13% உயர்வை சந்தித்த ரயில்வே துறை பங்குகள்!! ரயில்வே பட்ஜெட் 2014

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இன்றைய ரயில்வே பட்ஜெட்டை எதிர்நோக்கி நேற்று பங்கு சந்தையில் ரயில்வே துறை சார்ந்த நிறுவனங்களின் பங்குகள் அனைத்தும் உயர்வை சந்தித்துள்ளது. இத்தகைய பங்குகள் மட்டும் அல்லாமல் மொத்த பங்கு சந்தையும் சுமார் 26,000 புள்ளிகளை எட்டி நேற்று வரலாற்று சாதனையை படைத்துள்ளது.

 

பிரதமர் நரேந்திர மோடியின் முதல் பட்ஜெட்டின் முதல் கூட்டம் நேற்று துவங்கியது, வழக்கம் போல நேற்றும் நாடாளுமன்றத்தில் விலைவாசி உயர்வு போன்ற பிரச்சனைகளின் காரணமாக அமைச்சர்கள் கூச்சலிட்டு அவையை ஒத்திவைத்தார் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் .

பங்கு சந்தை

பங்கு சந்தை

இந்த பிரச்சனைகள் எதையும் கண்டுக்கொள்ளாமல் பங்கு சந்தை கலக்கோ கலக்கியது, ஆசிய பங்கு சந்தைகள் அனைத்தும் மந்தமாக இருந்த நிலையில் மும்பை பங்கு சந்தை மட்டும் சிறப்பாக இருந்தது குறிப்பிடதக்கது. ஜூலை 10ஆம் தேதிக்குள் பங்கு சந்தை 26,500 முதல் 27,000 புள்ளிகள் வரை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரயிவ்வே துறை பங்குகள்

ரயிவ்வே துறை பங்குகள்

நேற்று நடந்த வர்த்தகத்தில் மட்டும் இந்திய ரயில்வே துறை சார்ந்த பங்கு சந்தையில் பட்டியலிடபட்டுள்ள நிறுவனங்களின் பங்குகள் அனைத்து சிறப்பாக அளவில் வர்த்தகத்தில் ஈடுப்பட்டது. இதனால் இத்துறைப் பங்குகள் 13 சதவீதம் வளர்ந்துள்ளது.

நிறுவனங்கள்

நிறுவனங்கள்

டெக்ஸ்மாக்கோ ரயில் மற்றும் என்ஜினியரிங் நிறுவனம் 13 சதவீத உயர்வும், கன்டெய்னர் கார்ப் நிறுவனம் 6.2 சதவீதமும் உயர்ந்துள்ளது. இந்த உயர்வில் இரு நிறுவனங்களும் 52 வார உயர்வை சந்தித்துள்ளது.

ரயில்வே பட்ஜெட்
 

ரயில்வே பட்ஜெட்

இன்றைய ரயில்வே பட்ஜெட்டில் அதிகளவில் பாதுகாப்பையும், திட்டங்களை விரைவில் செயல்படுத்துவதும், புல்லட் ரயில் இயக்குவதும் குறித்து அதிகளவில் முக்கியதுவம் அளிக்கப்படும் என தெரிகிறது. இத்துறையின் நிதித் தேவைக்காகவும், தொழிற்நுட்பம் தேவையை ஈடுகட்ட ரயில்வே துறை தனியார் நிறுவனங்களை நாடுவதாகவும் செய்திகள் கிடைத்துள்ளது.

 தாக்கல்

தாக்கல்

செவ்வாய்கிழமை 12 மணியளவில் நாடாளுமன்றத்தில் சதானந்த கவுடா புதிய மத்திய அரசின் முதல் ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Railway stocks rally as much as 13% ahead of Rail Budget 2014

Stocks of companies that derive a substantial part of revenues from their business with the Indian Railways have been on a roll ahead of the Railway Budget on Tuesday as expectations are high.
Story first published: Tuesday, July 8, 2014, 10:41 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X