ஆட்குறைப்பு திட்டத்தை அமல்படுத்தும் இன்போசிஸ்!!! பயத்தில் ஊழியர்கள்....

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இன்ஃபோசிஸ் நிறுவனம், ஆபரேஷனல் செலவுகளை குறைக்க ஆன்சைட்டில் இருக்கக்கூடிய தலைமை அதிகாரிகள் மற்றும் சப்-காண்ட்ராக்டர்களின் எண்ணிக்கையை குறைக்க உத்தேசித்து வருவதாக இந்நிறுவனத்தின் தலைவர் திரு.என்.ஆர்.நாராயண மூர்த்தி தெரிவித்துள்ளதாக பார்க்லேஸ் (Barclays) கூறுகிறது.

 

"ஊழியர்களுக்கென செலவிடும் தொகையை குறைக்க உதவும் மூன்று களங்களை நிர்வாகம் கண்டறிந்துள்ளது," என்று இன்ஃபோசிஸ் நிர்வாக சேர்மனாகிய மூர்த்தியுடனான அதன் ஆலோசனை அதிகாரிகளின் சந்திப்பு பற்றிய ஒரு அறிக்கையில் கூறியுள்ளது.

"ஆன்சைட்டில் இருக்கும் மூத்த ஊழியர்களின் எண்ணிக்கையை அதன் பொறுப்பு விகிதாச்சாரத்தை பகுத்தாராய்ந்து பார்த்து குறைத்தல்; உள்ளார்ந்த பயிற்சியை மேம்படுத்துவதன் மூலம் சப்-காண்ட்ராக்டர்களை உபயோகிப்பதைக் குறைத்தல்; மற்றும் ஆன்சைட் லொகேஷன்களில் பிசினஸ் எனேப்ளிங் ஃபங்க்ஷன்களில் பணியாற்றி வரும் ஊழியர்களை குறைத்தல்," என்ற நிர்வாகத்தின் விலைகுறைப்பு உத்திகளைப் பற்றி தெளிவாக விளக்கியுள்ளது பார்க்ளேய்ஸ்.

ஆட்குறைப்பு திட்டத்தை அமல்படுத்தும் இன்போசிஸ்!!! பயத்தில் ஊழியர்கள்....

இந்தியாவின் இரண்டாவது பெரிய சாஃப்ட்வேர் சர்வீஸ் ஏற்றுமதி நிறுவனமான இன்போசிஸ், இந்நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை ஜூன் மாதத்தில் மீண்டும் ஏற்றுக்கொண்டுள்ள மூர்த்தி, அவரது வருகையைத் தொடர்ந்து சமீபத்தில் நிகழ்ந்த மூத்த ஊழியர்களின் வெளியேற்றம், நிறுவனத்தின் மீது மிகக் குறைந்த அளவிலான பாதிப்பையே ஏற்படுத்தியுள்ளது என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், இப்பணிநீக்கத்தினால் ஏற்படக்கூடிய இடைவெளிகளை நிரப்புவதற்கு இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் அனுபவமிக்க மேனேஜர்கள் ஏராளமானோர் அடங்கிய முழு கூட்டம் ஒன்று தயாராக உள்ளது என்றும் அவர் தெரிவித்ததாக பார்க்ளேய்ஸ் குறிப்பிட்டுள்ளது.

ஆனால் கடந்த சில வருடங்களாக இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து உயர் பதவி வகிக்கும் உழியர்கள் ராஜினாமா செய்த வண்ணம் உள்ளனர். இம்மாதத்தின் தொடக்கத்தில், வட அமெரிக்காவிற்கான யுடிலிட்டீஸ் அண்ட் ரிசோர்சஸ் ஹெட் ஆன ஸ்டீஃபன் ஆர் ப்ரட் ராஜினாமா செய்வதாக அவரது ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார்.

ஆட்குறைப்பு திட்டத்தை அமல்படுத்தும் இன்போசிஸ்!!! பயத்தில் ஊழியர்கள்....

செப்டம்பர் மாதத்தின் போது, ஆஸ்திரேலிய பிபிஓ நிறுவனத்தின் விற்பனை துறையின் தலைமை நிர்வாக அதிகாரி கார்த்திக் ஜெயராமனும், லேட்டின் அமெரிக்க பிபிஓ தலைமை அதிகாரி ஆகிய ஹம்பர்டோ ஆண்ட்ராடேயும் ராஜினாமா செய்துள்ளனர்.

 

ஆகஸ்ட் மாதத்தில், அமெரிக்காவின் தலைமை அதிகாரி அஷோக் வெமூரி, ராஜினாமா செய்து இன்போசிஸ் நிறுவத்திற்கு போட்டி நிறுவனமான ஐகேட் நிறுவனத்தில் குலோபல் ஹெட் ஆக பதவி ஏற்றார்.

இதே மாதத்தில் இன்ஃபோசிஸ் வைஸ் பிரசிடென்ட்டும், அமெரிக்காக்களின் ஃபைனான்ஷியல் சர்வீசஸ் ஹெட்டுமாகிய சுதிர் சதுர்வேதியும் ராஜினாமா செய்துள்ளார். குளோபல் சேல்ஸ் ஹெட் ஆக பணியாற்றிய பஸப் ப்ரதான், ஜூலை மாதத்தில் இந்நிறுவனத்தை விட்டு வெளியேறியுள்ளார்.

நிறுவனத்தில் செயல்படுத்தப்படவிருக்கும் இந்த விலைகுறைப்பு நடவடிக்கைக்கு சுமார் 21 மாதங்கள் பிடிக்கும் இத்திட்டத்தை விரைவாக இது நடைமுறைப்படுத்தப்படும் சாத்தியக்கூறுகள் உள்ளதாக தான் நினைப்பதாகவும் மூர்த்தி கூறியுள்ளார். மேலும், "இந்த விலைக் குறைப்பு உத்தியின் ஆரம்பநிலை பயன்கள் சிலவற்றை, 2014 மார்ச் காலாண்டிற்குள் இந்நிறுவனம் பெறுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன," என்றும் அவர் கூறியதாக பார்க்ளேய்ஸ் கூறுகிறது.

இன்ஃபோசிஸ் நிறுவனம் அதன் நிதி செயல்பாட்டை மேம்படுத்தும் வண்ணம் அதன் சாஃப்ட்வேர் டெலிவரியையும், விற்பனை ஆற்றலையும் மேம்படுத்தி வருவதாகவும் மூர்த்தி தெரிவித்ததாக அந்த அறிக்கை கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Infosys identifies three areas to cut employee costs

Infosys chief N.R. Narayana Murthy has said the company is looking at reducing the number of top officials and subcontractors at onsite locations in a bid to reduce operational costs.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X