ஆட்டோ மற்றும் டாக்ஸி டிரைவர்களுக்கு 50% சலுகை மருத்துவக் காப்பீடு

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: ஆட்டோ மற்றும் டாக்ஸி டிரைவர்களுக்கான மருத்துவக் காப்பீட்டு செலவில் சரிபாதியை அரசு ஏற்கும் என்ற அறிவிப்பின் மூலம் அரசு அவர்களுக்கான மருத்துவக் காப்பீட்டை விரிவாக்கியுள்ளது. இந்தத் திட்டமானது ராஷ்ட்ரிய ஸ்வஸ்திய பீமா யோஜனா (Rashtriya Swasthya Bima Yojna) என்ற ஸ்மார்ட் கார்டு அடிப்படையிலமைந்த பணமற்ற மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படும்.

 

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் இது குறிப்பிடுகையில், இந்தத் திட்டம் நகரத்தில் பணிபுரியும் மரபுசாரா மற்றும் முறைப்படுத்தப்படாத தொழிலாளர்கள் கீழ் வரும் ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுனர்களின் மருத்துவச் செலவுகள் குறித்த கவலைகளைக் குறைக்க உதவும் என்றார்.

சாலைகள் அமைச்சகம்

சாலைகள் அமைச்சகம்

இந்தத் திட்டத்தின் கீழ், ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுனர்கள் காப்பீட்டுப் பிரிமியத்தில் பாதி தொகையினை தங்களது மாநில வரையரைகளுக்குட்பட்டு பங்களிப்பாகத் தருவதுடன் முப்பது ரூபாயை பதிவுக்கட்டணமாகச் செலுத்தவேண்டும் என சாலைகள் அமைச்சகத்தின் செய்திக்குறிப்புத் தெரிவிக்கிறது.

மத்திய மற்றும் மாநில அரசுகள்

மத்திய மற்றும் மாநில அரசுகள்

மீதமுள்ள 50 சதவிகிதத்தினை மத்திய மற்றும் மாநில அரசுகள் தலா 25 சதவிகிதம் என்ற விகிதத்தில் பிரித்து வழங்கும். இது தொடர்பான அதிகாரிகளை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்திலிருந்து நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரபூர்வ அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

7 மாநிலங்கள்
 

7 மாநிலங்கள்

கர்நாடகா, கேரளா, ஜார்கண்ட், சட்டீஸ்கர், உத்திரப்பிரதேசம், ஹரியானா மர்ரும் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த தொடர்பு அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு விவரங்கள் இந்த திட்டத்தினை அமல் படுத்தும் பொருட்டு அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்த செய்திக்குறிப்புத் தெரிவிக்கிறது.

தமிழ்நாடு..

தமிழ்நாடு..

இந்த பட்டியலில் நம்ம தமிழ்நாடு இல்லையே!!.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Health insurance: Govt. to pay 50 pc premium for auto, taxi drivers

The government on Thursday extended health insurance support to auto and taxi drivers by committing to pay half of the premium amount under Rashtriya Swasthya Bima Yojna, which provides smart-card based cashless health insurance cover.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X