வருமானத்தில் உணவிற்கு அதிகம் செலவு செய்யும் நாடு எது?? இந்தியா இல்ல

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: அமெரிக்க விவசாயத் துறையின் உணவு செலவீன தொகுப்பு மற்றும் யூரோமானிட்டர் இன்டர்நேஷனல் நிறுவனம் உலகின் அனைத்து பகுதிகளிலும் ஒரு முக்கிய ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வு எதைபற்றி என்றால், எந்தெந்த நாடுகள் உணவை பெரிதாக மதிக்கின்றன என்பதை பற்றியே ஆகும். இந்வகையில் இந்தியா எப்படி??

 

உணவு உட்கொள்வதில் பல்வேறு நாடுகளில் பழக்கத்தில் உள்ள வெவ்வேறு பாணிகளைப் பற்றிய சுவாரஸ்யமான பல தகவல்களையும் இவ்வறிக்கைகள் எடுத்து முன்வைக்கிறது.

ஏங்கலின் விதிப்படி, "வருமானம் உயர்ந்தால், வருமானத்திலிருந்து உணவுக்கென செலவிடப்படும் தொகையின் வீதம் குறையவே செய்யும்." இஆர்எஸ் அறிக்கை இந்தக் கூற்றை உறுதிப்படுத்தியுள்ளது. உலகின் இதர நாடுகளைக் காட்டிலும் அமெரிக்கா அதன் வருமானத்தில் சொற்ப சதவீதத்தையே உணவுக்கென செலவழிக்கிறது. இன்னும் பல அச்சிரியமான விஷயங்கள் உள்ளன.. மேலும் இந்தியாவை பற்றியும் சில முக்கியமான விஷயங்களும் அடக்கம்.

இனிப்பை அதிகம் விரும்பும் நாடு..

இனிப்பை அதிகம் விரும்பும் நாடு..

உலகில் எந்த நாட்டில் மிக அதிக இனிப்பு வகைகள் உட்கொள்ளப்படுகிறது என்று உங்களுக்கு தெரியுமா? கனடாவில் தான். உலகின் வேறெந்த நாட்டினரையும் விட சராசரி கனடியன் ஒருவர் பேக்கரி உணவுகளுக்கென சுமார் 257.70 டாலர் என்ற வீதத்தில் அதிகமாக செலவு செய்கிறார்.

நாட்டுக்கு ஒரு உணவு

நாட்டுக்கு ஒரு உணவு

உணவுக்கான செலவீட்டைப் பொறுத்தவரை அமெரிக்கர்கள் துரித உணவகங்களில் பெரும்பகுதியையும், கிரேக்கர்கள் கஃபேக்களில் பெரும்பகுதியையும், இத்தாலியர்கள் பீட்ஸாக்களின் மீது பெரும்பகுதியையும் செலவழிக்கிறார்கள் என்று தெரிகிறது.

ஸ்விட்சர்லாந்து
 

ஸ்விட்சர்லாந்து

ஸ்விட்சர்லாந்து அதன் ஃபான்ட்யூ (fondue), ராக்லெட் (raclette) மற்றும் ரோஸ்டி (rosti) வகைகளுக்கு மிகவும் பெயர் பெற்றது. மேலும் சாக்லேட்டுகளின் மீதான அதன் காதலுக்கும் பிரசித்தி பெற்றது. சாக்லேட்டை மிகுதியாக சாப்பிடுவதில் உலகிலேயே முதல் இடத்தில் உள்ளது ஸ்விட்சர்லாந்து. ஸ்விட்சர்லாந்தில் வாழும் சராசரி நபர் ஒருவர் 2012 ஆம் ஆண்டில் உணவுக்கென செலவிட்ட தொகை சுமார் 8,024 டாலர் ஆகும்.

நார்வே

நார்வே

உலகளவில் இரண்டாவது அதிகமான ஜிடிபியைக் கொண்டுள்ள நார்வே, பண மதிப்பைப் பொறுத்த வரையில் உலகின் இரண்டாவது பணக்கார நாடு என்ற பெருமையையும் பெற்றுள்ளது. மிகவும் உயர்வான வாழ்க்கைத்தரம் கொண்டது நார்வே; எனவே நார்வே நாட்டினர் தம் வருமானத்தில் கணிசமான பகுதியை உணவுக்கென செலவழிக்கிறார்கள். நார்வே நாட்டினர் சால்மன், ஹெர்ரிங், ட்ரவுட் மற்றும் கோட்பிஷ் போன்ற கடல்வாழ் உயிரினங்களை மிகவும் விரும்பி உண்கின்றனர். சராசரி நார்வேயியன் ஒருவர் உணவுக்கென சுமார் 7,624 டாலர்களை செலவழிக்கிறார்.

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா

உலகிலேயே மிக அதிகமான இடைநடு வருமானம் கொண்ட நாடு ஆஸ்திரேலியா ஆகும். இங்கு உணவு விலைகளைக் காட்டிலும் வருமானம் அதிகரித்துள்ளது. உணவு வீக்கம் 1 சதவீதத்துக்கும் குறைவாகவே இருந்து வருகிறது. உணவுக்கென அதிகமாக செலவழிக்கும் நாடுகளின் பட்டியலில் ஸ்விட்சர்லாந்து மற்றும் நார்வே ஆகிய நாடுகளைத் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் உள்ளது ஆஸ்திரேலியா.

ஜப்பான்

ஜப்பான்

சூரியன் உதிக்கும் பூமி என்றழைக்கப்படும் ஜப்பான், உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாகத் திகழ்கிறது. ஜப்பானியர்கள் தங்களின் பாரம்பரிய உணவு வகைகளான அரிசியையும், நூடுல்ஸையும் மிகவும் விரும்பி உண்கின்றனர். வேறு எந்த நாட்டினரைக் காட்டிலும், ஜப்பானியர்கள் செயின் ரெஸ்டாரன்ட்களை மிகவும் விரும்புகின்றனர். உணவுக்கென அதிகமான தொகையை செலவிட்டு வரும் நாடுகளின் பட்டியலில் ஜப்பான் ஐந்தாவது இடத்தில் உள்ளது.

ஸ்வீடன்

ஸ்வீடன்

மிக உயர்வான வாழ்க்கைத் தரத்துடன் கூடிய பணக்கார நாடாக விளங்குகிறது ஸ்வீடன். ஸ்வீடிஷ் மக்கள் பெரும்பாலும் மீன், இறைச்சி, உருளைக்கிழங்கு மற்றும் பால் பொருட்கள் ஆகியவற்றையே விரும்பி உண்கின்றனர். ஸ்வீடிஷ் மக்கள் 30 வருடங்களுக்கு முன் உணவு வகைகள் மற்றும் பானங்களுக்கென செலவிட்ட தொகையுடன் ஒப்பிடுகையில் தற்சமயம் அவர்கள் இவற்றிற்கென குறைவான தொகையையே செலவிட்டு வருவதாக ஒரு ஆய்வு கூறுகிறது. சராசரி ஸ்வீடிஷ் ஒருவர் உணவுக்கென சுமார் 5,666 டாலர்கள் செலவிடுகிறார்.

நியூசிலாந்து

நியூசிலாந்து

நியூசிலாந்து ஆரோக்கியமான வாழ்க்கை முறையுடன் கூடிய வளமான நாடாகும். தங்களின் பட்ஜெட்டில் பெரும்பகுதியை உணவுக்கென செலவிட்டு வரும் நாடுகளின் பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது நியூசிலாந்து.

ஃபின்லாந்து

ஃபின்லாந்து

ஃபின்லாந்து ஒரு தீவிரமான தொழில்நகரமாகும். அவர்களின் வழக்கமான உணவு மீன், காய்கறிகள், இறைச்சி மற்றும் காளான்களை உள்ளடக்கியதாகக் காணப்படுகிறது. இதர நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஃபின்னிஷ் மக்கள் குறைவான அளவு இறைச்சியையே உண்கின்றனர். ஃபின்லாந்து நாட்டில் ஒரு நபர் சராசரியாக 5,351 டாலர்களை செலவிடுகிறது .

ஆஸ்திரியா

ஆஸ்திரியா

ஓரளவுக்கு உயர்வான வாழ்க்கைத் தரத்துடன் உலகின் பன்னிரெண்டாவது பணக்கார நாடாகத் திகழ்கிறது ஆஸ்திரியா. பாரம்பரிய ராஜ வம்ச சமையல்வகை வழியில் வந்த ஆஸ்திரியன் சமையல்வகை, பல்வேறு வகையான காய்கறிகள், பன்றி இறைச்சி மற்றும் மாட்டிறைச்சி ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. ஆஸ்திரியா, நபர் ஒருவருக்கு சராசரியாக சுமார் 5,239 டாலர்களை செலவிட்டு வருகிறது.

இப்போ நம்ம இந்தியா

இப்போ நம்ம இந்தியா

இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தினால் சில வருடங்களுக்கு முன் வெளியிடப்பட்ட ஒரு சர்வேயின் படி, சராசரி இந்திய குடும்பம் ஒன்று, வீட்டிற்கான மொத்த பட்ஜெட்டில் சுமார் 25 சதவீதத்தை உணவுக்கென, அதாவது வீட்டில் சமைக்கப்படும் உணவுக்கென செலவிடுகிறது. ஆண்டு வருமானத்தில் சுமார் 1.2 சதவீதம் வரையில் வெளியிடங்களில் சாப்பிடுவதற்கென செலவிடப்பட்டுள்ளது. நம் ஆண்டு வருமானத்தில் சுமார் 0.64 சதவீதத்தை பொழுதுபோக்கிற்கெனவும், சுமார் 0.6 சதவீதத்தை மது அருந்துவதற்கும் நாம் செலவிடுகிறோம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

These Countries Spend the Most on Food

The ERS food expenditure series of the U.S. Department of agriculture and the study by EuroMonitor International help us know which countries value food more. These reports throw up interesting facts on food consumption patterns of various countries.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X