையை வைத்து லாபம் பார்க்க வேண்டும் என்றாலும் லாபத்தையும் அவை ஈட்டிதருபவை என்பதை நினைவில் வைத்து கொள்ள வேண்டும்.

நிலம்

நிலம்

தங்கம், வெள்ளி போன்று லாபம் பெற நிலத்தின் மீதும் பணம் செலவு செய்ய முடியும். ரியல் எஸ்டேட் வியாபாரம் என்பது குறைந்த விலைக்கு நிலத்தை வாங்கி, சில காலத்திற்கு பிறகு லாபத்தை பார்த்து விற்பது. இதில் தற்பொழுது மிகுந்த லாபம் கிடைகின்றது. சென்னை, மும்பை, டெல்லி போன்ற மெட்ரொபாலிடன் நகரங்களில் ரியல் எஸ்டேட் சந்தை கடும் சூட்டை கிளப்பி கொண்டு இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே.

வைரம்

வைரம்

கண்ணை பரிக்கும் வைரம், எண்ண முடியாத லாபத்தை கொடுக்கும். இதை வாங்குவோர் கண்டிப்பாக பலன் அடைவர். முன்பு வைரம் வாங்குவதை பற்றிய அறிவோ, பழக்கமோ நம் மக்களிடம் இல்லை, ஆனால் தற்பொழுது அனைவரும் பரவலாக வைரத்தை வாங்குவதை நாம் காண முடிகின்றது. சிரிய கல்லில் பெரிய லாபத்தை பார்க்க முடியும். அந்த மாற்றத்திற்கு காரணம் தங்கம், வெள்ளியின் விலை அதிகரிப்பே.

வைன் மற்றும் விஸ்கி

வைன் மற்றும் விஸ்கி

வைன் விஸ்கியில் லாபம் பார்க்க முடியுமா? என்ற கேள்வி மக்களிடையே அதிகமாக இருந்தது. ஆனால் தற்பொழுது இதில் லாபம் அதிகம் என்பதை உணர்ந்து கொண்டனர். மிகுதியான வளர்ச்சியை கொடுக்கா விட்டாலும் கண்டிப்பாக லாபம் உண்டு என்பதை மறுக்க முடியாது. ப்ரான்ஸ் நாட்டின் வைன் மற்றும் விஸ்கிக்கு கிராக்கி அதிகம். அதன் மீது பணம் செலவிட்டாவில் கூடுதல் லாபத்தை திரும்பப் பெற முடியும். இதை வாங்கும் போது அது தயாரிக்கப் பட்ட வருடத்தை பார்க்க வேண்டும். இரண்டாயிரத்து வருடத்தை சேர்ந்தவைகள் நல்ல மதிப்பு அடங்கிய பானமாக உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Invest In These 5 Assets To Become Richie Rich

Every individual has an ardent wish to become rich. Well! Less spending, more saving and investing in Mutual Funds alone won’t make you hit the jackpot.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X