தமிழக சர்க்கரை உற்பத்தி கசக்கிறது!!! தண்ணீர் பற்றாக்குறை...

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: தமிழ்நாட்டில் சர்க்கரை உற்பத்தி இந்த ஆண்டு கடும் சரிவை சந்தித்தது. சென்ற ஆண்டை ஒப்பிடுகையில் சர்க்கரை உற்பத்தி 60 விழுக்காடு அளவிற்கு கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது என சர்க்கரை தொழில் விவரங்கள் தெரிவிக்கின்றன.

 

இரண்டு வருடங்களாக நீடிக்கும் தண்ணீர் பற்றாக்குறை மற்றும் குறைந்த பருவமழை ஆகியவற்றின் காரணமாக கரும்பு பயிரிடுதலும் சர்க்கரை உற்பத்தியும் பாதிப்படைந்துள்ளன. நடப்பு 2013-14 அம ஆண்டின் அக்டோபர் மாதத்தில் துவங்கிய பருவத்தில் சர்க்கரை உற்பத்தி அளவு 13 லட்சம் டன்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கரும்பு பிழித்தல்

கரும்பு பிழித்தல்

நடப்பாண்டின் கரும்பு பதிவு விவரங்கள் தமிழ்நாட்டில் மற்றுமொரு உற்பத்தி வீழ்ச்சியை 2013-14 ஆம் ஆண்டில் காட்டுவதாக உள்ளன. நடப்புப் பருவ கரும்பு பிழித்தல் வேலைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன.

5.5 லட்சம் ஏக்கர்

5.5 லட்சம் ஏக்கர்

அதிகாரபூர்வ தகவல்கள் படி விவசாயிகள் 5.5 லட்சம் ஏக்கர்களுக்கு மேலான பயிரிடுதலை தனியார், அரசு மற்றும் கூட்டுறவு உள்ளிட்ட சர்க்கரை ஆலைகளிடம் பதிவுசெய்துள்ளனர். இது கடந்த ஆண்டின் 7.2 லட்சம் ஏக்கர்களை ஒப்பிடுகையில் 24 சதவிகிதம் குறைவாகும். இது தோராயமாக 158 லட்சம் டன்கள் சர்க்கரை உற்பத்தியை குறிக்கும்.

குறைந்த பருவ மழை

குறைந்த பருவ மழை

சர்க்கரை ஆலை வல்லுனர்கள் தகவல்கள் படி, இந்த வீழ்ச்சி தொடர்ந்த தண்ணீர் பற்றாக்குறை மற்றும் பருவமழை குறைவு ஆகிய காரணங்களால் ஏற்பட்டுள்ளது.

தனியார் துறை ஆலைகள்
 

தனியார் துறை ஆலைகள்

கரும்புப் பதிவுகள் 71 சதவிகிதம் தனியார் ஆலைகளிலும் மீதம் அரசு மற்றும் கூட்டுறவு ஆலைகளிலும் செய்யப்பட்டுள்ளன. தற்போது 43 தனியார் ஆலைகளும், 18 அரசு மற்றும் கூட்டுறவு அலைகளும் இயங்கிவருகின்றன. புதிய கரும்பு பதிவுகள் குறிப்பிடத்தக்க வகையில் 45 சதவிகிதம் அளவிற்கு தனியார் துறையிலும், 38 சதவிகித அளவிற்கு கூட்டுறவு மற்றும் அரசு ஆலைகளிலும் குறைந்துள்ளன

சரிக்கரை உற்பத்தி நிலை!!!

சரிக்கரை உற்பத்தி நிலை!!!

தமிழ்நாட்டின் 2012-13 ஆண்டின் மொத்த சர்க்கரை உற்பத்தி அதற்கு முந்தைய ஆண்டின் அளவான 20.07 லட்சம் டன்களுக்கு சற்று குறைவாக 19.6 லட்சம் டன்களாக பதிவாகியிருந்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

TN sugar output may drop 60%

Sugar output in Tamil Nadu is set to drop by about 60 per cent in the current season compared with the last season, according to sugar industry estimates.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X