ரூ.3,500 கோடி முதலீட்டில் ஐடியா செல்லுலாரின் புதிய சேவை!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: ஆதித்யா பிர்லா குழுமத்தின் தொலைதொடர்பு நிறுவனமான ஐடியா செல்லுலார் நிறுவனம் இந்தியாவில் தொலைதொடர்பு சேவையை வழங்கி வருகிறது. அதிலும் குறிப்பாக வடக்கு பகுதியில் அதிகளவில் வாடிக்கையாளர்களை கொண்டு சிறப்பாக செயல்படுகிறது. இந்நிலையில் இந்நிறுவனம் இந்தியா முழுவதும் தனது நெட்வொர்கை விரிவுபடுத்தவும், டெல்லியில் 3ஜி சேவையை துவங்கவும் சுமார் 3,500 கோடி ரூபாய் முதலீடு செய்கிறது.

 

இது குறித்து ஐடியா செல்லுலார் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் "2015ஆம் நிதியாண்டில் முதலீட்டு செலவீனமாக 3,500 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும்" என இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

ஐடியாவின் சொத்துக்கள்

ஐடியாவின் சொத்துக்கள்

நிறுவன தகவல் படி இந்நிறுவனத்திடம் நான்காம் காலண்டு முடிவில் 3,178 2ஜி செல் சைட்டுகளும், 1,477 3ஜி செல் சைட்டுகளும் உள்ளது. அதேபோல் 104,778 2ஜி நெட்வொர்க் சைட்டுகளும், 21,381 3ஜி நெட்வொர்க் சைட்டுகளும் உள்ளதாக நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.

டெல்லி

டெல்லி

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் பகுதியில் 900 மெகா ஹெர்ட்ஸ் அலைவரிசையில் கைபற்றிய 5 மெகா ஹெர்ட்ஸ் தளத்தை முற்றிலும் 3ஜி சேவை வழங்க இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

11 மாநிலங்கள்

11 மாநிலங்கள்

தற்போது இந்நிறுவனம் 3ஜி சேவையை மகாராஷ்டிரா, குஜராத், ஆந்திர பிரதேசம், கேரளா, பஞ்சாப், அரியானா, உத்தர பிரதேசம் கிழக்கு மற்றும் மேற்கு, ஜம்மு காஷ்மீர், மத்திய பிரதேசம், இமாச்சல பிரதேசம் போன்ற 11 மாநிலங்களில் வழங்குகிறது.

பஞ்சாம்
 

பஞ்சாம்

சமிபத்தில் இந்நிறுவனம் பஞ்சாம் மாநிலத்தில் 3ஜி சேவையை அளிக்க ஒப்புதல் பெற்றது குறிப்பிடதக்கது. மேலும் 2015ஆம் நிதியாண்டின் முடிவிற்குள் இந்நிறுவனம் தனது சேவையை டெல்லியில் வழங்க திட்டமிட்டுள்ளது.

4ஜி சேவை

4ஜி சேவை

மேலும் கடந்த ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் கைபற்றிய 1800 900 மெகா ஹெர்ட்ஸ் அலைவரிசையில் 4ஜி சேவையை கேரளா, மகாராஷ்டிரா & கோவா, ஆந்திர பிரதேசம், கர்நாடகம், மத்திய பிரதேசம் & சத்தீஸ்கர், பஞ்சாப், அரியானா மற்றும் வட கிழக்கு பகுதி ஆகிய 8 மாநிலங்களில் செயல்படுத்த இந்நிறுவனம் முடிவுசெய்யதுள்ளது.

நிறுவன வளர்ச்சி

நிறுவன வளர்ச்சி

2014ஆம் நிதியாண்டின் முடிவில் ஐடியா செல்லுலார் நிறுவனம் 91 சதவீத லாப வளர்ச்சையை பெற்றது. இதனால் இந்நிறுவனத்தின் மொத்த லாபம் 589.77 கோடியாகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Idea to spend Rs 3,500 cr in building networks; launch 3G in Delhi

Telecom operator Idea Cellular today said that it will invest Rs 3,500 crore in building network and launching 3G service in Delhi next year.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X