மாநில அரசின் உதவியை நாடும் மத்திய ரயில்வே துறை!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியாவில் ரயில்வே துறை மிகவும் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், புதிய திட்டங்களை அமல்படுத்த மாநில அரசுகளின் உதவி அவசியம் என இந்திய ரயில்வே துறை அமைச்சரான சதானந்த கவுடா தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து சதானந்த கவுடா அளித்த போட்டியில் "ரயில்வே துறையில் புதிய திட்டங்களை நிறைவேற்ற புதிய விதிமுறையை பின்பற்ற ஆலோசிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய திட்டங்களுக்கான செலவில் சரிபாதி தொகை மாநில அரசுகள் ஏற்பதோடு, திட்டங்களுக்கான நிலங்களையும் இலவசமாக வழங்க வேண்டும்" என சதானந்த கவுடா வலியுறுத்தவுள்ளோம்.

ஏன் இந்த நிலை??

ஏன் இந்த நிலை??

மத்திய அரசின் திட்டங்களை நிறைவேற்ற மாநில அரசின் உதவியை நாடுவதற்கு என்ன காரணம் என்று பார்த்தால். இதற்கு முன் ரயில்வே அமைச்சர்களாக இருந்தவர்கள், திட்டங்களுக்கான செலவையும், அவற்றை நிறைவேற்றுவதில் உள்ள பிரச்னைகள் பற்றியும் கவலைப்படாமல், ஏராளமான திட்டங்களை அறிவித்துள்ளனர்.

வருமானத்தை விட, செலவுகள் அதிகம்..

வருமானத்தை விட, செலவுகள் அதிகம்..

இந்தியாவில் செயல்படுத்தப்பட்டுள்ள 5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ளன. மேலும் ரயில்வே துறைக்கு, 25 ஆயிரம் கோடி ரூபாய் முதல் 30 ஆயிரம் கோடி ரூபாய் வரை தான், வருவாய் கிடைக்கிறது. வரவை விட செலவு அதிகமாக உள்ள போது எப்படி புதிய திட்டங்களை நிறைவேற்ற முடியும்.

பணம் மற்றும் நில உதவி
 

பணம் மற்றும் நில உதவி

இனி அமல்படுத்தும் புதிய திட்டங்களுக்கான செலவில் சரிபாதி தொகையை, தத்தம் மாநில அரசுகள் ஏற்பதோடு, திட்டங்களுக்கான நிலங்களையும் இலவசமாக மாநில் அரசு வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தென் இந்தியா

தென் இந்தியா

தென் இந்தியாவின் கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களுடன், இது தொடர்பாக ஏற்கனவே ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களின் முதல்வர்களும் இந்த நடைமுறையை பின்பற்றக் கோரி, கடிதம் எழுதியுள்ளேன் என்று சதானந்த கவுடா தெரிவித்துள்ளார்.

பட்ஜெட்

பட்ஜெட்

பயணிகளுக்கு பாதுகாப்பு அளிப்பது, சிறப்பான சேவை அளிப்பது, ரயில்களின் வேகத்தை அதிகரிப்பது ஆகிய விஷயங்களுக்கு, இந்த பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்படும்.

ரயில்வே கட்டணம்

ரயில்வே கட்டணம்

தற்போதுள்ள நெருக்கடியான சூழ்நிலையில், பயணிகள் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நிதி அமைச்சரிடமும் இதுகுறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

States must share cost if they want railway projects: DV Sadananda Gowda

Resources are a big issue. Some ministers in the past looked at announcing new projects, without bothering about their actual delivery. We have some Rs 5 lakh crore (Rs 5 trillion) worth of projects, announced by earlier regimes, on ground. But the ministry gets only about Rs 25,000 crore to Rs 30,000 crore by way of net revenue.
Story first published: Tuesday, June 17, 2014, 11:42 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X