இந்தியா மிகப்பெரிய பொருளாதார நாடாக உருமாறும்!! ஷெரில் சாண்ட்பெர்க்

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஹைதராபாத்: பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஷெரில் சாண்ட்பெர்க் இந்தியாவிற்கு பிரதமர் சந்திப்பு, நிறுவன ஊழியர் சந்திப்பு, புதிய செயல் திட்டங்கள் அமைத்தல் என பல முக்கிய பணிகளுக்காக இந்தியா வந்துள்ளார்.

இன்று காலை அவர் பேசுகையில் இந்தியா உலகில் வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளுள் ஒன்று மட்டுமல்ல மிகப்பெரிய பொருளாதார நாடாக வளர அனைத்து விதமான ஆற்றலும் இந்தியாவிற்கு உள்ளது என அவர் தெரிவித்தார்.

ஷெரில் சாண்ட்பெர்க்

ஷெரில் சாண்ட்பெர்க்

இவர் பேஸ்புக் நிறுவனத்தின் உயர் அதிகாரி மட்டும் அல்ல அமெரிக்காவின் கருவூல துறையின் உயர் அதிகாரியாக பொறுப்பு வகித்தவர். இவர் தலைமையில் பேஸ்புக் நிறுவனம் உலகளவில் மிகப்பெரிய உயரங்களை தொட்டது. மேலும் இவர் பேஸ்புக் நிறுவனத்தின் அசைக்க முடியாத சொத்து.

இந்தியா

இந்தியா

2 டிரில்லியன் டாலர் மதிப்புடைய இந்தியா பொருளாதாரத்தின் வளர்ச்சி இன்னும் சில ஆண்டுகளில் பல மடங்கு உயரும் என நான் நாம்புகிறோன். மேலும் இந்தியாவின் வளர்ச்சி அனைத்தும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை மட்டுமே சாந்து உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

வேலைவாய்ப்புகள்

வேலைவாய்ப்புகள்

தற்போது இந்தியாவில் இருக்கும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று வேலைவாய்ப்பு, இப்பிரச்சனை இந்தியாவில் மட்டும் இல்லை அமெரிக்கா போன்ற பல நாடுகளில் உள்ளது இதனை சமாளிக்க ஒரே வழி சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை உக்கப்படுத்தி வளர்ப்பது தான். இத்தகைய நிறுவனங்கள் வளர்வதன் மூலம் வேலைவாய்ப்பு, வர்த்தகம், பண சுழற்ச்சி ஆகியவை கண்டிப்பாக உயரும்.

ஜிடிபி

ஜிடிபி

இந்தியாவின் ஜிடிபி-யில் 8 சதவீதம் சிறு, மற்றும் நடுத்தர நிறுவனங்களை மட்டுமே சார்ந்துள்ளது, 40 சதவீதம் உற்பத்தி துறையும், 40 சதவீதம் ஏற்றுமதியையும் சார்ந்துள்ளது.

வளர்ச்சி

வளர்ச்சி

இந்தியா உலகில் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்று, ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக 5 சதவீதத்திற்கும் குறைவான வளர்ச்சியை மட்டுமே பதிவு செய்துள்ளது குறிப்பிடதக்கது.

நரேந்திர மோடி

நரேந்திர மோடி

மேலும் இந்தியாவில் நரேந்திர மோடி தலைமையிலான புதிய ஆட்சி அமைந்ததை தொடந்து சிறப்பான வளர்ச்சியை எட்டும் என எதிர்பார்கிறேன் எனவும் அவர் தெரிவித்தார். இவரின் இந்திய பயணத்தில் மோடி உடனான சந்திப்பு மிகவும் முக்கியமானது.

பேஸ்புக்

பேஸ்புக்

ஆசிய பசிபிக் கண்டத்தில் இந்திய பேஸ்புக்கின் இரண்டாவது மிகப்பெரிய சந்தை, மற்றும் வேகமாக வளர்ந்து வரும் சந்தை. இதனால் எங்களின் வருவாய் பட்டியலில் இந்தியா மிகப்பெரிய இடத்தை பிடித்துள்ளது என ஷெரில் சாண்ட்பெர்க் தெரிவித்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Facebook COO Sheryl Sandberg: India has potential to be largest economy

India, an emerging global economic power, has the potential to become the largest economy in the world, Facebook chief operating officer (COO) Sheryl Sandberg said today.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X