ஐஐடி மெட்ராஸில் கலக்கட்டும் கேம்பஸ் இன்டர்வியூ!!! பன்மடங்கு உயர்ந்த சம்பளம்...

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: ஒவ்வொரு ஆண்டும் சென்னை ஐ.ஐ.டி கல்லுரியில் பயிலும் மாணவர்கள் கேம்பஸ் இன்டர்வியூ நடக்கும். இதில் உலகத்தில் புகழ் பெற்ற தலைசிறந்த நிறுவனங்கள் ஆட்சேர்ப்பில் ஆர்வமாக ஈடுபடுவார்கள்.

 

இந்த ஆட்சேர்ப்பில் தகுதி பெறும் மாணவர்களுக்கு அதிகப்படியான சம்பளம் அளிக்கப்படும், ஆனால் இந்த ஆண்டு ஊதியத்தொகை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. அமெரிக்காவில் வேலை செய்வதற்காக ஒரு மாணவருக்கு வழங்கப்படும் உயர்ந்தபட்ச ஊதியத்தொகை (டாலரில்) 40 சதவிகிதம் அதிகரித்துள்ளது, அதேவேளை இந்தியாவில் வேலை செய்வதற்காக வழங்கப்படும் ஊதியத்தொகை இரட்டிப்பாகியுள்ளது.

பன்நாட்டு நிறுவனங்கள்

பன்நாட்டு நிறுவனங்கள்

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டில் வெளிநாடுகளில் வேலை செய்ய உள்ள மாணவர்களுக்கு உயர்ந்தபட்சமாக ஊதியத்தொகை 1,50,000 டாலரிலிருந்து 2,10,000 டாலராக உயந்துள்ளது.

உள்நாட்டு நிறுவனங்கள்

உள்நாட்டு நிறுவனங்கள்

உள்நாட்டில் வழங்கப்படும் உயர்ந்தபட்ச ஊதியத்தொகை கிட்டத்தட்ட 70 சதவிகிதம் உயந்துள்ளது, அதாவது கடந்த வருடம், ஆண்டுக்கு ரூ.28.8 லட்சம் வழங்கப்பட்டது, இந்த ஆண்டு இது ரூ.48.6 லட்சமாக உயர்ந்துள்ளது என சென்னை ஐஐடியின் துணை பதிவாளர்(மாணவர் சேர்ப்பு மற்றும் வேலைவாய்ப்பு), ஓய்வுபெற்ற லெப்டினல் கேணல் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

நிறுவனத்தின் கொள்கை

நிறுவனத்தின் கொள்கை

கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பற்றி அவரிடம் கேட்டபோது, "நிறுவனத்தின் கொள்கையின் படி வேலைவாய்ப்பு வழங்கிய நிறுவனத்தின் பெயரையோ அல்லது தேர்வுசெய்யப்பட்ட மாணவரின் பெயரையோ வெளியிட முடியாது" என அவர் கூறினார்.

83 மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு
 

83 மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு

சாம்சங் எலக்ட்ரோனிக்ஸ், எபிக், மைக்ரோசாப்ட் இந்தியா ஆர்&டி, ஆறக்கல் மற்றும் கூகுள் ஆகியவவை கேம்பஸ் ஆட்சேர்ப்புக்கு வந்திருந்த நிறுவனங்களாகும், இதில் 83 மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன என ஜெயக்குமார் கூறினார்.

பதிவு செய்யப்பட்ட மாணவர்கள்

பதிவு செய்யப்பட்ட மாணவர்கள்

கடந்த ஆண்டில் கேம்பஸ் ஆட்சேர்ப்புக்கு வந்திருந்த நிறுவனங்கள் 22 ஆகும், நாள் முடிவின் போது 95 வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டன. கடந்த ஆண்டில் 1,282 மாணவர்கள கேம்பஸ் ஆட்சேர்ப்பில் பதிவுசெய்யப்பட்டனர், இந்த ஆண்டில் ஆட்சேர்ப்பு தேதி வரை 1,366 மாணவர்கள் பதிவுசெய்யப்பட்டிருந்தனர்.

265 நிறுவனங்கள்

265 நிறுவனங்கள்

கடந்த ஆண்டில் பதிவுசெய்த 333 நிறுவனங்களில் 221 நிறுவனங்கள் கேம்பஸ் ஆட்சேர்ப்புக்காக வந்திருந்திருந்தன, இந்த ஆண்டில், இதுவரை 265 நிறுவனங்கள் பதிவுசெய்துள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.

ஃபேஸ்புக், கூகுள் இன்னும் பல

ஃபேஸ்புக், கூகுள் இன்னும் பல

பாஸ்டன் கன்சல்டிங் குரூப், டர் பேங்க் குரூப், கோல்ட்மேன் சாக்ஸ், ஐடிசி லிமிட்டெட், மெக்கின்சே, கூகுள் மற்றும் ஃபேஸ்புக் ஆகியவை கடந்த ஆண்டில் கேம்பஸ் ஆட்சேர்ப்புக்கு வந்திருந்த நிறுவனங்களில் சில.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Rs 48.6 lakh salary offer at IIT-Madras placements

It is a bounty for the top pick at this year’s campus recruitment at IIT Madras. The highest pay offered (in dollar) for the student to work in the US increased by 40 per cent.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X