அபரிதமான வளர்ச்சியில் ரியல் எஸ்டேட் துறை!! 7% விலை உயர்வு..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியாவின் 12 முக்கிய நகரங்களில் வீட்டு மனைகள் மற்றும் வீடுகளின் பற்றாக்குறையின் காரணமாக ஜனவரி - மார்ச் மாத காலங்களில் அதன் விலை சுமார் 7.1 சதவீதம் உயர்ந்துள்ளதாக நேஷ்னல் ஹவுசிங் வங்கி தெரிவித்துள்ளது.

 

இவ்வங்கியின் தகவல் படி கடந்த அக்டோபர்-டிசம்பர் மாத காலத்தின் விலை நிலையை ஒப்பிடுகையில் போப்பாலில் 1.3 சதவீத குறைந்தபட்ச உயர்வும், சூரத்தில் 7.1 சதவீத அதிகப்படியான உயர்வும் பதிவாகியுள்ளளது.

விலை சரிவடைந்த 12 நகரங்கள்

விலை சரிவடைந்த 12 நகரங்கள்

வீட்டு மனைகள் மற்றும் வீடுகளின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் 12 முக்கிய நகரங்களில் விலை குறைந்துள்ளது, இதில் குறைந்த பட்சமாக விஜயவாடாவில் 0.6 சரிவும், பாட்னாவில் 5.7 சதவீத சரிவும் எட்டியுள்ளது.

முக்கிய நகரங்கள்

முக்கிய நகரங்கள்

ரியல் எஸ்டேட் துறையில் கடந்த 10 வருடங்களில் அதிகப்படியான வளர்ச்சியடைந்த 3 நகரகளின் விலை நிலையை இப்போது பார்போம். இதில் முதல் இடத்தை பிடித்திருப்பது அகமதாபாத் இங்கு 6.1 சதவீத விலை உயர்வு பதிவாகியுள்ளது, சென்னையில் 5.8 சதவீத விலை உயர்வு பதிவாகியுள்ளது. இப்பட்டியலில் முன்றாம் இடத்தை பிடித்திருப்பது கொல்கத்தா இங்கு 5.1 சதவீத விலை உயர்வு பதிவாகியுள்ளது.

மற்ற நகரங்ள்
 

மற்ற நகரங்ள்

லக்னோ 4.9 சதவீதம் உயர்வு, அதே போல் விலை உயர்ந்த மற்ற நகரங்களை பார்போம் ராய்பூர் 4.4 சதவீதம், மும்பை 3.2 சதவீதம், நாக்பூர் 2.9 சதவீதம், டேராடூன் 2.7 சதவீதம், ஹைதெராபாத் 2.2 சதவீதம், டெல்லி 1.5 சதவீதம் மற்றும் போபால் 1.3 சதவீதம் உயர்வு பதிவாகியுள்ளது.

தகவல் அறிக்கை

தகவல் அறிக்கை

இத்தகவல் அனைத்தும் இந்தியாவின் 26 முக்கிய நகரங்களில் புதிதாய் வாங்க மற்றும் விற்கப்பட்ட விட்டு மனைகள் மற்றும் கட்டிடங்களின் விலை நிலை ஒப்பிட்டு தணிக்கை அறிக்கையை வெளியிட்டதாக நேஷ்னல் ஹவுசிங் வங்கி தெரிவித்துள்ளது. மேலும் இத்தகவல் அனைத்து மத்திய சொத்து புனரமைப்பு மற்றும் பாதுகாப்பு துறையிடம் பெறப்பட்டவை என்பது குறிப்பிடதக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Housing prices rose by up to 7 per cent in 12 major cities: National Housing Bank

Housing prices have increased by up to 7.1 per cent in 12 major cities, including Delhi and Mumbai, in January-March period of this year due to a surge in demand, National Housing Bank said on Thursday.
Story first published: Friday, June 13, 2014, 13:43 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X