சாதனைக்கு மேல் சாதனை.. இந்திய சந்தையில் கலக்கும் டி.சி.எஸ்..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இந்தியாவின் மிகப்பெரிய சாப்ட்வேர் ஏற்றுமதி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்விசஸ் நிறுவனம் புதன் கிழமை சந்தை மதிப்பின் படி சுமார் 5 இலட்சம் கோடியை தொட்டது. எந்த ஒரு இந்தியா நிறுவனமும் இந்த இடத்தை இதுவரை எட்டியதில்லை என்பது குறிப்பிடதக்கது. அது டாடா குழுமத்திற்கும், இந்திய சந்தைக்கும் ஒரு மையில் கல்.

 

புதன் கிழமை வர்த்தக முடிவில் டிசிஎஸ் நிறுவனத்தின் சந்தை முதலீடு சுமார் ரூ.5,06,703.34 கோடியை தொட்டது. இந்நிறுவனம் பங்கு சந்தையில் பட்டியலிட்டு 10 வருடம் ஆனா நிலையில் சந்தை முதலீடு 5 இலட்சம் கோடியை தொட்டது இதுவே முதல் முறை.

(வரலாற்று சாதனை படைத்த டி.சி.எஸ்!! மகிழ்ச்சியில் பங்குதாரர்கள்)

(Read this: How to transfer EPF claim online when you change your job?)

பங்கு சந்தையில் கலக்கல்

பங்கு சந்தையில் கலக்கல்

நேற்றைய பங்கு சந்தை முடிவில் இந்நிறுவனத்தின் பங்குகள் சுமார்ல2.21 சதவீதம் உயர்ந்து ரூ.2,586.90 என்ற விலையில் முடிவடைந்தது. இந்நிலையில் நேற்று இந்நிறுவனத்தின் பங்குகள் 2.52 சதவீதம் உயர்ந்து 2,595 ரூபாய் வரை எட்டி 52 வார உயர்வை தொட்டது.

சாதனை

சாதனை

டிசிஎஸ் நிறுவன பங்குகள் 52 வார உயர்வை எட்டியதை தொடர்ந்து இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு 5 இலட்சம் கோடியை தொட்டது. இதனால் எந்த ஒரு இந்திய நிறுவனமும் செய்யாத ஒரு சாதனையை டிசிஎஸ் செய்தது.

இன்போசிஸ், எச்சிஎல், விப்ரோ எல்லாம் சில்லறை
 

இன்போசிஸ், எச்சிஎல், விப்ரோ எல்லாம் சில்லறை

சந்தை மதிப்பீட்டில் இன்போசிஸ், எச்.சி.எல், விப்ரோ மற்றும் டெக் மஹிந்திரா நிறுவனத்தை ஒன்று சேர்த்தாலும் டிசிஎஸ் நிறுவனத்தை நெருங்க முடியாது. மேலும் டாலர் மதிப்பீட்டில் இந்நிறுவனத்தின் மதிப்பு 84 பில்லியன் டாலர் வரை உயர்ந்துள்ளது.

மொத்த டாடாவும்.. டிசிஎஸ்..

மொத்த டாடாவும்.. டிசிஎஸ்..

டாடா குமுமத்தின் மற்ற 16 நிறுவனங்களின் சந்தை மதிப்பீடு 3,06,338.63 கோடி மட்டும் தான். இதுவும் டிசிஎஸ் நிறுவனத்தை விட குறைவு தான்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

TCS attained Rs 5 lakh crore market valuation

Tata Consultancy Services (TCS), the country's largest software services exporter, on Wednesday attained a market valuation of over Rs 5 lakh crore, becoming the first company in Indian markets to achieve this milestone.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X