புதிய விமானங்களை வாங்க 200 மில்லியன் டாலர் கடன்!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்திய வானுர்தி நிறுவனமான ஏர் இந்தியா போயிங் 787 டிரிம்லைனர் விமானத்தை வாங்க நிதி பற்றாக்குறை ஏற்பட்டது. இந்த புதிய 2 போயிங் 787 விமானங்களை வாங்க பாங்க் ஆஃப் இந்தியா ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சுமார் 200 மில்லியன் டாலர் கடனாக கொடுத்துள்ளது. இந்நிறுவனத்திற்கு அதிகளவில் கடன் கொடுத்த நிதி நிறுவனங்களில் பாங்க் ஆஃப் இந்தியாவும் ஒன்று.

 

இந்த நிதியை இவ்வங்கியின் லண்டன் கிளை ஏர் இந்தியா நிறுவனத்திற்கு அளித்து குறிப்பிடதக்கது. மேலும் இந்த நிதி ஏர் இந்தியா நிறுவனம் 13வது மற்றும் 14வது போயிங் 787 ரக விமானங்களை வாங்க மிகவும் உதவியாக இருக்கும் என தெரிவித்தது.

ஏர்இந்தியா

ஏர்இந்தியா

பொதுவாக ஏர் இந்தியா நிறுவனம் தன் பழைய விமானங்களை விற்றல் மாற்றும் குத்தகைக்கு வாங்குதல் போன்ற செயல்முறைகளை பயன்படுத்தி தனது விமான சேவையை நடத்தியது. விமானங்கள் மிகவும் விலை உயர்ந்தாகஉள்ளதால் ஏர் இந்தியா மட்டும் அல்லாமல் உலகில் எல்லா நிறுவனங்களும் இவ்வாறே செயல்படுகிறது.

போயிங் 787

போயிங் 787

விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் நிறுவனத்தின் இணையதள விவரங்களின் படி போயிங் 787 விமானங்களின் மதிப்பு 211-288 மில்லியன் டாலர் வரை உள்ளது. மேலும் ஒவ்வொரு விமானங்களுக்கும் இந்த விலை நிலை மாறுபடுகிறது என்பது குறிப்பிடதக்கது.

கடன் தொகை
 

கடன் தொகை

மேலும் ஏர்இந்தியா நிறுவனம் தனது கடன் தொகையை மிகுதியாக குறைத்து வருகிறது என டெல்லி விமானநிலைய அதிகரிகள் தெரிவித்ததனர். அதன் அடிப்படையில் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் முதல் 2014ஆம் ஆண்டின் மார்ச் மாதம் வரை சுமார் 465 கோடி டெல்லி விமானநிலையத்திற்கு செலுத்தியது குறிப்பிடதக்கது.

வருவாய்

வருவாய்

பன்னாட்டு விமான பயணிகள் மூலம் 2014-15ஆம் ஆண்டின் இடைபட்ட காலகட்டத்தில் ஏர் இந்தியா சுமார் 16,400 ரூபாய் வருமானமாக பெற்றது குறிப்பிடதக்கது.

பயணிகள்

பயணிகள்

ஒரு வருடத்திற்கு ஏர் இந்தியா நிறுவனம் சுமார் 16 மில்லியன் பயனிகளுக்கு சேவையளிக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Air India gets $200 m BoI loan to buy Boeing 787s

Bank of India (BoI) has become the first Indian bank to extend a bridge loan of $200 million to Air India to finance the purchase of two Boeing 787 Dreamliner aircraft.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X