வேலையில் 'டாப்' ஆக வரணுமா? இதோ 5 சூப்பர் டிப்ஸ்

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: இன்றைய போட்டிகள் நிறைந்த உலகில் நம் வேலையைத் தக்கவைத்துக் கொள்வது நமக்குப் பெரும் சவால்தான். புதிது புதிதாக நிறைய திறமைகளை வளர்த்துக் கொள்வது காலத்தின் கட்டாயம். ஒவ்வொரு துறையிலுமே அடிக்கடி ஏதாவது புது டெக்னாலஜி வந்து கொண்டுதான் இருக்கிறது. அவ்வப்போது அதை நாம் அப்டேட் செய்து கொள்வதும் மிகவும் அவசியமாகிறது.

நீங்கள் பார்க்கும் தொழிலில் அல்லது வேலையில் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டுமா? மேலும், அதில் பெரிய லீடராகவும் ஆக வேண்டுமென்றால், முதலில் பின்பற்றுதலையும் கீழ்ப்படிதலையும் நீங்கள் வளர்த்துக் கொள்வது ரொம்ப ரொம்ப முக்கியம்.

உங்களுடைய திறமைகளை வளர்த்துக் கொள்வது மட்டுமல்லாமல், உங்கள் வேலையிலேயே நீங்கள் 'டாப்' ஆக வருவதற்கு இதோ சில வழிகள்...

தொடர்ந்து தொடர்பு வேண்டும்

தொடர்ந்து தொடர்பு வேண்டும்

நீங்கள் ஒரு ஆஃபீஸில் வேலை பார்க்கிறீர்களா? உங்கள் மானேஜருடன் எப்போதும் ஒரு டச் வைத்திருங்கள். உங்கள் இருவருக்குமிடையில் கம்யூனிகேசன் கேப்பே இருக்கக்கூடாது. உங்கள் வேலையில் பாஸிட்டிவோ நெகட்டிவோ, அவரிடம் அனைத்தையும் அப்டேட் செய்துகொண்டே இருங்கள். இது அவருக்குப் பிடிக்கும். உங்களுக்கும் பயன்படும்.

முழு ஈடுபாடு வேண்டும்

முழு ஈடுபாடு வேண்டும்

வேலைன்னு வந்துட்டா உங்களுடைய முழு ஈடுபாட்டையும் அதில் காட்டுங்கள். சாக்கு போக்கு சொல்லாமல், உங்களுடைய முழு உழைப்பையும் அதில் கொட்டுங்கள். இதற்கான பலன் நீச்சயம் உண்டு.

நம்பிக்கை வேண்டும்

நம்பிக்கை வேண்டும்

உங்கள் மானேஜரோ அல்லது டீம் லீடரோ, அவரை முதலில் முழுமையாக நம்புங்கள். திறந்த மனதுடன் அவருடன் பணியாற்றுங்கள்.

உந்துதல் வேண்டும்

உந்துதல் வேண்டும்

உங்கள் வேலையில் உந்துதலை அதிகம் வளர்த்துக் கொள்ள வேண்டும். வேலையில் வரும் இடறுகளையும் சவால்களை எதிர்கொள்ளவும், வேலையைத் திறம்பட செய்து முடிக்கவும் இது உதவும்.

சுய சிந்தனை வேண்டும்

சுய சிந்தனை வேண்டும்

சுய சிந்தனைகளை நீங்கள் அதிகம் வளர்த்துக் கொள்ள வேண்டும். உங்கள் பாஸ் ஏதாவது நல்ல காரியம் செய்தால், உங்களுடைய முழு ஆதரவையும் அவருக்குக் காட்டுங்கள். தவறான திசையில் போனாலும் சுட்டிக் காட்டத் தயங்காதீர்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

5 ways to be a good follower at work

To be a good leader in future, it's important to demonstrate oneself as a good follower, a key factor in a person's professional development. ET finds out a few skills that can make a professional a good follower and hence a better leader.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X