நடுக் கிணற்றில் தகதிமிதா.. ரகுராம் ராஜன்

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியாவில் 16வது நாடாளுமன்ற தேர்தலின் வாக்குப்பதிவு 9 கட்டமாக திங்கட்கிழமை முடிவடைந்தது. இதனால் இந்தியாவில் சில முக்கிய துறைகளில் இருக்கும் அதிகாரிகளுக்கும் வயிற்றில் புளியை கரைத்துள்ளது. குறிப்பாக ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் மற்றும் திட்ட குழுவின் துணை தலைவரான மான்டெக் சிங்.

 

புதிய கட்சி ஆட்சிக்கு பொறுப்பிற்கு வரும் வேலையில் இவர்களுக்கு பதவி பறிபோகும். இதனால் இத்துறை அதிகாரிகளை புதிய கட்சி புதிய ஆட்களை நியமனம் செய்யவும் வாய்ப்புள்ளது. இதுகுறித்து நேற்று ரகுராம் ராஜன் அளித்த பேட்டியில் முக்கிய தகவல்களை வெளியிட்டார்.

ரகுராம் ராஜன்

ரகுராம் ராஜன்

"சிறப்பான நிதிக்கொள்கையை தீட்டுவது மட்டுமே என் வேலை, மத்திய அரசு என்னை பதவியில் இருந்து நீக்கலாம் அல்லது நீக்காமலும் போகலாம்", எதுவாக இருந்தாலும் என் வேலையை நான் எப்போதும் சிறப்பாகவே செய்வேன் என தெரிவித்தார். இந்த வகையில் நான் சுதந்திரவாதி.. யார் தலையீட்டும் இல்லாமல் தன்னிச்சையாக செயல்படுகிறேன்.

ப்ளூம்பெர்க்

ப்ளூம்பெர்க்

ப்ளூம்பெர்க் தொலைக்காட்சி நிறுவனம் நேற்று வெளியிட்ட விடியோவில் தனது சுதந்திரத்தை பற்றியும், நிதியமைச்சகத்துடனான நட்பையும் பற்றி பேசினார்.

நிதியமைச்சகம்

நிதியமைச்சகம்

"ரிசர்வ் வங்கி வகுக்கும் நிதிக் கொள்கையின் அடிப்படையிலே இந்திய வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் செயல்படும், ஏதேனும் முக்கியமான மாற்றம் தேவைப்பட்டால் நிதியமைச்சகத்திடம் கலந்து ஆலோசித்து சுமுகமான முடிவுகளை எடுப்போம். இதனால் நிதியமைச்சகம், ரிசர்வ் வங்கிக்கும் எப்போதும் சாதகமான சூழ்நிலையை மட்டும் உருவாக்கி தந்துள்ளது."

பொருளாதார வளர்ச்சி
 

பொருளாதார வளர்ச்சி

சில வருடங்களுக்கும் முன்பு ஆதாவது உலக பொருளாதாரம் தறைதட்டிய 2008ஆம் ஆண்டின் போது இந்தியா பொருளாதாரம் 9 சதவீத வளர்ச்சியை பெற்றது குறிப்பிடதக்கது. மேலும் 2012-13ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 4.5 சதவீதமாக இருந்தது, பின்பு 4.9 சதவீதமாக உயர்ந்தது. தற்போது நாட்டின் வளர்ச்சி 5.5 சதவீதத்தை எட்டியது என குறிப்பிட்டார்

நிதிக் கொள்கை

நிதிக் கொள்கை

மேலும் அவர் "ரிசர்வ் வங்கி கொள்கைகள் இந்திய பொருளாதாரத்தை 7 முதல் 8 சதவீத வளர்ச்சியை எட்டும் அளவிற்கு சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது, இவ்வளர்ச்சியை பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும்" என மிகவும் தெரியமாக தெரிவித்தார்.

பணவீக்கம்

பணவீக்கம்

நாட்டின் பொருளாதார வளரச்சியை மிகவும் பாதிப்புது பணவீக்கம் தான். மேலும் தற்போது அதிகப்படியான அன்னிய முதலீடு மற்றும் அதிகப்படியான வர்த்தகத்தாலும் பணவீக்கம் குறைய துவங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

சிதம்பரம்

சிதம்பரம்

மேலும் கடந்த வாரம் மத்திய நிதயமைச்சர் ப.சிதம்பரம் "ராஜனின் செயல்திட்டங்கள் அனைவறலும் மறக்க முடியாத ஒன்று, இந்தியா பொருளாதாரத்திற்கு கிடைத்த ஒரு பொக்கிஷம்" என ராஜனை மிகவும் பாராட்டினார். மேலும் புதிய அரசு அவரை பதவியில் இருந்து நீக்காமல் தொடர்ந்து அவர் பணிபுரிய நான் வேண்டுகின்றேன் எனவும் தெரவித்தார். (சிதம்பரத்தின் புல் சப்போர்ட் ராஜனுக்கு தான் போல..)

தேர்தல் முடிவுகள்

தேர்தல் முடிவுகள்

வரும் மே 16ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தலின் முடிவுகள் வெளிவரும். மேலும் தேர்தலின் பிந்தைய கருத்துக்களான எக்ஸட் போல்ஸ் அறிக்கைகளின் படி நரேந்திர மோடி தலைமையிலான பாரத ஜனதா கட்சிக்கு அதிகப்படியான ஆதரவு கிடைத்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Raghuram Rajan: Govt can fire me but I set the monetary policy

Asserting independence of the central bank, Reserve Bank Governor Raghuram Rajan yesterday said it is he who determines the monetary policy and the government can fire him if it wanted.
Story first published: Tuesday, May 13, 2014, 11:23 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X