தங்க வைப்பு நிதியில் 6,000 கிலோ தங்கம்!! திருப்பதி தேவஸ்தானம்..

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

திருப்பதி: பக்தர்கள் திருப்பதி ஏழுமலையானுக்கு காணிக்கை செலுத்திய சுமார் 1,800 கிலோ தங்கத்தை கோயில் நிர்வாகம் பாரத ஸ்டேட் வங்கியிடம் (எஸ்.பி.ஐ) டெபொசிட் செய்துள்ளது. இதன் மூலம் இந்த சிறப்பு வாய்ந்த இந்த மழைக் கோயிலுக்குச் சொந்தமாக இவ்வங்கியிடம் வைப்பில் உள்ள தங்கத்தின் அளவு சுமார் 5,000 கிலோ என்ற அளவீட்டை தாண்டி 6000 கிலோவை எட்டியுள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் எம்.ஜி.கோபால் இந்த தங்கத்தை எஸ்.பி.ஐ வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யாவிடம் தேவஸ்தான தலைமை அலுவலகத்தில் வைத்து ஒப்படைத்தார்.

(Read: Syndicate Bank shares slump 7 per cent as Chairman arrested for taking bribe)

1,800 கிலோ

1,800 கிலோ

கடந்த இரண்டாண்டு காலத்தில் இவ்வாறு ஒப்படைப்பது இது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. ஆதாவது இரு வருடத்திற்கு சுமார் 1,800 முதல் 2,000 கிலோ தங்கம் காணிக்கையாக கிடைக்கிறது என்பது இதன் பொருள்.

தங்க வைப்பு நிதி

தங்க வைப்பு நிதி

பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய இந்த தங்கம் எஸ்.பி.ஐ தங்கத்திட்டந்தின் கீழ் ஐந்து வருடத்திற்கு 1 சதவிகித வட்டியில் வங்கியிடம் வைக்கப்படும். இது ஒரு வருடத்திற்கு 12 கிலோ தங்கத்திற்கு சமம் என கோபால் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

திருப்பதி தேவஸ்தானம்

திருப்பதி தேவஸ்தானம்

"கடந்த இரண்டாண்டுகளாக ரிசர்வ் வங்கி விதித்திருந்த கட்டுப்பாடுகளினால் வங்கிகள் தங்கம் பெறுவதை நிறுத்தி வைத்திருந்ததினால் தேவஸ்தானம் தங்கத்தை வங்கிகளுக்கு அளிக்க வில்லை. பல வங்கிகளுடன் நடந்த பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு, எஸ்.பி.ஐ வங்கி வருடத்திற்கு ஒரு சதவிகித வட்டியில் இந்த தங்கத்தைப் பெற முன்வந்தது அதை நாங்கள் வரவேற்று ஏற்றுக் கொண்டோம்" என அவர் மேலும் தெரிவித்தார்.

அருந்ததி பட்டாச்சார்யா

அருந்ததி பட்டாச்சார்யா

ஸ்டேட் வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி பட்டாச்சார்யா அது குறித்து கூறிகையில் டெபொசிட் செய்யப்பட இந்த தங்கப் பரிவர்த்தனையில் நாட்டிலேயே மிகப்பெரியது என தெரிவித்தார்.

60 கிலோ லாபம்....

60 கிலோ லாபம்....

இதன் மூலம் தேவஸ்தானத்திற்கு வருடத்திற்கு 12 கிலோ சுத்தமான தங்கம் ஒவ்வொரு வருடமும் வட்டியாகக் கிடைப்பதுடன் ஐந்து வருடத்திற்கு 60 கிலோவாக அதிகரிக்கும் என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

காம்பவுண்டு டெப்பாசிட்

காம்பவுண்டு டெப்பாசிட்

2010 ஆம் ஆண்டு முதல் தங்க வைப்பில் இருக்கும் தங்கத்தின் மூலமாகக் கிடைத்த வட்டியும் மீண்டும் வைப்பில் வைக்கப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

6,135 கிலோ தங்கம்

6,135 கிலோ தங்கம்

தற்போது செய்யப்பட டெபாசிட் நீங்கலாக எஸ்.பி.ஐ, கார்பொரேஷன் வங்கி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியவற்றில் தேவஸ்தானத்திற்கு சொந்தமான சுமார் 4335 கிலோ தங்கம் வைப்பில் உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tirupati Tirumala mgmt deposits whopping 1,800 kg of gold with SBI

A whopping 1,800 kg of gold offerings made by devotees of Lord Venkateswara at the famous hill shrine at Tirumala was deposited with the State Bank of India (SBI), taking the total deposits made by it so far with various banks to more than 5,000 kg.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X