மருத்துவ படிப்புக்கான இட ஒதுக்கீடு அதிகரிப்பு!! 58 புதிய கல்லூரிகள் துவக்கம்..

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: மனிதன் பூமியில் தோன்றி நாளிலிருந்து இன்று வரை பல்வேறு நோய்களும் தோன்றி மனிதனின் உயிருக்கு அச்சுறுத்தலாக விளங்குகின்றன. நோய்களை விரட்டுவதில் மருத்துவமனைகளின் பணி மகத்தானது. மருத்துவமனை மேம்பட்ட திறனுடன் செயல்பட மருத்துவர்களின் தன்னலமற்ற பணி அவசியம்.

 

ஆகவே நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளின் தரத்தை மேம்படுத்தும் தனது முயற்சியில் மத்திய அரசின் உதவியுடன் புதிய கல்லூரிகளை நாடு முழுவதும் அமைப்பது குறித்த தனது திட்டத்தை கடந்த வியாழனன்று அரசு அறிவித்தது. இதன் மூலம் கல்லூரிகளில் 5,800 புதிய காலியிடங்கள் உருவாகும் என்று தெரிகிறது.

தற்போது மருத்துவ கல்லூரிகளில் உள்ள 50000 இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு ஆர்வமாக உள்ளது.இதன் மூலம் மருத்துவர்கள் பற்றாக்குறை பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என்று அரசு நம்புகிறது.

ஏற்கனவே செயல்பட்டு வரும் மருத்துவமனைகளுடன் இந்த புதிய மருத்துவ கல்லூரிகள் இணைந்து செயலாற்றும் வண்ணம் இந்த புதிய கல்லூரிகளை மருத்துவமனைகளுடன் இணைத்து அமைக்க வேண்டும் என்ற சுகாதார மற்றும் குடும்ப நலத் துறையின் ஆலோசனை பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் வழங்கி உள்ளது.

நிதி பங்களிப்பு..

நிதி பங்களிப்பு..

இத்திட்டத்தை செயல்படுத்த தேவைப்படும் நிதியில் ரூ8457.40 கோடி ரூபாயை மத்திய அரசும் ரூ2513.70 கோடி ரூபாயை மாநிலங்கள் அரசு மற்றும் யூனியன் பிரதேச அரசும் வழங்கும் என்று மத்திய நிதி அமைச்சர் திரு.ப.சிதம்பரம் தெரிவித்தார்.

நிதியமைப்பு திட்டம்..

நிதியமைப்பு திட்டம்..

75:25 என்று அமைக்கப்பட்டுள்ள நிதியமைப்பு திட்டத்தின் படி மத்திய மற்றும் மாநில அரசுகளால் முறையே 90:10 என்ற விகிதத்தின்படி வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் சிறப்பு வகை மாநிலங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

58 புதிய மருத்துவ கல்லூரிகள்

58 புதிய மருத்துவ கல்லூரிகள்

மருத்துவ கல்லூரிகள் குறைவாக உள்ள மாநிலங்களில் இக்கல்லூரிகள் அமைக்கப்படும் என்றும், மருத்துவமனைகளின் தரத்தினை மேம்படுத்தும் நோக்கில் இந்த புதிய 58 கல்லூரிகள் தற்போது செயல்பட்டு கொண்டிருக்கும் மருத்துவமனையுடனோ அல்லது வேறு குறிப்பிட தகுந்த மருத்துவமனையுடனோ,இணைக்கப்பட்டு உருவாக்கப்பட உள்ளன.

இட ஒதுக்கிடு
 

இட ஒதுக்கிடு

இக்கல்லூரிகள் ஒவ்வொன்றும் 100 இடங்களை கொண்டு செயல்பட உள்ளதாக அவர் மேலும் கூறினார். ஒரு மருத்துவ கல்லூரி உருவாக மொத்தம் ரூ.189 கோடி ரூபாய் செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

மருத்துவமனை மற்றம் கல்லூரி...

மருத்துவமனை மற்றம் கல்லூரி...

மத்திய அரசின் உதவியுடன், மருத்துவமனைகளுடன் இணைக்கப்பட்ட கல்லூரிகளை உருவாக்கும் முயற்சியில் அவை இரண்டும் 10கி.மீ தொலைவிலும் இருவேறு தனித்தனி நிலப்பரப்பிலும் அமைக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சரியான இடத்தில் மருத்துவமனை

சரியான இடத்தில் மருத்துவமனை

நாட்டில் எங்கெல்லாம் நோய்களின் தாக்கம் அதிகம் காணப்படுகிறதோ, எங்கெல்லாம் மருத்துவர்களின் பற்றாக்குறையினாலும் மருத்துவமனைகளின் பற்றாக்குறையினாலும் மக்கள் அவதிப்படுகின்றனரோ,அங்கெல்லாம் மேலும் அதிகமான மருத்துவ கல்லூரிகளை அமைக்க அரசு ஆர்வமாக உள்ளது.

மருத்துவர்களின் பற்றாக்குறை..

மருத்துவர்களின் பற்றாக்குறை..

தற்போது குறைவாக காணப்படும் மருத்துவர்களின் எண்ணிக்கையை உயர்த்தவும், மருத்துவர்-நோயாளி விகிதத்தை அதிகப்படுத்தவும் முயற்சி எடுக்கப்பட உள்ளது. விகிதத்தை அதிகரிப்பதன் மூலம் நோயாளிகள் தரமான சிகிச்சை கிடைக்க பெறுவர்.

381 கல்லூரிகள், 50,000 மணவர்கள்..

381 கல்லூரிகள், 50,000 மணவர்கள்..

நாட்டின் உயரிய அமைப்பான இந்திய மருத்துவ ஆலோசனை சபை (The medical council of india) தற்போது மொத்தம் 381 கல்லூரிகளை கொண்டு செயல் பட்டு வருகிறது. இந்த கல்லூரிகளில் மொத்தம் 49,918 இடங்கள் உள்ளன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Govt approves 5,800 more MBBS seats across the country

Government on Thursday cleared a proposal to set up 58 new medical colleges in states with central assistance and upgradation of district hospitals, thus creating 5,800 more MBBS seats.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X