அமெரிக்காவில் ஒரு கோடி வேலைவாய்ப்பை உருவாக்கிய ஒபாமா!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாஷிங்டன்: அமெரிக்காவின் நிறவெறி இலக்கணத்தை ஒழித்து, மாற்றியமைத்த வெள்ளை மாளிகையின் கருப்பு முத்து என போற்றப்படும் ஒபாமா, அமெரிக்காவில் கடந்த 51 மாதங்களில் தோராயமாக 1 கோடி வேலைவாய்ப்பை உருவாக்கியுள்ளார். அவரது செயல் அமெரிக்காவின் நடுத்தர மக்கள் மற்றும் கீழ்தட்டு மக்களுக்கும் பெரிதும் உதவியுள்ளது என ஒபாமா மக்களிடம் தெரிவித்துள்ளார்

 

மேலும் கடந்த சில வருடங்களாக அமெரிக்காவின் பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் பாதிப்புக்குள் உள்ளான போதும் அதை சமாளித்து நாம் நிலைபெற்றுள்ளோம். இந்த தருணங்களில் நாம் 1 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது சாதனைக்குரியது என ஒபாமா தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

வளர்ச்சி

வளர்ச்சி

பொருளாதார பாதிப்புக்கு பின்பு அமெரிக்காவின் கார்ப்ரேட் நிறுவனங்களின் லாபம், பங்கு சந்தை, வீட்டுவசதிகள் ஆகிய அனைத்தும் உயர்ந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

நடுத்தர மக்களின் நிலை

நடுத்தர மக்களின் நிலை

அமெரிக்காவின் பொருளாதாரம் சிறப்பாக வளர்ந்துள்ள போதிலும் நடுத்தர குடும்பங்கள் மற்றும் மக்கள் இன்னும் தங்களது வாழ்வாதரத்தை உயர்த்திக்கொள்ள கஸ்டப்படுகின்றனர். இங்கு பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாக மாறி வருகின்றனர், ஏழைகள் இன்னும் ஏழ்மையை சந்தித்து வருகின்றனர் என்பதே ஒபாமாவின் கருத்து. இந்தியாவும் இதே போன்ற பிரச்சனையை தான் சந்தித்து வருகிறது, இது மறுக்க முடியாத உண்மை.

கடுமையான உழைப்பு

கடுமையான உழைப்பு

இந்த சிஸ்டத்தில் கடுமையாக உழைக்கும் அனைத்து மக்களுக்கும் தக்க வகையில் பலனை அனுபவிக்கிறார்கள், இதனால் பல குடும்பங்கள் பொருளாதார ரீதியில் உயர்ந்துள்ளனர் எனவும் ஒபாமா தெரிவித்தார்.

நடுத்தர மக்கள்
 

நடுத்தர மக்கள்

மேலும் இனி வரும் சட்ட திட்டங்கன் அனைத்தும் நடுத்தர மக்கள் வாழ்வை உயர்த்தும் வகையிலே அமைக்கப்படும் எனவும் அதில் யாருடைய தலையீடும் இருக்காது என்றும் அவர் தெரிவித்தார். இதற்காக அவர் கட்டுமான திட்டங்கள், உற்பத்தி வேலைவாய்ப்புகளை முடுக்கி விடப்படும் என அவர்தெரிவித்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

US created 9.4 mn new jobs in last 51 months: Obama

US President Barack Obama ignited a new power showdown with Republicans, vowing to improve the economy alone and said his administration created 9.4 million jobs in the last 51 months to “help the middle class” despite facing “obstruction”.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X