இந்தியாவில் புதிய தொழிற்சாலையை துவங்கிய அமெரிக்க மருந்து நிறுவனம்!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: அமெரிக்காவின் பிலடெல்பியா மாகாணத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் வெஸ்ட் பார்மா நிறுவனம் ஆசிய பசிபிக் பகுதிகளில் தனது தயாரிப்பு மற்றும் விற்பனையை ஊக்குவிக்க ஆந்திர பிரதேசத்தின் ஸ்ரீசிட்டி பகுதியில் ஒரு புதிய தொழிற்சாலையை புதன்கிழமை துவங்கியுள்ளது.

வெஸ்ட் பார்மா நிறுவனம் அடுத்த இரண்டு வருடத்தில் இந்தியாவில் சுமார் 15 மில்லியன் டாலர் முதலீடு செய்ய உள்ளது.

தொழிற்சாலை

தொழிற்சாலை

ஆந்திராவில் தொழிற்துறை வளர்ச்சி பெற பல திட்டங்களை அம்மாநிலம் அமைத்து வருகிறது. இதற்காக அமைத்தது தான் ஸ்ரீசிட்டி தொழிற்சாலை பகுதி, இப்பகுதியில் வெஸ்ட் பார்மா நிறுவனம் 1.64 இலட்சம் சதுர அடியில் ஒரு புதிய தொழிற்சாலையை அமைக்க உள்ளது. இதில் 2018ஆம் ஆண்டுக்குள் 1.6 பில்லியன் மருந்து அட்டைகளை விற்பனை செய்ய வேண்டும் எனபதே அந்நிறுவனத்தின் குறிக்கோள்.

தேவை

தேவை

ஆனால் இந்த இடைப்பட்ட காலத்தில் ஆசிய பசிபிக் பகுதிக்கு ஒரு வருடத்திற்கு 35 பில்லியன் அட்டைகள் தேவைப்படும். மேலும் நிறுவனம் 7 சதவீதம் வளர்ச்சி இலக்கை கொண்டு செயல்பட திட்டமிட்டுள்ளது.

இடவசதிகள்
 

இடவசதிகள்

ஜூன் 2012ஆம் ஆண்டு இப்பகுதியில் வெஸ்ட் பார்மா நிறுவனம் 7.836 இலட்த சதுரடி நிலைத்தை பெற்றுள்ளது, இது சென்னைக்கு மிக அருகில் உள்ளது குறிப்பிடதக்கது. மிதமுள்ள நிலத்தில் இந்தியான் தேவைக்கு ஏற்ப இந்நிறுவனம் elastomers தயாரிக்க திட்டமிட்டுள்ளது.

ஸ்ரீசிட்டி சிறப்பு பகுதி

ஸ்ரீசிட்டி சிறப்பு பகுதி

வெஸ்ட் பார்மா நிறுவனத்தின் இந்திய வாடிக்கையாளரான சன் பார்மா, ஹாஸ்பிரா மற்றும் டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ் ஆகிய நிறுவனங்கள் இனி ஸ்ரீசிட்டி தொழிற்சாலையில் இருந்து அலுமினியம் மற்றும் பிளாஸ்டிக் தொப்பிகள் ஆகியவற்றை பெறும் என வெஸ்ட் பார்மா தெரிவித்துள்ளது.

இறக்குமதி

இறக்குமதி

இந்நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கான முலப்பொருட்களை சீனா மற்றும் சிங்கப்பூரிலிருந்து இறக்குமதி செய்யும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

US firm West Pharma opens first India factory in Andhra Pradesh

Philadelphia-headquartered West Pharmaceutical Services on Wednesday inaugurated a plant at the Sri City Special Economic Zone in Andhra Pradesh, strengthening its manufacturing base in the Asia-Pacific region.
Story first published: Thursday, July 17, 2014, 13:32 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X