ஐடி.. புதிதாய் சேர்ந்தவர்களின் சம்பளம் கடந்த 6 வருடமாக உயரவில்லை!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: வாடிக்கையாளர்களின் குறைந்தபட்ச தேவைகள், பணியாளர்களை கசக்கிப் பிழிந்து வேலை வாங்கும் நிறுவனங்கள் மற்றும் தேவைக்கு அதிகமான சாப்ட்வேர் எஞ்சினியர்கள் போன்ற காரணங்களால், சுமார் 108 பில்லியன் டாலர் மத்திப்புடைய ஐ டி தொழில் துறையில் கடந்த ஆறு வருடங்களாக பிரஷ்ஷர்களின் சம்பளங்கள் அளவீடுகள் உயர்த்தப்படவில்லை.

 

பொதுவாக ஐடி துறையில் வேலைக்கு சேர்ந்து விட்டால் போது லைப் செட்டல் ஆகிவிட்டும் என் கருந்து உண்டு. ஆனால் உண்மையில் தற்போதைய நடைமுறையில் இது முற்றிலும் மாறுப்பட்டது எப்படி என்றால் "வேலை இருக்கும் வரை "ஜாலி", வேலை போன பிறகு காலி" எனபதே உண்மை.

(Read: 7 reasons why the SBI Magnum Equity Fund is a great buying opportunity)

ஆட்சேர்ப்பு

ஆட்சேர்ப்பு

குறைந்து வரும் வாடிக்கையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் செலவுக்குறைப்பு தொழில் நுட்பம் ஆகியவற்றை சரிகட்டி தொழிலைத் தொடர இந்த துறை நிறுவனங்கள் ஆள் சேர்ப்பை குறைத்துக்கொள்வதுடன் பணியாளர்களின் திறமையைக் கூட்டவும் முயன்று வருகின்றன.

வளர்ச்சி

வளர்ச்சி

நடப்பாண்டில் 13 முதல் 15 சதவிகித வளர்ச்சியை இந்தத் துறை எட்டும் என எதிர்பார்க்கப்பட்டாலும், பொறியியல் பட்டதாரிகளின் சம்பளம் வருடத்திற்கு 3 லட்சம் என்ற அளவில் நின்றுபோயுள்ளது.

பிரஷ்ஷர்ஸ்
 

பிரஷ்ஷர்ஸ்

"ஆறு வருடங்களுக்கு முன், ஐ டி துறை நிறுவனங்கள் 4 லட்சம் பொறியியல் பட்டதாரிகளில் 1.8 லட்சம் பேரை கல்லூரி கேம்பஸ் தேர்வுகள் மூலம் தேர்வு செய்தன. தற்போது அதே அளவு பட்டதாரிகளை 14 லட்சம் பேர்களிளிருந்து தேர்வு செய்யவேண்டிய கட்டாயத்திற்கு நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன என பணியாளர் தேர்வு நிறுவனமான டீம் லீஸ் சர்விசஸ் நிறுவன பொது மேலாளர் அல்கா திங்கரா பிசினஸ் லைன் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ஏன் இந்த நிலை...

ஏன் இந்த நிலை...

இன்றைய ஐடி நிறுவனங்கள் க்லௌட், அனலிடிக்ஸ், டிஜிட்டல் மற்றும் பிற புதிய தொழில்நுட்ப சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது, இதற்கு நிறைய திறமையும் குறைந்த ஆள் சேர்ப்பும் அவசியமாகிறது எனவும் அவர் தெரிவித்தார். இதனால் நிறுவனங்கள் தற்போது பிரஷ்ஷர்கள் அதிகளவில் சேர்ப்பதை விட பணியாளர்களின் திறனை மேம்படுத்துவதில் அதிகப்பிடியான கவனத்தை செலுத்தி வருகிறது.

சம்பளம்

சம்பளம்

இத்தகைய காரணங்களால் பிரஷ்ஷர்களின் சம்பளத்தில் கடந்த 6 வருடமாக எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை. மேலும் சம்பளத்தை உயர்த்தபடாத போது இத்துறையில் சேர பல பட்டதாரிகள் ஆர்வமுடன் இருக்கின்றனர் என்பதே நிசர்சனமான உண்மை.

விப்ரோ

விப்ரோ

விப்ரோ நிறுவனத்தின் 2014ஆம் ஆண்டில் வருவாய், எந்த ஒரு ஆள் சேர்ப்பும் இல்லாமல் வளர்ச்சியைக் கண்டது. அதே நேரம் சிலவருடங்களுக்கு முன் இந்த வளர்ச்சி பத்தாயிரம் பேரை சேர்த்தால் மட்டுமே சாத்தியமாக இருந்தது. விப்ரோ தன் பணியாளர்களின் திறமைககளை கூட்டியதன் மூலம் இது சாத்தியமானது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

உற்பத்தித் திறனில் கவனம்

உற்பத்தித் திறனில் கவனம்

ஐடி துறையில் உற்பத்தியைக் கூட்டுவதில் கடந்த ஆறு ஆண்டுகளில் இத்துறை நிறுவனங்கள் மேம்படுத்தப்பட்ட கவனத்தை செலுத்தி வருகிறது. இதில் பணியாளர் உபயோக விகிதங்கள் கடந்த ஜூன் மாத இறுதியில் 80 முதல் 85 சதவிகித அளவிற்கு உயர்த்தியது. இது இதற்கு முன்னர் 70 முதல் 72 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடதக்கது.

4 வருடங்கள்

4 வருடங்கள்

ஐடி துறையில் தொழிற்நுட்ப வளர்ச்சிக் காரணமாகவும், செலவீணத்ததை குறைக்கும் காரணமாகவும், நிறுவன வளர்ச்சியை கருத்தில் கொண்டு ஒவ்வொரு 4 வருடத்திலும் பணியாளர்களை நிறுவனத்தை விட்டு வெளியேற்றுவது வழக்கமாகி வருகிறது. இந்த நிலையில் அந்த நான்காவது வருடம் இந்த 2014ஆம் ஆண்டு எனவே இந்த வருடத்தின் முடிவிலோ அல்லது அடுத்த வருட துவக்கத்திலோ இத்தகைய நிலை வரும் என்பது உறுதி.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Why IT fresher salaries have remained stagnant

Flat customer demand, mining more work from employees and oversupply of software engineers have kept the salaries of freshers unchanged in the $108-billion IT industry for the last six years.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X