3 சக்கர வாகனம் வாங்க கார்பொரேஷன் வங்கி போங்க!!! பஜாஜ் ஆட்டோவின் அதிரடி திட்டம்...

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

3 சக்கர வாகனம் வாங்க கார்பொரேஷன் வங்கி போங்க!!! பஜாஜ் ஆட்டோவின் அதிரடி திட்டம்...
மும்பை: கார்பொரேஷன் வங்கி, பஜாஜ் ஆட்டோ நிறுவனத்துடன் இனைந்து நாடு முழுவதும் மூன்று சக்கர வாகனக் கடன் வழங்க ஒப்பந்தத்தை கையெழுத்திட்டுள்ளது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கார்பொரேஷன் வங்கி பொது மேலாளர் வி எஸ் கார்த்திகேயன் மற்றும் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் வர்த்தக வாகனங்கள் துறை உபதலைவர் சி கே ராவ் ஆகியோரால் கையெழுத்திடப்பட்டது.

 

இதன் மூலம் கார்பொரேஷன் வங்கி பஜாஜ் நிறுவனத்தின் மூன்று சக்கர வாகனங்களுக்கு விரும்பத்தக்க கடனாளராக விளங்கும். மேலும் கார்பொரேஷன் வங்கி வாடிக்கையாளர்களுக்கு பயன் அளிக்கும் வகையில் குறைந்த வட்டியிலும், நீண்ட கால தவனை முறையில் கடன் வழங்க திட்டமிட்டுள்ளது.

"எங்கள் வங்கி மதிப்புக் கூட்டப்பட்ட மற்றும் புதிய சில்லறை வர்த்தக சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு தருவதில் முன்னோடியாக உள்ளது. இந்த ஒப்பந்தம் அந்த பாதையில் அடுத்த கட்டம்" என்று தெரிவித்த திரு கார்த்திகேயன் மேலும் கடனை பரிசீலிப்பதிலும் வழங்குவதிலும் அவர்கள் எடுத்துக்கொள்ளும் அவகாசம் மிகவும் குறைந்ததும் சிறந்ததும் ஆகும் என்றும் தெரிவித்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Corporation Bank inks deal with Bajaj Auto

Corporation Bank has signed a memorandum of understanding with Bajaj Auto Ltd for financing its three-wheelers across the country.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X