ரஷ்யாவை பார்த்து பாடம் கற்றுக்கொண்ட இந்தியா!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: உலகளாவிய பண பரிவர்த்தனை அட்டை நிறுவனங்களான விஸா மற்றும் மாஸ்டர் கார்டுகளைப் போன்று இந்தியாவிற்கு சொந்தமாக ரூபே என்ற இந்திய பண பரிவர்த்தனை அட்டையை வியாழக்கிழமையன்று இந்தியக் குடியரசுத் தலைவர் திரு.பிரணாப் முகர்ஜி தொடங்கி வைத்தார். இந்த அட்டைகள் ஏ.டி.எம் இயந்திரங்களிலும், எல்லா கடைகளிலும் பயன்படத்தக் கூடிய வகையில் இருக்கும். (ரஷ்யாவின் நிலையை வரைவில் உணர்ந்தது இந்தியா!!)

 

ரஷ்யா உக்ரைன் நாடுகளுக்கு மத்தியில் நடக்கும் பிரச்சனையை கடுமையாக எதிர்த்த அமெரிக்கா, ரஷ்யாவை நேரடியாக எதிர்க்க முடியவில்லை. இதனையடுத்து ரஷ்யாவிற்கு வங்கி சேவை முழுவதும் அமெரிக்க நிறுவனங்கள் தான். இதனை பயன்படுத்தி ரஷ்யாவின் வங்கித் துறையில் பல வேலைகளை பார்த்து அமெரிக்கா. முழுமையாக தெரிந்துக்கொள்ள இதை கிளிக் செய்யவும்..

கூட்டணி

கூட்டணி

இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் வங்கித் துறையினரின் நேஷனல் பேமண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (National Payments Corporation of India)-என்ற இலாப நொக்கில்லாத நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட இந்த நெட்வொர்க், எல்லா வகையான ஏ.டி.எம் இயந்திரங்கள், சில்லறை மற்றும் இ-காமர்ஸ் தளங்களுக்கும் ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. (சூப்பர்.. சிறப்பான முறையில் செயல்படுத்தினால் அன்னிய நிறுவனங்களிடம் கையேந்தும் நிலை தேவைபடாது. )

வங்கிகள்

வங்கிகள்

ஐசிஐசிஐ, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் பேங்க் மற்றும் பல வங்கிகளும் ரூபே தளத்தைப் பயன்படுத்தி வங்கிப் பரிவர்த்தனைகளை செய்துவருகின்றன. ஏ.டி.எம் இயந்திரங்கள், சில்லறை விற்பனை சந்திப்புகள் மற்றும் ஆன்லைன் வியாபாரம் என மும்முனைகளில் செயல்படக் கூடிய உலகளாவிய அட்டைகளில் ஏழாவதாக ரூபே இடம் பிடித்துள்ளது.

டிக்கெட் பதிவு
 

டிக்கெட் பதிவு

மேலும், இந்திய இரயில்வே மற்றும் சுற்றுலா கழகத்தினரும் விரைவில் ப்ரீ-பெய்டு ரூபே வகை அட்டையை வெளியிட்டு, இரயில்வே புக்கிங் செய்ய உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்க செய்தியாக உள்ளது.

பெயர் காரணம்

பெயர் காரணம்

ரூபாய் மற்றும் பேமண்ட் என்ற இரண்டு வார்த்தைகளின் இணைப்பு தான் 'ரூபே' என்ற வார்த்தையாகும். இந்திய நாட்டினால் உருவாக்கப்பட்ட உயர்ந்த பேமண்ட் முறையாக ரூபே நாட்டிற்கு அளிக்கப்பட்டுள்ளது', என இராஷ்டிரபதி பவனில் ரூபே அட்டையை முறையாக தொடங்கி வைத்த பின்னர் திரு.பிரணாப் முகர்ஜி குறிப்பிட்டார்.

ஏடிஎம், விற்பனை முனையம்

ஏடிஎம், விற்பனை முனையம்

இந்தியாவில் இருக்கும் 1.6 இலட்சத்திற்கும் அதிகமாக இருக்கும் ஏ.டி.எம்-களிலும் மற்றும் 9.45 இலட்சத்திற்கும் அதிகமான 95 சதவீதம் விற்பனை முனையங்கள் மற்றும் 10,000 அளவைக் கொண்டுள்ள இ-காமர்ஸ் வணிகம் ஆகியவை அனைத்திலும் இந்த ரூபே அட்டை ஏற்றுக் கொள்ளப்படும்.

மற்ற திட்டங்கள்

மற்ற திட்டங்கள்

கிஸான் அட்டைகள், பால் வங்கும் அட்டைகள், தானியங்களுக்கான அட்டைகள் மற்றும் பைனான்சியல் இன்க்லுசன் அட்டைகள் போன்ற சிறப்பு வகையான வங்கி பரிவர்த்தனை அட்டைகளை வழங்க ரூபே ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

With RuPay, India builds its own card payment network

President Pranab Mukherjee on Thursday dedicated to the nation indigenous card payment network called RuPay taking on the global players like Visa and MasterCard. It will work on ATMs and merchant outlets and help in reducing cash transactions.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X