அருண் ஜேட்லியின் வரி சலுகையால் ரூ.40,000 வரை சேமிக்க முடியும்!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: மாத ஊதியம் பெறுபவர்களுக்கு போனஸ் வழங்கும் விதமாக, நிதியமைச்சர் திரு.அருண் ஜேட்லி வருமான வரி செலுத்துவதற்கான உச்ச வரம்பை ரூ.2 இலட்சத்திலிருந்து ரூ.2,50,000 ஆக உயர்த்தியுள்ளார். இதன் மூலம் அவர்கள் தங்களுடைய வருமானத்தில் சுமார் ரூ.40,000-ஐ சேமிக்க முடியும்.

 

2014-15ஆம் ஆண்டு பட்ஜெட்டில் தனிநபர்களின் வருமான வரி உச்ச வரம்பு ரூ.2 இலட்சத்திலிருந்து ரூ.2.5 இலட்சமாகவும், 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு இச்சலுகை ரூ.2.5 இலட்சத்திலிருந்து ரூ.3 இலட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

வரி விலக்கு

வரி விலக்கு

அதே சமயத்தில், வருமான வரி விலக்களிக்கப்பட்டிருக்கும் சிறிய முதலீடுகளுக்கான உச்ச வரம்பை ரூ.1 இலட்சத்தில் இருந்து ரூ.1.5 இலட்சமாக உயர்த்தியுள்ளார். இந்த சலுகைகளை வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ் கொடுத்துள்ளனர். இதில் பொது சேமநல நிதி, ஆயுள் காப்பீடு, நிலையான வைப்பு நிதி திட்டங்கள் மற்றும் வருங்கால வைப்பு நிதி ஆகிய திட்டங்கள் அடங்கும்.

வீட்டுக் கடன்

வீட்டுக் கடன்

வீட்டுக் கடன் வாங்கியுள்ளவர்களில், அவர்களே வீட்டில் குடியேறி இருந்தால் கடன்களை திரும்ப செலுத்தும் போது ரூ.1.5 இலட்சம் வரையிலும் இருந்த வட்டி சலுகைகளை ரூ.2 இலட்சம் வரை கொடுக்க வகை செய்துள்ளது திரு.ஜேட்லியின் பட்ஜெட்.

சேமிப்பு
 

சேமிப்பு

வரி விலக்கிற்கான உச்ச வரம்பு அதிகரிப்பு மற்றும் சேமிப்பின் மீதான வரியில் உச்ச வரம்பு அதிகரிப்பு ஆகியவற்றால், ஒரு தனிநபரால் வருடத்திற்கு ரூ.39,655/- வரையிலும் சேமிக்க முடியும்.

அதிக வருமானம் பெறுபவர்கள்

அதிக வருமானம் பெறுபவர்கள்

ரூ.3 இலட்சத்தை ஆண்டு வருமானமாக கொண்டுள்ள தனிநபருக்கு, இந்த வரி சலுகைகளால் ரூ.5,150-வரையிலும் சேமிக்க முடியும். ரூ.5 இலட்சத்தை ஆண்டு வருமானமாக கொண்டுள்ள தனிநபர்கள், ரூ.10,300-ஐ சேமிக்க முடியும். இந்த சலுகைகளை வருமான வரி சட்டத்தின் 80C பிரிவில் இவர்கள் பெறுவார்கள்.

10 இலட்சம் வருமானம்

10 இலட்சம் வருமானம்

ரூ.10 இலட்சம் வருமானம் கொண்டுள்ளவர்கள், இந்த வரி சலுகைகளால் ரூ.15,450-ஐ சேமிக்க முடியும் என்கிறது KPMG நிறுவனத்தின் கணக்கீடுகள்.

அருண் ஜேட்லி

அருண் ஜேட்லி

'நான் வரி வீதங்களில் எந்தவித மாற்றத்தையும் கொண்டு வருமாறு முன்மொழியவில்லை. எனினும், சிறிய அளவில் வரிகளை செலுத்துபவர்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு சலுகை அளிக்கும் எண்ணத்துடன், 60 வயதுக்கு குறைவாக, ரூ.2 இலட்சம் வருமானம் பெறுவர்களுக்கு ரூ.50,000-ஐ அதிகரித்து ரூ.2.50 இலட்சமாக உயர்த்துமாறு கேட்டுக் கொண்டேன்', என்று 2014-15-ம் ஆண்டுக்கான பாராளுமன்ற பட்ஜெட் உரையில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tax sops help salaried class people save up to Rs.40,000

In a bonanza for salaried class, Finance Minister Arun Jaitley today raised the I-T exemption limit to Rs 2.5 lakh and hiked investment limit for tax savings by Rs 50,000, enabling individuals to save up to Rs 40,000.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X