நிதி அமைச்சகத்தின் முதலீட்டுக் குறைப்பு நடவடிக்கை!!: வரிசை கட்டும் அரசு நிறுவனங்கள்..

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: மத்திய அரசு முதலீட்டுக் குறைப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதன் படி இத்திட்ட இலக்கான ரூ.40,000 கோடியை அடைய இந்தியன் ஆயில் மற்றும் இஞ்சினியர்ஸ் இந்தியா நிறுவனங்களில் உள்ள பங்குகளை இந்த மாதமும் பெல் நிறுவனத்தின் பங்குகளை அடுத்த மாதமும் விற்க அரசு திட்டமிட்டுள்ளது.

 

ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவன பங்குகளையும் மார்ச்சு மாதத்தில் விற்கவுள்ளதாக பொருளாதார விவகாரங்கள் துறை செயலர் அர்விந்த் மாயாராம் பிடிஐ பேட்டியில் தெரிவித்துள்ளார்.

"இந்த இலக்குக்கு ஏறக்குறைய சமமாக இருக்கும். மேலும் பரிவர்த்தனை வர்த்தக நிதிகளிலும் (ETF) அரசு நிறுவன பங்குகளை வெளியிட உள்ளோம்" என அவர் தெரிவித்தார்.

நிதி அமைச்சகத்தின் முதலீட்டுக் குறைப்பு நடவடிக்கை!!: வரிசை கட்டும் அரசு நிறுவனங்கள்..

அரசு 40,000 கோடி ரூபாய் இலக்கை அரசு நிறுவன முதலீட்டுக் குறிப்புகள் மூலம் பெற நிர்ணயித்திருந்தாலும் இதுவரை பவர் கிரிட் கார்பொரேஷன், ஹிந்துஸ்தான் காப்பர், நேஷனல் பெர்டிலசர் நிறுவனம் மற்றும் எம்எம்டிசி உள்ளிட்ட 7 நிறுவன பங்குகளை விற்றதன் மூலம் ரூ.3,000 கோடியை மட்டுமே பெற முடித்தது.

திட்ட மதிப்பீடுகளின் படி இந்தியன் ஆயில் மற்றும் என்ஜினியர்ஸ் இந்திய ஆகியவற்றின் 10 சதவிகித பங்குகளை விற்பதன் மூலம் முறையே ரூபாய் 5,000 கோடி மற்றும் 500 கோடியை அரசு திரட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிதி அமைச்சகத்தின் முதலீட்டுக் குறைப்பு நடவடிக்கை!!: வரிசை கட்டும் அரசு நிறுவனங்கள்..

மேலும் அரசு ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்தில் ரூபாய் 3000 கோடி மதிப்புள்ள 10 சதவிகித பங்குகளும், பெல் நிறுவனத்தில் ரூபாய் 2000 கோடி மதிப்புள்ள 5 சதவிகித பங்குகளையும் விற்க திட்டமிட்டுள்ளது. மேலும் கோல் இந்தியா மற்றும் ஆர்ஐஎன்எல் ஆகியவை இவ்வரிசையில் உள்ள பிற அரசு நிறுவனங்களாகும்.

இந்தியன் ஆயில் மற்றும் பெல் உள்ளிட்ட நிறுவனங்களின் முதலீட்டுக் குறைப்பு நடவடிக்கைகள், கால மற்றும் மதிப்பீட்டு விவகாரங்களில் நிதி மற்றும் நிர்வாக அமைச்சகங்களின் செயல் வேறுபாடுகளின் காரணமாக தாமதமாகியுள்ளதாகத் தெரிகிறது.

 

"சிறந்த விலையை கண்டுபிடிப்பது இயலாத ஒன்று. சென்செக்ஸ் புள்ளிகள் குறையும் போது இது உகந்த நேரம் அல்ல எனக் கூறும் போது சென்செக்ஸ் புள்ளிகள் உயரும்போது சந்தையிடாமல் இருக்க காரணம் எதுவும் இருக்க முடியாது" என மாயாராம் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், அரசு சில நிறுவனங்களின் பங்குகளை மத்திய அரசுத்துறை நிறுவன பரிவர்த்தனை வர்த்தக நிதிகளின் (ETF) மூலமாகவும் வெளியிட முடிவு செய்துள்ளது. இது சும்மார் 3000 கோடி ரூபாய் நிதியினைக் கொண்டிருப்பதோடு இச்செயல்முறை அரசு நிறுவனங்களின் பங்குகள் ஒரே உரிமையின் கீழ் இருப்பதை தவிர்க்க அரசுக்கு ஒரு கருவியாக இருக்கும் என்றார்.

இந்த ETF செயல்முறை அரசு நிறுவனங்களின் 2-3 சதவிகித பங்குகளை கொண்டிருப்பதோடு, அரசு நிறுவன பங்குகளின் விலை மாறுபாடுகளை ஓரளவிற்கு குறைக்கும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Govt lines up PSU disinvestments to meet Rs 40k crore target

The government plans to sell stakes in Indian Oil Corporation and Engineers India Ltd this month and in BHEL in February as it rushes to meet its disinvestment target of Rs 40,000 crore.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X