உலகை ஆட்டி படைக்கும் அதிக எண்ணெய் வளம் கொண்ட நாடுகள்!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: இந்த உலகின் இத்தகைய வேகமான வளர்ச்சிக்கு எண்ணெய் வளம் மிகவும் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதனால் நாளியிடையில் உலகின் எல்லா நாடுகளுக்கும் இதன் தேவை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இத்தேவையை பூர்த்தி செய்ய சில நாடுகள் பணம் கொடுத்து எண்ணெய்யை பெருகிறது, சில போர் செய்கிறது.

 

(உங்க பிஸ்னஸூக்குத் தேவையான கடனை இப்படியும் வாங்கலாம்..!)

முன்பெல்லாம் பணத்திற்காகவும், பொன், பொருளுக்காவும் போர் செய்ய இந்த மனிதர்கூட்டம் இப்போது நாகரிகம் என்ற பெயரில் எண்ணெய்க்காகவும், வளங்களுக்காவும் சண்டை போடுகிறது. குறிப்பாக அமெரிக்கா, கடந்த 15 முதல் 20 வருடங்களில் எண்ணெய் வளங்கள் அதிகம் இருக்கும் நாடுகளிடையே ஊடுருவி, அங்கு உள்ளநாட்டு போரை உருவாக்கி பின் அமெரிக்க கட்டுப்பாட்டில் கொண்டு வரும் செயல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த ரகசியங்களை வெளிக்கொண்டு வந்த விக்கிலீக்ஸ் ஜூலியன் அசான்ஜே மற்றும் எட்வார்ட் ஸ்னோவ்டென் ஆகியோரை அடக்கிவைத்துள்ளது.

இத்தகைய அரிய எண்ணெய் வளம் அதிகளவு உடைய 11 நாடுகளைப் பற்றி இங்கு பார்க்கலாம்.

சீனா

சீனா

உலகில் நாடுகளில் அதிவேகமாக பொருளாதார வளர்ச்சி அடைந்து வரும் நாடு சீனாவாகும். எண்ணெய் உற்பத்தியில் மிகப்பெரிய உயர்வைக் கண்ட நாடாக சீனா திகழ்கிறது. 1949 இல், ஜனத்தொகை வளர்ச்சியினாலும், அரசியல் கொள்கை காரணமாகவும், நாட்டின் பெட்ரோலியத் துறை பெருமளவில் பாதிப்புக்கு உள்ளானது.

நாள் ஒன்றுக்கு 4.12 மில்லியன் பீப்பாய்கள் (பேரல்கள்) என்ற அடிப்படையில் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்து வருகிறது. கடந்த 2012 இல் உலகின் மொத்த எண்ணெய் உற்பத்தியில் 5.46 சதவிகிதம் வரை பங்களிப்பு செய்துள்ளது.

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோவின் பெட்ரோலியத் துறை உலகில் மிகபெரிய வளங்களில் ஒன்றாகும். எண்ணெய் உற்பத்தியில் இது ஆறாவது இடத்தில் உள்ளது. இது மேற்கத்திய நாடுகளில், அமெரிகாவிற்கு அடுத்து, கனடாவிற்கு முன்னதாக, இரண்டாவது மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தியாளர் என்ற பெருமையைப் பெறுகிறது. இருப்பினும், பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகள் அமைப்பில் (OPEC) உறுப்பினராகவோ அல்லது வேறு ஏதாவது பெட்ரோலிய உற்பத்தி அமைப்புகளில் உறுப்பினராகவோ மெக்ஸிகோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அங்கோலா
 

அங்கோலா

துணை-சஹாரா ஆபிரிக்கா கண்டத்தில் உள்ள ஏனைய நாடுகளை விட அதிகளவு பெட்ரோலியம் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் நாடாக அங்கோலா விளங்குகிறது. கடந்த 2007 இல், இது பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகள் அமைப்பின் ஒரு முக்கிய உறுப்பினர் ஆகியுள்ளது.

உலக எண்ணெய் உற்பத்தியில் இதன் பங்களிப்பு 2.40 சதவிகிதம் ஆகும். மேலும் இது நாள் ஒன்றுக்கு 1.81 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்கிறது.

நார்வே

நார்வே

நார்வே கடலில், வட- சமுத்திர எண்ணெய் கண்டுபிடிப்பிற்கு பின்னர், எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதியானது நார்வேயின் ஒரு முக்கிய அம்சமாக உள்ளது. வட-சமுத்திர எண்ணெய் உற்பத்தி அதிகரித்து இருப்பதன் காரணமாகவும், பேரண்ட்ஸ்-கடலில் எண்ணெய் ஆய்வு பற்றிய கருத்து வேறுபாடுகள் காரணமாகவும், தற்போது நார்வே பெட்ரோல் உற்பத்தியில் உன்னிப்பான கவனத்தைப் பெற்றுவருகிறது. ஆர்க்டிக் எண்ணெய் ஆய்வு வாய்ப்பானது, இந்த கவனத்தை மேலும் உயர்த்தியுள்ளது.

இங்கிலாந்து

இங்கிலாந்து

2012 இல், இங்கிலாந்தின் எண்ணெய் மற்றும் எரிவாயு துறை, 50 மில்லியன் கன மீட்டர் வரை பெட்ரோலியம் உற்பத்தி செய்ய முடிந்தது. இதில் சுமார் 98 சதவிகிதம் கடல் பரப்புகளில் இருந்து உற்பத்தி செய்யப்பட்டது. இருப்பினும், 383 உற்பத்தி கடல் பரப்புகள் உள்ளன, 2008-ன் 17 உற்பத்திகள் இவற்றில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

ஐக்கிய அரபு நாடுகள்

ஐக்கிய அரபு நாடுகள்

ஐக்கிய அரபு நாடுகளின் எண்ணெய் மற்றும் எரிபொருள் உற்பத்தியானது, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 25 சதவிகிதம் ஆகும். 2011 இல் இது கிட்டத்தட்ட 48,222 டாலர்கள் ஆக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த நாட்டில், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஏற்றுமதியானது, நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

கத்தார்

கத்தார்

1.7 மில்லியன் ஜனத்தொகை கொண்ட இந்த பாரசீக வளைகுடா நாடு, தனிநபர் வருமான அடிப்படையில் உலகின் பணக்கார நாடு என்ற இடத்தை பிடித்துள்ளது. எண்ணெய் விலை மீளுயர்வு மற்றும் அந்த நாட்டின் பிரமாண்டமான இயற்கை எரிவாயு வளங்கள் ஆகியவை இதற்கு காரணங்களாகும். வாங்கும் சக்தி அடிப்படையில், 2010-ற்கான கத்தாரின் மொத்த உள்நாட்டு உற்பத்தித் தலாவருமானம் 88,000 டாலருக்கும் அதிகமாக பதிவுசெய்யப்பட்டுள்ளது.

கனடா

கனடா

உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றாகவும், பல்வேறு நெறிமுறைகளையும் மற்றும் பல்வேறு கலாச்சாரங்களையும் கொண்ட நாடாகவும் கனடா திகழ்கிறது. இது அதிக தனிநபர் வருமானம் உள்ள நாடகவும், மனித வளர்ச்சிக் குறியீடு (HDI) அடிப்படையில் 11வது இடத்திலும் உள்ளது. உலகின் மொத்த எண்ணெய் உற்பத்தியில், கனடாவின் பங்களிப்பு 4.13 சதவீதம் ஆகும்.

எகிப்து

எகிப்து

எகிப்தின் பொருளாதாரமானது, ஏனைய மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து மிகவும் வேறுபட்டதாக காணப்படுகிறது. இந்த நாடு, குறிப்பாக விவசாயம், ஊடகங்கள், பெட்ரோலிய ஏற்றுமதி, இயற்கை எரிவாயு மற்றும் சுற்றுலா ஆகியவற்றைச் சார்ந்துள்ளது.

மேலும், எண்ணெய் மற்றும் எரிவாயு போன்றவற்றை சூயஸ் வளை குடாவில் மற்றும் நைல் டெல்டா ஆகிய பகுதிகளில் இருந்து உற்பத்தி செய்கிறது. 2012-இல், உலக எண்ணெய் உற்பத்தியில் எகிப்தின் பங்களிப்பு சுமார் 0.74 சதவிகிதம் ஆகும்.

ஈராக்

ஈராக்

இதன் 143.1 பில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் வள அடிப்படையில், சவுதிஅரேபியாவுக்கு அடுத்தபடியாக எண்ணெய் வளத்தில் உலகில் இரண்டாவது இடத்தில் உள்ளது. 2012-ன் இறுதியில், இதன் எண்ணெய் உற்பத்தி அளவு 3.4 மில்லியன் பீப்பாய்களை எட்டியது. 2014-ஆம் ஆண்டளவில், எண்ணெய் உற்பத்தியை, நாள் ஒன்றுக்கு ஐந்து மில்லியன் பீப்பாய்களாக உயர்த்துவதற்கு ஈராக் திட்டமிட்டுள்ளது.

டெக்ஸாசில் மட்டும் உள்ள 1 மில்லியன் கிணறுகளுடன் ஒப்பிடும் போது, ஈராக் 2,000 எண்ணெய்க் கிணறுகளை மட்டுமே தோண்டியுள்ளது. இருப்பினும், பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகள் அமைப்பு (OPEC) நிறுவனர்களில் ஈராக்கும் ஒன்றாகும்.

வருமானவரி

வருமானவரி

வருமான வரி செலுத்தவில்லையா?? அப்ப உங்களுக்கு இது எல்லாம் நடக்கும்..!

வருமான வரி ரீஃபண்டை உடனடியாகப் பெற உதவும் 10 வழிகள்

30 வயசாகிடுச்சா..?

30 வயசாகிடுச்சா..?

30 வயசாகிடுச்சா.. அப்போ இதை கட்டாயம் படிங்க பாஸ்..!

கண்ணு கட்டுதுடா சாமி

கண்ணு கட்டுதுடா சாமி

டன் கணக்கில் தங்கம் வைத்திருக்கும் 10 நாடுகள்.. கண்ணு கட்டுதுடா சாமி முடியல..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் சேவைகள்

தமிழ் குட்ரிட்டன்ஸ் சேவைகள்

தங்கம் விலை | வெள்ளி விலை |வங்கி விடுமுறை நாட்கள் |டாலர்-ரூபாய் மதிப்புகள் | பங்குச்சந்தை நிலை | வங்கி IFSC குறியீடு

சமுக வலைத்தள இணைப்புகள்

சமுக வலைத்தள இணைப்புகள்

இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகுள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.

கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Top Oil-Rich Countries In The World

oil is the most precious resource available, the demand for it is increasing day by day. Most of the countries are affected by the innovations and developments in the oil market.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X