காஃபி வித் பீர் சூப்பர் காம்பினேஷன்!! ஸ்டார்பக்ஸ்

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சான் பிரான்சிஸ்கோ: உலக புகழ் பெற்ற காஃபி நிறுவனமான ஸ்டார்பக்ஸ், தற்போது காஃபி வகைகளுடன், பீர் மற்றும் வைன் வகைகளும் விற்க திட்டமிட்டுள்ளது. ஸ்டார்பக்ஸ் நிறுவனம் உலகம் முழுவதும் பல கிளைகளை கொண்டு செயல்பட்டு வருகிறது. இதன் வாடிக்கையாளர் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது.

 

இந்நிலையில் தனது வாடிக்கையாளர்களை கவர இத்தகைய புது முயற்சிகளை எடுத்துள்ளது.

முதல் கட்ட முயற்சி

முதல் கட்ட முயற்சி

இத்திட்டத்திற்கான முதல் கட்ட முயற்சியாக அமெரிக்கவில் தனது 40 பிரபலமான கிளைகளில் 2010ஆம் ஆண்டு முதல் மாலை 4 மணிக்கு மேல் பீர் மற்றும் வைன் வகைகளும் விற்க இந்நிறுவனம் தொடங்கியது. வாடிக்கையாளர்களிடைய சிறப்பான வரவேற்பு பெற்றுள்ளதால் இதனை தொடர்ந்து செயல்படுத்த முனைந்துள்ளது.

தொடந்து செயல்படும்!!

தொடந்து செயல்படும்!!

ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான டிராய் அல்ஸ்டீடு, ப்ளூம்பெர்க் பத்திரிக்கைக்கு கொடுத்த பேட்டியில், இத்திட்டம் விரைவில் அமெரிக்காவில் 1000 கிளைகளுக்கு மேல் செயல்படுத்தபடும் என திட்டவட்டமாக தெரிவித்தார்.

ஸ்டார்பக்ஸ்

ஸ்டார்பக்ஸ்

ஸ்டார்பக்ஸ் நிறுவனம் உலகம் முழுவதும் சுமார் 20,100 கிளைகளை கொண்டு செயல்பட்டு வருகிறது. அதிலும் அமெரிக்காவில் மட்டும் 11,500 கிளைகள் உள்ளன.

இந்தியாவில்..
 

இந்தியாவில்..

இந்தியாவில் ஸ்டார்பக்ஸ் நிறுவனம், டாடா குழுமத்தின் டாடா சர்வதேச குளிர்பானங்கள் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுகிறது. இந்தியாவில் இந்நிறுவனம் மும்பை, டெல்லி, பூனே போன்ற வட மாநிலங்களில் மட்டுமே செயல்பட்டு வந்தது. சில மாதங்களுக்கு முன்பே தென் இந்தியாவின் மென்பொருள் நகரமான ஸ்டார்பக்ஸ் நிறுவனம் தனது கிளையை துவங்கியது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Starbucks to start alcohol sales in thousands of stores

Coffee alone is not enough for Starbucks anymore. The world’s largest coffee chain said Wednesday that it would soon start selling beer and wine in thousands of stores worldwide as it seeks to pump up its sales in coffee-saturated markets.
Story first published: Thursday, March 20, 2014, 13:18 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X