ஜெட்புளூ- எதிஹாத் விமான நிறுவனங்களின் கூட்டு முயற்சி!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

துபாய்: ஜெட்புளூ மற்றும் ஐக்கிய அரபு எமிரெட்ஸ் நாட்டின் தேசிய நிறுவனமான எதிஹாத் விமான நிறுவனங்கள் கூட்டாக இணைந்து பொதுவான வழித்தடங்களுக்கு ஒரே டிக்கெட்டை பயணிகள் பயன்படுத்த முடிவு செய்துள்ளனர்.

 

இவ்விரு நிறுவனங்களும் வெளியிட்டுள்ள அறிக்கையில் முதலில் எதிஹாத் நிறுவனம், ஜெட் ப்ளு நிறுவனத்தின் 40 அமெரிக்க வழித்தடங்களை பகிர்ந்து செயல்பட உள்ளது (சூப்பர்.. இதனால் எத்தனை ஆயிரம் கோடி லாபமோ!!). இந்த திட்டம் வரும் ஜுன் மாதத்தில் லாஸ் ஏஞ்சலிஸுக்கு எதிஹாத் நிறுவனம் தினசரி சேவைகளைத் துவக்கியதும் செயல்படுத்தப்படும் மேலும் பல தட சேவைகள் பகிரப்படவுள்ளதாகவும் இவ்விரு நிறுவனங்களும் தெரிவித்துள்ளன.

ஜெட்புளூ- எதிஹாத் விமான நிறுவனங்களின் கூட்டு முயற்சி!!

மேலும் இந்த திட்டத்தை செயல்படுத்த அரசாங்க அனுமதிக்காக ஜெட்புளூ மற்றும் எதிஹாத் விமான நிறுவனகள் காத்துக்கொண்டிருக்கிறது.

எதிஹாத் நிறுவனம் தற்போது அபுதாபியிலிருந்து நியுயார்க், வாஷிங்டன் மற்றும் சிகாகோ நகரங்களுக்கு தினசரி விமான சேவைகளைக் கொண்டுள்ளது.

2012 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், ஜெட்புளூ நிறுவனம் மத்திய கிழக்கு நாடுகளில் மிகப்பெரும் விமான சேவை நிறுவனமான எமிரேட்ஸூடன் வழித்தட பகிர்வுகளை மேற்கொண்டு தற்போது எமிரேட்ஸ் தன் முக்கிய முனையமான துபாயிலிருந்து நியுயார்க்கின் கென்னடி விமான நிலையத்திற்கு தினசரி சேவைகளை இயக்குகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

JetBlue, Etihad Airlines announce partnership; single ticket for passengers on common routes

JetBlue Airways Corp. and the national airline of the United Arab Emirates, Etihad Airways formed a partnership to allow passengers to fly on routes operated by both carriers on a single ticket.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X