தாத்தா காலத்து ரயில்வே துறையை நவீனமயமாக்க ரூ.5.6 லட்சம் கோடி தேவை!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: மத்திய அரசின் புதிய பட்ஜெட் வரும் ஜூலை 10 தேதியண்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் நிலையில் அடுத்த சில நாட்களில் ரயில்வே துறையின் பட்ஜெட்டும் வர உள்ளது. இதில் இந்திய ரயில்வே துறையின் அடுத்த 5 வருட வளர்ச்சியை மையமாக கொண்டு முக்கியமான திட்டங்கள் அனைத்தும் வர உள்ளது.

 

இந்த திட்டங்களின் மூலம் இந்திய ரயில்வே துறை உலக தரத்திற்கு உயர்ந்து வருவாய் கொழிக்கும் துறையாக உருமாற அனைத்து வகையான நடவடிக்கைகளும் இதில் அடங்கும் என ரயில்வே துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உள்கட்டுமான வளர்ச்சி

உள்கட்டுமான வளர்ச்சி

இந்த பட்ஜெடில் இந்தியாவின் உள்கட்டுமானத்தை உக்குவிக்கு அதிகப்படியான நிதியும், திட்டங்களும் ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது. இதற்கு ஏற்ப ரயில்வே துறையும் இந்தியாவின் உள்கட்டுமான வளர்ச்சியில் ஒரு முக்கிய பங்காற்றும் எனவும் இத்துறையின் சதானந்த கவுடா தெரிவித்தார்.

இந்திய ரயில்வே துறை

இந்திய ரயில்வே துறை

தற்போது இந்தியா ரயில்வே துறை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. தெளிவாக சொல்ல வோண்டும் என்றால் முக்கியமான இடங்களுக்கு தக்க சமையத்தில் ஒரு முன்பதிவு டிக்கெட் கூட பதிவு செய்ய முடியவில்லை. அப்படி டிக்கெட் கிடைத்தாலும் புக்க செய்வது ரொம்ப கஷ்டம் ஐ.ஆர்.சி.டி.சி வலைதளம் அந்த அளவிற்கு செயல் திறனற்று உள்ளது.

சரக்கு போக்குவரத்தில் நஷ்டம்
 

சரக்கு போக்குவரத்தில் நஷ்டம்

ரயில் சரக்கு போக்குவரத்து நிறுவனங்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கும் ஒரே காரணத்தால் இந்திய நிறுவனங்களிடம் இன்னும் பிரபலமாகாத நிலையில் உள்ளது. அது ரயில்வே துறைக்கு மிகுதியான நஷ்டம்.

வேகம் குறைவு

வேகம் குறைவு

மேலும் இந்தியா போக்குவரத்தில் பாதுகாப்பு மிகவும் குறைவாக உள்ளது, குறிப்பாக ரயில்வே துறையில்!! இதனால் தான் விபத்துகளை தடுக்க ரயிலின் வேகம் மிகவும் குறைவாக செலுத்தப்படுகிறது. இது வேகம் மட்டும் அல்ல இத்துறையின் ஒட்டுமொத்த வருவாயை பாதிக்கிறது.

நவீன ரயில்வே

நவீன ரயில்வே

இந்தியாவின் தாத்தா காலத்து ரயில்வே துறையை யூத்தாக மாற்ற சுமார் ரூ.5.6 இலட்சம் கோடி செலவாகும். அதில் இத்துறையின் பாதுகாப்பு அம்சத்திற்காகவே ரூ.1 இலட்சம் கோடி தேவை எனவும், இதை அரசு முழுமையாக கொடுக்க முடியாது என இத்துறை தெரிவித்துள்ளது. எனவே இத்துறையை கார்ப்ரேட் துறையாக மாற்றி தனியார் நிறுவனங்களின் முதலீட்டையும், அன்னிய முதலீட்டையும் அதிகரிக்க வழிவகை செய்யவேண்டும் என இத்துறை கூறுகிறது.

தாத்தா.. ரயில்வே..

தாத்தா.. ரயில்வே..

பிற நாடுகளை ஒப்பிடுகையில் இந்திய ரயில்வே துறை மிகவும் பழமையான டெக்னாலஜியை தான் இன்னும் பயன்படுத்தி கொண்டு வருகிறது. குறிப்பாக ஆஸ்திரேலியா, பெல்ஜியம், கனடா, சீனா போன்ற நாடுகள் அதில் சிறப்பாக உள்ளது. ஆனால் உலகின் நான்காவது மிகப்பெரிய ரயில்வே நெட்வொர்க் உடைய நாடு இந்தியா.

கார்ப்ரேட் துறை

கார்ப்ரேட் துறை

இத்துறையை கார்ப்ரேட் துறையாக மாற்றும் போது அதிகப்படியான முதலீடு கிடைக்கும் அதை கொண்டு இந்தியாவில் மிகப்பெரிய திட்டங்களை உரிய காலத்திற்கு செயல்படுத்துவது சாத்தியம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Modernisation of railways is slated to cost at least Rs 5.6 lakh crore

The new NDA government's first Railway Budget, to be presented early next week, is an opportunity to show off a bold and visionary approach towards developing infrastructure and boosting economic growth. It must focus on shaking off the railways' lethargy and implementing audacious new plans to push Indian rail services closer to global benchmarks over the next five years.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X