18,000 பேர் வேலைக்கு ஆப்பு வைக்கும் சத்ய நாடெல்லா!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரெட்மாண்ட், வாஷிங்டன்: உலகின் முன்னணி சாப்ட்வேர் நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனம் அடுத்த ஒர் ஆண்டுக்குள் சுமார் 18,000 பணியாட்களை நிறுவனத்தில் இருந்து வெளியேற்றுவதாக தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை தனது மொத்த பணியாட்களில் 14 சதவீதம். இந்த 18,000 பேரில் எந்த ஒரு பாகுபாடு இல்லாமல் உயர்மட்டும் முதல் தரைமட்ட ஊழியர்களை வரை உட்படுத்தப்படுவார்கள் என மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த செய்தி வெளியான முதல் பங்கு சந்தையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பங்குகள் 3 சதவீதம் உயர்ந்தது.

அதிர்ச்சி..

அதிர்ச்சி..

இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை இந்நிறுவனத்தின் ஊழியர்களிடத்திலவ் மிகுந்த கவலையை அளித்துள்ளது. இதனால் நிறுவன ஊழியர்களின் மனநிலை சற்று மோசமான நிலையில் உள்ளதாகவும் இந்நிறுவனத்தின் பணியாளர்கள் தெரிவித்தனர். இந்நிறுவனத்தில் ஆட்குறைப்பு இருக்கும் என்பது தெரிந்திருந்தாலும், அதன் எண்ணிக்கையை கண்டு பணியாளர்கள் ஷாக் ஆகியுள்ளார்கள்.

சத்யா நாடெல்லா

சத்யா நாடெல்லா

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முன்னால் சீஇஓ ஸ்டீவ் பால்மர் பிறகு சத்ய நாடெல்லா இப்பதவியில் இருக்கிறார். இவர் பதவியேற்றிய பிறகு இவர் எடுக்கும் மிகப்பெரிய முடிவு இது என பலர் தெரிவித்துள்ளனர். ஆட்குறைப்பு பற்றி அவர் வெளியிட்ட செய்தியில் "நிறுவனத்தின் வேகமான வளர்ச்சிக்காவும், பணியின் தரத்தை உயர்த்துவதற்காவும் ஆட்குறைப்பு அவசியமாகிறது." என நாடெல்லா தெரிவித்தார்.

12,500 அதிகாரிகள்
 

12,500 அதிகாரிகள்

இந்த 18,000 பேர் இலக்கில் 12,500 பேர் தொழிற்நுட்ப வல்லுனர்கள் மீதமுள்ளவை தொழிற்சாலை பணியாளர்கள் என மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது. இதன் மூலம் நிறுவனத்தின் வருவாய் அடுத்த நான்கு காலாண்டில் 1.1 பில்லியன் டாலர் முதல் 1.6 பில்லியன் டாலர் வரை உயரும் என இந்நிறுவனம் தெரிவிக்கிறது.

வால் ஸ்ட்ரீட்

வால் ஸ்ட்ரீட்

எஃப்.பி.ஆர் கேப்பிடல் மார்கெட் ஆய்வு நிறுவனத்தின் டேனியல் ஐவ்ஸ் கூறுகையில் வால் ஸ்ட்ரீட் கணிப்புகளை விட இந்நிறுவனத்தின் ஆட்குறைப்பு இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

போட்டி சமாளிக்க..

போட்டி சமாளிக்க..

சந்தையில் உள்ள நிறுவனங்களை சமாளிக்க மைக்ரோசாப்ட் நிறுவனம் நலினமாகவும், அர்த்தமுள்ளதாரகவும் இருக்க வேண்டும். அதிகப்பிடியான பணியாட்களை கொண்டிருந்தால் லாபத்தில் பெரு பங்கை நிறுவனம் இலக்க நேரிடும் எனவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

பங்கு சந்தை

பங்கு சந்தை

மைக்ரோசாப்ட் பற்றிய இத்தகைய செய்திகளால் இந்நிறுவனத்தின் பங்குகள் சுமார் 3.1 சதவீதத்திற்கு உயர்ந்து 45.43 டாலருக்கு விற்கப்படுகிறது. இந்த வருடம் துவக்கம் முதல் இப்பங்குகள் சுமார் 18 சதவீதம் உயர்ந்துள்ளது குறிப்பிடதக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Satya Nadella swings axe to cut 18,000 jobs in Microsoft over next year

Microsoft is cutting up to 18,000 jobs, about 14 percent of its staff, over the next year as it works to cut down on management layers and integrate the Nokia devices business it bought in April.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X