உலகம் முழுவதும் ஹாக்கி போட்டிகளை ஒளிபரப்ப ஸ்டார் இந்தியா உரிமை பெற்றது!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: ஸ்டார் இந்தியா நிறுவனம் இந்தியாவில் பல சேனல்களை ஒளிபரப்பி வருகிறது, இதில் விளையாட்டுப் போட்டிகளை ஒலிபரப்பும் ஸ்டார் ஸ்போட்ஸ் தொலைக்காட்சியும் ஒன்று. இந்நிறுவனம் உலக ஹாக்கி ஃபெடரேஷனுடன் இணைந்து இந்தியா மற்றும் உலகெங்கிலும் நடக்கும் ஹாக்கிப் போட்டிகளை தயாரித்து, விநியோகம் மற்றும் ஒளிபரப்பும் உரிமையைப் பெற்றுள்ளது.

இந்த ஒப்பந்தம் 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தொடங்கி 2022ஆம் வருடம் டிசம்பர் மாதம் வரை, மொத்தம் 8 ஆண்டுகளுக்கு இந்த ஒப்பந்தம் நீடிக்கும்.

உலக ஹாக்கி ஒளிபரப்பு மற்றும் நிகழ்ச்சித் தயாரிப்புகளின் தரத்தை உயர்த்தி அவ்விளையாட்டை உலகெங்கிலும் பரப்ப அந்நிறுவனம் பெரும் முதலீடுகளை செய்யவுள்ளது. உலக ஹாக்கி விளையாட்டுகளின் நிர்வாக அமைப்பான உலக ஹாக்கி ஃபெடரெஷன், இந்தியாவில் வருடத்தோறும் ஒரு பெரிய ஹாக்கிப் போட்டியை நடத்தும் என்று தெரிவித்துள்ளது.

ஸ்டார் இந்தியா

ஸ்டார் இந்தியா

"ஹாக்கி எங்களின் முன்னணி விளையாட்டாகும். மேலும் இந்தியா வருடந்தோரும் ஒரு உலகத்தரம் வாய்ந்த போட்டிகளை நடத்தவுள்ளது எங்களுக்கு மிகுந்த ஆர்வத்தை அளிக்கிறது. வருடந்தோறும் நவீன முறையில் திட்டமிடப்பட்டு ஒளிபரப்பப்படும் உலக அளவிலான ஹாக்கிப் போட்டிகள் ஹாக்கி விளையாட்டை பிரபலப்படுத்த முக்கியப் பங்கு வகிக்கும்" என்று ஸ்டார் இந்தியா நிறுவனத்தின் விளையாட்டு துறைத் தலைவர் நிதின் குக்ரெஜா தெரிவித்தார்.

டென் ஸ்போட்ஸ்

டென் ஸ்போட்ஸ்

தற்போது ஹாக்கிப் போட்டிகள் ஒளிபரப்பும் உரிமை டென் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நிறுவனத்திடம் உள்ளது.

200 நாடுகளில் ஒளிப்பரப்ப திட்டம்
 

200 நாடுகளில் ஒளிப்பரப்ப திட்டம்

இந்த ஒப்பந்ததின் மூலம், அர்ஜென்டினாவைத் தவிர உலகின் அனைத்து நாடுகளிலும் ஒளிபரப்பு உரிமைகளை ஸ்டார் இந்தியா நிறுவனம் பெற்றுள்ளது. தன்னுடைய வெளிநாட்டு தொடர்புகள் மற்றும் பிற நாட்டு அரசு ஒளிபரப்பு நிறுவனங்கள் மூலம் இந்நிறுவனம் நிகழ்ச்சிகளை 200-க்கும் அதிகமான நாடுகளில் ஒளிபரப்ப உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

ரூ.20,000 கோடி முதலீடு

ரூ.20,000 கோடி முதலீடு

ஸ்டார் இந்தியா விளையாட்டுகளை ஊக்குவிக்க சவால்களை ஏற்றுக் கொண்டுள்ளதோடு விளையாட்டுத் துறையில் சுமார் 20,000 கோடி ரூபாய் அளவிற்கு செலவுகளைத் திட்டமிட்டு, அடுத்த 5 வருடங்களில் மேலும் இரண்டு பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு முதலீடு செய்யத்திட்டமிட்டுள்ளது.

ஹாக்கி இந்தியா லீக் (HIL)

ஹாக்கி இந்தியா லீக் (HIL)

கடந்த வருடம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இந்திய ஹாக்கி சங்கத்துடன் இணைந்து ஹாக்கி இந்தியா லீக் போட்டிகளை நடத்த ஒப்பந்தம் செய்துகொண்டது. இதில் முதல் சீசனில் இந்த போட்டிகள் உலகின் 80 நாடுகளில் ஒளிபரப்பப்பட்டன.

ரசிகர்களின் ஆர்வம்..

ரசிகர்களின் ஆர்வம்..

"முதல் ஹாக்கி லீக் சீசனில் நான்கு கோடிக்கும் மேலான ரசிகர்கள் பார்த்தனர். இந்த எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருப்பதோடு, ஸ்டார் இந்தியா இரண்டாவது சீசனில் 100 கோடி ரூபாயை செலவிட நிர்ணயித்துள்ளது. இதற்கான வேலைகள் இன்னும் 5 நாட்களில் தொடங்கும்" என்று குக்ரெஜா தெரிவித்தார்.

ஒலிம்பிக் மட்டுமல்ல..

ஒலிம்பிக் மட்டுமல்ல..

"ஹாக்கி விளையாட்டை பிரபலப்படுத்த மற்றும் ஹாக்கியின் முக்கியத்துவத்தை தக்கவைக்க ஹாக்கியின் முக்கிய நிகழ்வான ஒலிம்பிக் விளையாடுகள் மூலம் மட்டுமல்லாது அதை மேலும் சுவாரசியமாகவும் நல்ல பொழுதுபோக்கு அம்சமாகவும் மாற்ற ஸ்டார் இந்தியா முயற்சிகளை மேற்கொள்ளும்" என்று உலக ஹாக்கி ஃபெடரேஷன் தலைவர் லியான்ட்ரோ நெக்ரெ தெரிவித்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Star India enters into partnership with International Hockey Federation

Star Sports channel, on Tuesday said it has entered into a strategic partnership with the International Hockey Federation (FIH) to produce, broadcast and distribute the sports body’s international and Indian events.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X