இன்போசிஸ் நிறுவனத்திற்கு நான் கேரன்டி!! நாராயணமூர்த்தி

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களுரூ: உலகெங்கிலும் பல முன்னணி நிறுவனங்கள் உட்பட பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்குப் பெரும் தலைவலியாக இருப்பது தாங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் வலிமையான நிலையும் தங்கள் வேலையின் ஆயுள் குறித்த கவலையும் தான். இந்தக் கவலை இன்ஃபோசிஸ் நிறுவனத்தையும் விட்டுவைக்கவில்லை.

 

இன்போசிஸ் நிறுவனத்தின் உயர்மட்ட குழுவே ஆடிப்போய் இருக்கும் இச்சூழ்நிலைகளில் நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் அதன் ஊழியர்களின் கவலையைப் போக்கும் வண்ணம், இன்ஃபோசிஸ் நிறுவனத்தினை இணைந்து நிறுவியவரான, நாராயண மூர்த்தி அவர்களுக்கு உறுதியளிக்கும் ஒரு கடிதத்தை எழுதியுள்ளார்.

நாராயண மூர்த்தி

நாராயண மூர்த்தி

"இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பொற்காலம் இன்னும் வரவேண்டியுள்ளது" எனத் தெரிவித்துள்ளார். அந்த நிறுவனப் பணியாளர்களிடையே கிடைத்துள்ள தகவல்கள் படி, இந்தியாவின் இரண்டாம் பெரும் மென்பொருள் ஏற்றுமதியாளரான அந்த நிறுவனத்தின் தலைவர்களுள் ஒருவரான பி ஜி ஸ்ரீநிவாஸ் பதவி விலகியுள்ளதாகவும், சமீபத்தில் அங்கிருந்து வெளியேறியவர்களில் இவர் பத்தாவது உயர் அதிகாரி என்பதால் ஊழியர்களிடையே அச்சம் நிலவி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு கடிதம்

இரண்டு கடிதம்

கடந்த சனிக்கிழமை அவர் எழுதிய முதல் கடித்ததின் உடனடி தொடர்ச்சியாக இரண்டாவது கடிதத்தில் அவர் தன் நிறுவன ஊழியர்களை "பெரியதாக சிந்தித்து தைரியமுடன் செயல்படுங்கள்" என்று கேட்டுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

திட்டமிட்ட வளர்ச்சி

திட்டமிட்ட வளர்ச்சி

முதல் கடிதத்தில் மூர்த்தி, புதிய நிர்வாகிக்கான தேடல் "திட்டமிட்ட வளர்ச்சியின் ஒரு பகுதி" எனக் குறிப்பிட்டார். "இந்த செயல்முறைகளுக்குப் பிறகு புதிய தலைமை நிர்வாகி விரைவில் அறிவிக்கப்படுவார்.

முவர் குழு
 

முவர் குழு

அதற்கானத் தேடல் தொடங்கியுள்ள நிலையில், இன்ஃபோசிஸ் நிறுவன நிர்வாகக் குழு, ஷிபு (எஸ் டி ஷிபுலால்), கிரிஸ் (எஸ் கோபாலகிருஷ்னன்) மற்றும் நானும் இணைந்து நிறுவனத்தை முடிவுசெய்யப்பட்டப் பாதையில் நல்ல முறையில் தொடர்ந்து இயக்குவோம்" என அவர் தெரிவித்தார்.

தலைமையில் மாற்றம்

தலைமையில் மாற்றம்

ஸ்ரீநிவாஸின் ராஜினாமாவைத் தொடர்ந்து "பணியாளர்கள் மற்றும் நமது வாடிக்கையாளர்கள் தொடர்பான புதிய மற்றும் சிறந்த பகுதிகளை நோக்கி நாம் பயணிக்கையில் தலைமையில் சில மாற்றங்களைக் காணவிருக்கிறோம். இந்த மாற்றங்கள் நிறுவனத்தின் ஒட்டுமொத்த நலனைக் கருத்தில் கொண்டு அமைந்க்கும" என அவர் தெரிவித்தார். ஒரு சலனமற்ற எளிதான மாற்றமாக அது இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஷிபுலால்

ஷிபுலால்

இந்த இடைப் பட்ட காலகட்டத்தில் ஸ்ரீநிவாஸ்-இன் பொறுப்புகளை தற்போதைய தலைமை அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் ஷிபுலால் கூடுதலாகக் கவனிப்பார் என அவர் ஊழியர்களுக்குத் தெரிவித்துள்ளார்.

புதிய துறைகள்

புதிய துறைகள்

வாடிக்கையாளர்கள் சந்திப்பு, நிதி சேவைகள், காப்பீடு, உற்பத்தி மற்றும் பொறியியல் சேவைகள் ஆகிய சில பணிகளை ஷிபுலால் ஏற்க உள்ளார்.

ஸ்ரீநிவாஸின் புதிய நிறுவனம்

ஸ்ரீநிவாஸின் புதிய நிறுவனம்

கடந்த வியாழனன்று ஹாங்காங்கைச் சேர்ந்த நிறுவனமான பி சி சி டபிள்யு நிறுவனம், ஸ்ரீநிவாஸ் தங்கள் குழும நிறுவனங்களின் புதிய நிர்வாக இயக்குனராக வரும் ஜூலை மாதத்தில் இணையவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Narayana Murthy reassures employees, says Infosys is on track

In a bid to reassure employees in times of perceived uncertainty, Infosys co-founder N.R. Narayana Murthy has written to them assuring them that the “best of Infosys is yet to come”. 
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X