டாடா பவர் நிறுவனத்தின் முதல் பன்னாட்டு ஒப்பந்தம் வெற்றிகரமாக துவங்கியது!!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: இந்தியாவின் மிகப்பெரும் தனியார் துறை மின்உற்பத்தி நிறுவனமான டாடா பவர் வியட்நாமில் மின்உற்பத்தி நிலையம் அமைக்க அந்நாட்டு அரசுடன் ஒப்பந்தத்தை கையெழுத்திட்டுள்ளது. இந்த மின்உற்பத்தி நிலையம் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியினால் அந்நாட்டின் ஸாக் ட்ரங்க் (Soc Trang) மாகாணத்தில் இயங்கும்.

 

டாடா பவர் நிறுவனம் இது தொடர்பாக இந்த வருடத்தின் முற்பகுதியில் நடத்திய ஆய்வினை அடுத்து அந்நாட்டு அரசு இத்திட்டத்தினை டாடா பவர் ஒப்படைத்துள்ளது. டாடா பவர் ஊடகங்களுக்கு அளித்த செய்தியில் இதைப்பற்றிய மதிப்பீடுகளை வெளியிடவில்லை. ஒப்பந்த விதிகளின்படி டாடா பவர் இந்த திட்டத்தை, ஆய்வு செய்தல், உரிமை கொள்ளுதல் மற்றும் மாற்றித்தருதல் முறையில் மேற்கொள்ளும்.

டாடா பவர் நிறுவனத்தின் முதல் பன்னாட்டு ஒப்பந்தம் வெற்றிகரமாக துவங்கியது!!!

இந்தியாவிற்கு வெளியில் டாடா பவர் மேற்கொள்ளும் முதல் திட்டம் இந்த லாங்க் ஃபூ 2 மின் திட்டமாகும். டாடா குழுமத்தின் அங்கமான இந்நிறுவனம் தான் பன்னாட்டு செயல்பாடுகளை அதிகரிக்கும் முயற்சியில் தென்னாபிரிக்கா, ஜோர்ஜியா மற்றும் தென் கிழக்கு ஆசியா ஆகிய நாடுகளில் திட்டங்களை நிறைவேற்றி வரும் வேளையில் நிலக்கரி தட்டுப்பாடு, சமூக ரீதியான விலை நிர்ணயங்கள் ஆகியவற்றால் லாபத்தை இழந்து வருகிறது. இங்கே அதே வேளையில் இந்திய பொருளாதாரமும் மிகவும் குறைந்த வளர்ச்சியோடு இருப்பது குறிப்பிடத்தக்கது.

அந்நிறுவனத்தின் பிற பன்னாட்டு திட்டங்களில் அண்மையில் கையெழுத்திட்டுள்ள க்ளீன் எனெர்ஜி இந்‌வெஸ்ட் ஏஎஸ் மற்றும் ஐஎஃப்சி இன்ப்ரா வென்சர்ஸ் உடனான துருக்கிக்கு மின்சாரம் வழங்கும் 400 மெகாவாட் நீர்மின் திட்டம் ஆகியவை இதில் அடங்கும். இதுதவிர டாடா பவர் தற்போது பூட்டானில் 126 மெகாவாட் நீர்மின் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது டாடா பவர்.

டாடா பவர் நிறுவனத்தின் இன்றைய பங்கு விலை ரூ.90.70. இன்னும் இரண்டு வருடங்களுக்கும் இந்நிறுவனத்தின் வளர்ச்சி சீராக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால் நீண்ட கால முதலீட்டு நோக்கில் அதில் முதலீடு செய்யதால், லாபம் கண்டிப்பாக ஈட்ட முடியும்.

 
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tata Power inks MoU to build power plant in Vietnam

Tata Power, has signed an MoU with the government of Vietnam for developing a thermal power plant that will run on imported coal.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X